வெளியிடப்பட்ட நேரம்: 03-Jun-2019 , 06:49 AM

கடைசி தொடர்பு: 03-Jun-2019 , 06:49 AM

தினபலன் 03/06/2019

images (14)

☸மேஷம்:-

தாயின் உடல்நலனில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரணி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

☸ரிஷபம்:-

திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணிகளில் கவனமாக இருக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : வெற்றிகரமான நாள்.
ரோகிணி : மதிப்பு உயரும்.
மிருகசீரிடம் : சிந்தித்துச் செயல்படவும்.

☸மிதுனம்:-

எதிர்பாராத சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளின் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும். அலுவலகத்தில் திருப்தியான சூழல் அமையும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். காரியசித்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : தைரியம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : தனவரவு உண்டாகும்.

☸கடகம்:-

பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சக வியாபாரிகளின் மூலம் ஆதரவான சூழல் அமையும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : ஆதரவு பெருகும்.
ஆயில்யம் : தெளிவு கிடைக்கும்.

☸சிம்மம்:-

மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மகம் : அன்பு அதிகரிக்கும்.
பூரம் : குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

☸கன்னி:-

மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும், இலாபமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : உற்சாகமான நாள்.
அஸ்தம் : கலகலப்பான நாள்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.

☸துலாம்:-

மற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். செய்யும் செயல்களில் பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவடைய காலதாமதம் ஏற்படும். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.

☸விருச்சகம்:-

தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயமான சூழல் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். வர்த்தகம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். வெளியூர் பயண வாய்ப்புகளால் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : தனலாபம் கிடைக்கும்.
☸தனுசு:-

சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும். அவ்வப்போது மனதில் குழப்பம் தோன்றி மறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுக தொல்லைகள் விலகும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : குழப்பங்கள் நீங்கும்.
உத்திராடம் : ஆதாயம் கிடைக்கும்.

☸மகரம்:-

புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்
திருவோணம் : சுபிட்சமான நாள்.
அவிட்டம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.

☸கும்பம்:-

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சிலருக்கு ஆன்மீகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். புதிய காரியங்களில் ஈடுபடும்போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

☸மீனம்:-

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியத்தை பல தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக நிறைவடையும். பணியில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : இன்னல்கள் நீங்கும்.
ரேவதி : பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

Related Articles