வெளியிடப்பட்ட நேரம்: 07-May-2019 , 06:13 AM

கடைசி தொடர்பு: 07-May-2019 , 06:13 AM

தினப்பலன் 07/05/2019

images (14)

☸மேஷம்:-

உடல் ஆரோக்கியம் மேம்படும். வாசனைத் திரவிய தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அசுவினி : ஆரோக்கியம் மேம்படும்.
பரணி : மதிப்பு உயரும்.
கிருத்திகை : புதிய சிந்தனைகள் தோன்றும்.

☸ரிஷபம்:-

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். போட்டியில் எண்ணிய வெற்றி அமையும். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஜெயம் உண்டாகும்.

☸மிதுனம்:-

புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : பேச்சில் கவனம் தேவை.
திருவாதிரை : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

☸கடகம்:-

மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : உடன்பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

☸சிம்மம்:-

விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். சம வயதினரால் சாதகமான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். புதிய சிந்தனைகளும் அதனால் குழப்பமும் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : உடைமைகளில் கவனம் தேவை.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : குழப்பங்கள் தோன்றி மறையும்.

☸கன்னி:-

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் நிமிர்த்தமாக எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். சேமிப்பு அதிகரிக்கும். தலைமை அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.

☸துலாம்:-

சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். கூட்டாளிகளால் சில காரியத்தடங்கல்கள் உண்டாகும். சாஸ்திர அறிவு மேம்படும். கலைஞர்கள் சற்று கவனமாக செயல்பட்டால் தேவையற்ற அவச்சொற்களை தவிர்க்கலாம். வெளிநாட்டு பயணங்களால் சில மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.

☸விருச்சகம்:-

சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.

☸தனுசு:-

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்வீர்கள். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். நிலுவையில் இருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : ஒற்றுமை மேம்படும்.
பூராடம் : வாதத்திறமையால் இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

☸மகரம்:-

மனைவியால் சுப விரயங்கள் உண்டாகும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் அமையும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
திருவோணம் : நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள்.
அவிட்டம் : எண்ணங்கள் சாதகமாகும்.
☸கும்பம்:-

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சுயதொழில் முனைவதற்கான முயற்சிகள் கைக்கூடும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : காரியசித்தி உண்டாகும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
☸மீனம்:-

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சுயதொழில் முனைவதற்கான முயற்சிகள் கைக்கூடும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : காரியசித்தி உண்டாகும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

-ஜோதிடர் மணிய்யர்.

Related Articles