வெளியிடப்பட்ட நேரம்: 10-May-2019 , 09:08 AM

கடைசி தொடர்பு: 10-May-2019 , 09:08 AM

தினப்பலன் 10/05/2019

images (14)

☸மேஷம்:-

திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனம் வேண்டும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். திருமண வரன்கள் கைக்கூடி வரும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அசுவினி : அங்கீகாரம் கிடைக்கும்.
பரணி : லாபம் அதிகரிக்கும்.
கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.

☸ரிஷபம்:-

இணையதளம் சம்பந்தமான பணிகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் காலதாமதம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். பணி நிமிர்த்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : பொறுமை வேண்டும்.
ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.
மிருகசீரிடம் : மேன்மை உண்டாகும்.
☸மிதுனம்:-

தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். சந்தேக உணர்வினால் மனக்கசப்புகள் ஏற்படலாம். தொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகள் ஏற்படும். தொழிலில் சக பணியாளர்களிடம் நன்மதிப்புகள் பெருகும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : நன்மதிப்புகள் பெருகும்.
புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

☸கடகம்:-

கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். புதிய நபர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். திருமண வரன்கள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆயில்யம் : திருமண வரன்கள் கைக்கூடும்.

☸சிம்மம்:-

பூர்வீக சொத்துக்களால் சில விரயச் செலவுகள் நேரிடலாம். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். புதிய அணிகலன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பூமிவிருத்திக்கான செயல் திட்டங்களை உண்டாக்குவீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.

மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

☸கன்னி:-

கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் ஏற்படும். நிலம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : அறிமுகம் ஏற்படும்.
☸துலாம்:-

செய்யும் செயலில் திருப்திகரமான நிலை அமையும். உடன் பணிபுரியும் ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களினால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணியில் எதிர்பார்த்த சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : திருப்திகரமான நாள்.
சுவாதி : இடர்பாடுகள் நீங்கும்.
விசாகம் : பணவரவு உண்டாகும்.

☸விருச்சகம்:-

கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழிலில் புதிய நேர்த்தியான முடிவுகளால் மேன்மை அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : கவலைகள் நீங்கும்.

☸தனுசு:-

முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். மனதில் அஞ்ஞான எண்ணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : பேச்சில் நிதானம் தேவை.

☸மகரம்:-

பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். வருவாய் நிமிர்த்தமான எண்ணங்கள் மேலோங்கும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்தான வாய்ப்புகள் அமையும். அயல்நாட்டு பயணங்களில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : பொறுப்புகள் உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் அமையும்.
அவிட்டம் : சாதகமான நாள்.

☸கும்பம்:-

அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : தடைகள் அகலும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
☸மீனம்:-

செயல்படும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். ஆராய்ச்சி சம்பந்தமான தேடலில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

-மணிய்யர்

Related Articles