வெளியிடப்பட்ட நேரம்: 01-Dec-2018 , 08:47 AM

கடைசி தொடர்பு: 01-Dec-2018 , 09:32 AM

தினப்பலன் 1/12/2018

images (14)

☸மேஷம்:-

செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்கள் சார்ந்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : கவனம் வேண்டும்.
பரணி : புதிய மாற்றங்களை செய்வீர்கள்.
கிருத்திகை : அமைதி வேண்டும்.

☸ரிஷபம்:-

தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைக்கூடும். எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுபச் செயல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : பயணங்கள் கைக்கூடும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : புதிய நட்பு கிடைக்கும்.

☸மிதுனம்:-

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய முடிவுகளில் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. நிலுவையில் இருந்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகம் தொடர்பான செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
புனர்பூசம் : இடமாற்றம் உண்டாகலாம்.

☸கடகம்:-

பிள்ளைகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

புனர்பூசம் : கனிவுடன் நடந்து கொள்ளவும்.
பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.

☸சிம்மம்:-

உணர்ச்சி வசப்படாமல் விவேகத்துடன் செயல்படவும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் இலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.

☸கன்னி:-

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதப்போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். விருப்பமான இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.

☸துலாம்:-

வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் மத்தியில் புகழ் மற்றும் மதிப்பு உயரும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதிகள் பெருகும். உத்தியோகத்தில் தலைமை அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
சுவாதி : தீர்வு கிடைக்கும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.

☸விருச்சகம்:-

உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்புடைய பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை அகலும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : இழுபறி நிலை அகலும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.

☸தனுசு:-

தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆன்மீக பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
உத்திராடம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

☸மகரம்:-

விலையுயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த செயல்களை அலைந்து திரிந்து செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தரர்கள் பணிகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.

☸கும்பம்:-

குடும்ப வருமானத்தை அதிகரிக்க புதுவித முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம், பக்கம் வீட்டார்களின் ஆதரவுப் பெருகும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவாகப் பேசி காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்
சதயம் : ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

☸மீனம்:-

முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனத்திற்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையாட்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

- astro பகீரதன்

Related Articles