வெளியிடப்பட்ட நேரம்: 17-May-2019 , 07:39 AM

கடைசி தொடர்பு: 17-May-2019 , 07:39 AM

தினப்பலன் 17/05/2019

images (14)

☸மேஷம்:-

சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களுடன் செல்லும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். புதிய நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழலும் பாராட்டும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : நம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

☸ரிஷபம்:-

செய்யும் செயல்களில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடும்பொழுது சற்று நிதானத்துடன் செயல்படவும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். வேலையாட்களிடம் சற்று நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : மந்தத்தன்மை உண்டாகும்.
ரோகிணி : நிதானத்துடன் செயல்படவும்.
மிருகசீரிடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

☸மிதுனம் :-
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயில்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் சார்ந்த பணிகளில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்

☸கடகம்:-

உடன்பிறப்புகளால் அனுகூலமான சூழல் அமையும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். எதிர்பாலின மக்களால் நற்பலன்கள் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : நற்பலன்கள் உண்டாகும்.
ஆயில்யம் : சுபிட்சமான நாள்.

☸சிம்மம்:-

புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காது சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்யும் செயல்களால் பணிபுரியும் இடங்களில் இனிமையான சூழல் உண்டாகும். புதிய செயல்திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்த முயற்சி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : இனிமையான நாள்.

☸கன்னி:-

வாக்குவன்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளின் வேகம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயமான சூழல் உருவாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
அஸ்தம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

☸துலாம்:-

முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் செயல்களை கவனமாக செயல்படுத்தவும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்கி அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனக்குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : மாற்றமான நாள்.
விசாகம் : தெளிவு கிடைக்கும்.

☸விருச்சகம்:-

நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழில் துறையில் உங்களின் மரியாதை உயரும். விவாதங்களின் மூலம் மாற்றமான சூழலும், அனுகூலமான பலனும் கிடைக்கும்..

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அனுஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
கேட்டை : அனுகூலமான நாள்.

☸தனுசு:-

புதுவகையான தேடல் பிறக்கும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். அயல்நாட்டு பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : புதிய தேடல் பிறக்கும்.
பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

☸மகரம்:-

பிறருக்கு உதவும்போது சற்று கவனத்துடன் செயல்படவும். கொடுக்கல்-வாங்கலில் நிதானம் வேண்டும். போட்டித் தேர்வுகளில் பல தடைகளை தாண்டி எண்ணிய எண்ணத்தை செயல்படுத்துவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிதானமாக முடிவெடுக்கவும். பணிபுரியும் இடங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

☸கும்பம்:-

தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர் உண்டாகும். தலைமைப் பதவிக்கான முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் மரியாதை அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : நற்பெயர் உண்டாகும்.
சதயம் : தரிசனம் கிடைக்கும்.
பூரட்டாதி : மரியாதை அதிகரிக்கும்.

☸மீனம்:-

மனதிற்கு பிடித்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வாசனை திரவியங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சிறு தடைகள் தோன்றி மறையும். பெரியவர்களின் ஆலோசனைகள் முன்னேற்றமான சூழ்நிலையை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.
ரேவதி : தடைகள் அகலும்.

AD
AD

Related Articles