கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள்
வெளியிடப்பட்ட நேரம்: 22-May-2019 , 07:59 AM
கடைசி தொடர்பு: 22-May-2019 , 07:59 AM
Share
மேஷம்: திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அசுவினி : வாய்ப்புகள் அமையும். பரணி : தோற்றப்பொலிவு மேம்படும். கிருத்திகை : சாதகமான நாள். ☸ரிஷபம் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்ப விவகாரங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு ஏற்படும் மறதியால் பணியில் காலதாமதம் நேரிடலாம். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் கிருத்திகை : அமைதி வேண்டும். ரோகிணி : வாக்குறுதியை தவிர்க்கவும். மிருகசீரிடம் : அலைச்சல்கள் உண்டாகும். ☸மிதுனம்:- ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பேச்சில் நிதானம் வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் மிருகசீரிடம் : ஆசிகள் கிடைக்கும். திருவாதிரை : புதிய அனுபவம் கிடைக்கும். புனர்பூசம் : நிதானம் வேண்டும். ☸கடகம்:- வீடு மற்றும் வாகனத்தை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் புனர்பூசம் : விருப்பங்கள் நிறைவேறும். பூசம் : மதிப்பு அதிகரிக்கும். ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும். ☸சிம்மம்:- புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் உத்தியோகம் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சுயதொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மகம் : முயற்சிகள் ஈடேறும். பூரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். ☸கன்னி:- தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு செயல்படுவது நல்லது. பொருளாதாரம் சார்ந்த சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும். அஸ்தம் : புரிதல் உண்டாகும். சித்திரை : கவனம் வேண்டும். ☸துலாம்:- விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்கள் ஈடேறும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபமடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் சித்திரை : முயற்சிகள் மேம்படும். சுவாதி : காரியசித்தி உண்டாகும். விசாகம் : புதிய நட்பு கிடைக்கும். ☸விருச்சகம்:- கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் இலாபகரமான சூழல் அமையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : பிரச்சனைகள் நீங்கும். அனுஷம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும். ☸தனுசு:- வாக்குவன்மையால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகளை தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : பாராட்டப்படுவீர்கள். பூராடம் : பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்திராடம் : முன்னேற்றமான நாள். ☸மகரம்:- வியாபாரத்தில் புதிய வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான நிலை ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட கால நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். அரசு சம்பந்தமான காரியங்களில் இலாபம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : அனுகூலமான நாள். திருவோணம் : இலாபம் உண்டாகும். அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும். ☸கும்பம்:- பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் பணி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களுடன் விருந்து மற்றும் விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். சதயம் : வெற்றி கிடைக்கும். பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும். ☸மீனம்:- திட்டமிட்டு செயல்படுவது காலதாமதத்தை தவிர்க்கும். பணியின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் அமையும். முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பிரச்சனைகளின் மூலம் மனக்கவலை தோன்றி மறையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் பூரட்டாதி : திட்டமிட்டு செயல்படவும். உத்திரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும். ரேவதி : விவேகத்துடன் செயல்படவும்.