வெளியிடப்பட்ட நேரம்: 26-May-2019 , 05:40 AM

கடைசி தொடர்பு: 26-May-2019 , 05:40 AM

தினப்பலன் 26/05/2019

images (14)

☸மேஷம்:-

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வகை உறவுகளால் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : ஆதாயம் கிடைக்கும்.
பரணி : பிரச்சனைகள் நீங்கும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.

☸ரிஷபம்:-

நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணம் மாற்றமான சூழலை உருவாக்கும். சக ஊழியர்களிடம் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிடம் : இலாபம் அதிகரிக்கும்.

☸மிதுனம்:-

வழக்குகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : இன்னல்கள் நீங்கும்.
☸கடகம்:-

உடல்சோர்வால் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். பணியில் மேலதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : பயணங்களால் மாற்றம் உண்டாகும்.

☸சிம்மம்:-

எதிர்பார்த்த தனவரவுகளால் சாதகமான சூழல் அமையும். இணையதளம் தொடர்பான பணியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மகம் : தனவரவு மேம்படும்.
பூரம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

☸கன்னி:-

மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் பணியில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் சார்ந்த முடிவுகளில் நிதானம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : காலதாமதம் ஏற்படும்.
அஸ்தம் : உயர்வு உண்டாகும்.
சித்திரை : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

☸துலாம்:-

குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாக்குவன்மையால் இலாபகரமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சனைகள் சற்று குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

☸விருச்சகம்:-

பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நன்மை அளிக்கும். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் வேண்டும். மன தைரியம் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.

☸தனுசு:-

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழிலில் இருந்த இன்னல்கள் குறையும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.

☸மகரம்:-

வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
அவிட்டம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

☸கும்பம்:-

தொழில் சார்ந்த முயற்சிகள் மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணம் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த இலாபத்தை அடையலாம். கடன் சுமை குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : முயற்சிகள் மேலோங்கும்.
சதயம் : அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.

☸மீனம்:-

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும். கடல் சார்ந்த பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

Related Articles