கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள்
வெளியிடப்பட்ட நேரம்: 29-May-2019 , 06:51 AM
கடைசி தொடர்பு: 29-May-2019 , 06:51 AM
Share
☸மேஷம்:- புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் அசுவினி : மகிழ்ச்சி உண்டாகும். பரணி : முன்னேற்றமான நாள். கிருத்திகை : தெளிவு பிறக்கும். ☸ரிஷபம்:- கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். பிரபலங்களின் மூலம் ஆதாயமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் மதிப்பு உயரும். வாகனப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வேலைத் தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : உறவு மேம்படும். ரோகிணி : அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் : மதிப்பு உயரும். ☸மிதுனம்:- குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். திட்டமிட்டு பணிகளை செய்து முடிப்பீர்கள். கால்நடை வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : தனவரவு மேம்படும். புனர்பூசம் : மதிப்பு உயரும். ☸கடகம்:- புதிய நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். பொன், பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். பூசம் : இலாபகரமான நாள். ஆயில்யம் : பொருட்சேர்க்கை உண்டாகும் ☸சிம்மம்:- நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொதுக்கூட்ட பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் மகம் : விவாதங்களை தவிர்க்கவும். பூரம் : அமைதி வேண்டும். உத்திரம் : பலவிதமான சிந்தனைகள் தோன்றும். ☸கன்னி:- வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுப்பீர்கள். மனைவி வழி உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் உத்திரம் : பொருளாதாரம் மேம்படும். அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும். சித்திரை : புதிய திட்டங்களை வகுப்பீர்கள். ☸துலாம்:- பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். செய்தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். சக ஊழியர்களிடம் கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும். சுவாதி : புதிய முதலீடுகளை செய்வீர்கள். விசாகம் : வாய்ப்புகள் அமையும். ☸விருச்சகம்:- புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். அனுஷம் : மகிழ்ச்சியான நாள். கேட்டை : முன்னேற்றமான நாள். ☸தனுசு:- அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். காதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். பதற்றமின்றி செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மூலம் : மகிழ்ச்சியான சூழல் அமையும். பூராடம் : செல்வாக்கு உயரும். உத்திராடம் : பிரச்சனைகள் குறையும். ☸மகரம்:- சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவியில் மாற்றம் ஏற்படும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : கவலைகள் நீங்கும். திருவோணம் : நற்செய்திகள் கிடைக்கும். அவிட்டம் : புதிய வாய்ப்புகள் அமையும். ☸கும்பம்:- தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். குடும்ப நபர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் அவிட்டம் : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சதயம் : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பூரட்டாதி : தைரியத்துடன் செயல்படுவீர்கள். ☸மீனம்:- தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்து அதன் மூலம் இலாபம் அடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் பூரட்டாதி : மனச்சோர்வு உண்டாகும். உத்திரட்டாதி : தனவரவுகள் கிடைக்கும். ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்.