வெளியிடப்பட்ட நேரம்: 30-May-2019 , 07:24 AM

கடைசி தொடர்பு: 30-May-2019 , 07:24 AM

தினபலன் 30/05/2019

images (14)

☸மேஷம்:-

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் அலைச்சல்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும். சாஸ்திர அறிவில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். பணியில் புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.

☸ரிஷபம்:-

உறவினர்களின் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். சிறப்பான செயல்பாடுகளினால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : மதிப்பு உயரும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.

☸மிதுனம்:-

வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து தெளிவு பிறக்கும். வெளிநாடு சார்ந்த பயணங்களில் இருந்த தடைகள் அகலும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : தடைகள் அகலும்.
புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

☸கடகம்:-

நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : மாற்றம் பிறக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

☸சிம்மம்:-

மனதில் ஒருவிதமான மாற்றமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடம் கருத்துகளை பரிமாறும்போது கவனம் வேண்டும். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். பயணங்களால் எண்ணிய செயல்களில் காலதாமதம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : பதற்றமின்றி செயல்படவும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : பணிகளில் காலதாமதம் உண்டாகும்.
☸கன்னி:-

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தந்தையின் ஆதரவால் கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : கவலைகள் நீங்கும்.

☸துலாம்:-

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வான சூழல் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : உயர்வான நாள்.
சுவாதி : ஆசிகள் கிடைக்கும்.
விசாகம் : கவனம் தேவை

☸விருச்சகம்:-

குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : மனக்கசப்புகள் குறையும்.
அனுஷம் : பெருமைகள் உண்டாகும்.
கேட்டை : கவலைகள் நீங்கும்.
☸தனுசு:-

எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்புகள் அமையும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். மாணவர்களின் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : புகழ் அடைவீர்கள்.
☸மகரம்:-

உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

☸கும்பம்:-

உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தெளிவான சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : ஆரோக்கியம் சீராகும்.
சதயம் : திறமைகள் மேம்படும்.
பூரட்டாதி : திருப்தியான நாள்.

☸மீனம்:-

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய இலாபம் உண்டாகும். சுயதொழிலில் சுபமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.
ரேவதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.

Related Articles