வெளியிடப்பட்ட நேரம்: 31-May-2019 , 06:36 AM

கடைசி தொடர்பு: 31-May-2019 , 06:36 AM

தினபலன் 31/05/2019

images (14)

☸மேஷம்:-

கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களின் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். கலை சார்ந்த அறிவு மேம்படும். இறைவழிபாடுகளால் மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : மேன்மை உண்டாகும்.
பரணி : இடர்பாடுகள் நீங்கும்.
கிருத்திகை : இலாபம் கிடைக்கும்
☸ரிஷபம்:-

குறுகிய தூர பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பங்காளிகளின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிடம் : உதவி கிடைக்கும்.

☸மிதுனம்:-

நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். செய்யும் செயல்களால் உங்களின் செல்வாக்கு உயரும். நினைவாற்றல் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : வருமானம் அதிகரிக்கும்.
திருவாதிரை : புதிய சிந்தனைகள் தோன்றும்.
புனர்பூசம் : பாராட்டப்படுவீர்கள்.

☸கடகம்:-

தொழில் சம்பந்தமான பயணங்கள் சாதகமான பலனை அளிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். உடல் சோர்வும், மன அழுத்தமும் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : ஆதரவான சூழல் அமையும்.
ஆயில்யம் : மன அழுத்தம் குறையும்.

☸சிம்மம்:-

உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். புதிய நபர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
பூரம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : நுணுக்கங்களை பயில்வீர்கள்.

☸கன்னி:-

விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். கவனக்குறைவால் பிறரிடம் அவச்சொல் வாங்க நேரிடலாம். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். வீடு மனை தொடர்பான பராமரிப்பு செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : செலவுகள் நேரிடலாம்.

☸துலாம்:-

கூட்டாளிகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதுவிதமான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். மனைவிவழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். ஜாமின் கையெழுத்துகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
விசாகம் : புதிய உத்வேகம் உண்டாகும்.

☸விருச்சகம்:-

தனவரவில் ஏற்ற-இறக்கமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும். நண்பர்களின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். சுரங்க பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : சாதகமான நாள்.

☸தனுசு:-

பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். தனவரவுகள் மேம்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொதுநலப்பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : இன்னல்கள் நீங்கும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

☸மகரம்:-

வீட்டு பராமரிப்பிற்கான செலவுகள் ஏற்படலாம். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தொழிலில் இருந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் செயல்படவும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : பராமரிப்பு செலவுகள் நேரிடும்.
திருவோணம் : அமைதி வேண்டும்.
அவிட்டம் : புதிய அனுபவம் உண்டாகும்.

☸கும்பம்:-

மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியத்தில் காலதாமதம் உண்டாகும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : தடைகள் நேரிடலாம்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

☸மீனம்:-

வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். புதிய ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைக்கூடும். புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.
உத்திரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
ரேவதி : அனுகூலமான நாள்.

Related Articles