வெளியிடப்பட்ட நேரம்: 10-Dec-2018 , 07:24 AM

கடைசி தொடர்பு: 10-Dec-2018 , 07:25 AM

தினப்பலன் 10/12/2018

images (14)

☸மேஷம்:-

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். பழைய நினைவுகளால் மனக்கவலைகள் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : முன்னேற்றமான நாள்.
பரணி : தடைகள் நீங்கும்.
கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.

☸ரிஷபம்:-

மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறுவதற்கான சூழல் உண்டாகும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் நிறைவேறும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : அனுகூலமான நாள்.

☸மிதுனம்:-

குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் கவனத்துடன் இருக்கவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : நிதானத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
☸கடகம்:-

புத்திரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் செயல்படவும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமான பலனை அளிக்கும். அற காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : திறமைகள் வெளிப்படும்.
ஆயில்யம்.

☸சிம்மம்:-

வாகனங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய வீட்டுமனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
பூரம் : பொருளாதாரம் மேம்படும்.
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.

☸கன்னி:-

திட்டமிட்ட செயலை தைரியத்துடன் செயல்படுத்தவும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : செயலை தைரியத்துடன் செயல்படுத்தவும்.
அஸ்தம் : புதிய வாய்ப்புகள் அமையும்.
சித்திரை : சிந்தனைகள் தோன்றும்.

☸துலாம்:-

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : பயணங்கள் சாதகமாகும்.
விசாகம் : கலகலப்பான நாள்.

☸விருச்சகம்:-

எதிர்பாராத தனவரவு உண்டாகும். பெரியவர்களின் ஆதரவும், ஆசியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

விசாகம் : தனவரவு உண்டாகும்.
அனுஷம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.
கேட்டை : இன்னல்கள் குறையும்.
☸தனுசு:-

உழைப்பிற்கேற்ற உயர்வு கிடைப்பதில் காலதாமதமாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். சுயதொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் அமையும். தலைமை அதிகாரிகளிடம் நிதானத்துடன் இருக்கவும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : காலதாமதமாகும்.
பூராடம் : பயணங்கள் கைகூடும்.
உத்திராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

☸மகரம்:-

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது மேன்மை அளிக்கும். திருத்தல பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.
☸கும்பம்:-

சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : காரியசித்தி உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
☸மீனம்:-

வழக்கு தொடர்பான செயல்களில் எண்ணிய ஆதரவுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமான பலனை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : இலாபம் கிடைக்கும்.

-Astro பகீரதன்

 

Related Articles