வெளியிடப்பட்ட நேரம்: 19-Jul-2019 , 01:38 PM

கடைசி தொடர்பு: 19-Jul-2019 , 01:38 PM

வேலூர் வேட்பாளர்கள் மனு நிறுத்தம்

vellore

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலுக்கான, வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றுவரும் நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தன் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய நீதிக் கட்சியின் தலைவரும் அதிமுக வேட்பாளருமான ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நடந்தபோது, ஏ.சி.சண்முகம் புதிய நீதி கட்சி தலைவராக உள்ளார் என்றும், அவர் எப்படி அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஏசி சண்முகம் தரப்புக்கு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனால் அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தான் புதிய நீதிக்கட்சியின் தலைவராக இருந்தாலும் அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிடுவதாக எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளிக்கும் பட்சத்தில் அவருடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

ஏ.சி. சண்முகத்தின் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் மனுவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா விவகாரத்தில் கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகத்தின் நிறுவனர் காட்ஃப்ரி நோபல் (( GODFRY NOBEL )) என்பவர் தொடர்ந்த வழக்கு காரணமாக அவரது மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles