வெளியிடப்பட்ட நேரம்: 23-May-2019 , 07:21 AM

கடைசி தொடர்பு: 23-May-2019 , 07:21 AM

பதவியேற்ற நாளில் ஆட்சி முடியுமா? அதிமுக திக்..திக்...திக்

admk

தமிழகத்தில், 2016 சட்ட சபை தேர்தலில் அ.தி.மு.க., முதல் முறையாக 234 சட்டசபை தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் தி.மு.க., அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அவற்றை தவிடுபொடியாக்கி அ.தி.மு.க., வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.

2016 மே 19ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜெயலலிதா 2016 மே 23ல் ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவர் மறைவுக்கு பின் முதல்வர் பதவியில் இ.பி.எஸ். தொடர்கிறார். இந்த ஆட்சியின் ஆயுள் இடைத்தேர்தல் நடந்துள்ள 22 தொகுதிகளின் முடிவை பொறுத்தே அமையும்.

இந்நிலையில், 22 சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் 2016ல் ஜெ. முதல்வராக பதவியேற்ற அதே மே 23ம் தேதியான இன்று(மே 23) எண்ணப்படுகின்றன.

Related Articles