வெளியிடப்பட்ட நேரம்: 13-Oct-2018 , 09:53 AM

கடைசி தொடர்பு: 13-Oct-2018 , 09:53 AM

பரிதி இளம்வழுதி காலமானார்

images (14)

பரிதி இளம்வழுதியை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அதிமுக அமோக வெற்றிப் பெற்ற காலத்தில் ஒரே ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினராக சட்டசபையில் இருந்தவர். ஆளும் அரசுக்கு எதிராக பரிதியின் பேச்சு அன்றைய திமுக தலைவர் கலைஞரால் அபிமன்யூ என்றும் இந்திரஜித் என்றும் புகழப்பட்டார். விளைவு திமுக கட்சியின் துணை பொதுசெயலாளர் பதவி தேடி வந்தது.

தன்னுடைய 25ம் வயதில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவரின் அரசியல் பயணம் இன்று அதிகாலையுடன் முடிவுக்கு வந்தது. திடீர் மாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தார்.

தமிழக அரசு சட்டப்பேரவையின் துணை தலைவராகவும், செய்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். திமுக கட்சியில் தமிழ்க்குடிமகனுக்கு பிறகு கலைஞரே அதிர்ச்சியாகும் வண்ணம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் சேர்ந்த மறுநாளே தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். சமீபத்தில் டிடிவி தினகரன் அணியில் ஐக்கியமானார்.

தமிழக சட்டசபைக்கு 6முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 28ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 58 வயதான பரிதியின் மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles