வெளியிடப்பட்ட நேரம்: 17-May-2018 , 05:02 AM

கடைசி தொடர்பு: 17-May-2018 , 05:02 AM

பொய்க் கண்ணாடிகள் - 9

coin1

எங்கே சில்லறை???

இங்க பாருங்க சில்லறை கரெக்டா இருந்தா மட்டும் ஏறுங்க? ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு எல்லாம் சில்லறை இல்ல. இல்லனா இப்பவே பஸ்சுல ஏறாதீங்க.. பெரும்பாலும் லோக்கல் ஊர் பஸ்சுகளி்ல் கேட்கும் வசனம் தான். சரி பயணங்களில் பல்வேறுபட்ட இடங்களில் செல்லும் மக்களுக்கு ஒவ்வொரு விதமான கட்டணம் எனும் போது கண்டிப்பா அரசு பேருந்தோ (அ) தனியார் பேருந்தோ? நடத்துனர் முக்கியமாக வைத்திருக்க வேண்டியது டிக்கெட்டும் மாற்றிக் கொடுக்க சில்லறையும் தானே?. முதலிலேயே ஏற வேண்டாம் அவர் கடிந்துக் கொள்ளும் அளவிற்கு சில்லறைகள் இல்லை எனில் அப்போது "சில்லறைகள் எல்லாம் எங்கே தான் சென்றன?”.

பெரும்பாலும் பணத்தாள்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போய்  இன்று வேலை நிமித்தம் செல்லும் தினசரி பயணிகள் பாதுகாப்பது "சில்லறை ஒன்றை மட்டுமே".

"10 ரூ கொடுத்தால் 8ரூ டிக்கெட் என்றால் மீதம் 2ரூ சில்லறைக் கொடுக்கிறேன் இரும்மா "என்று நடத்துனர் சொன்னால், இறங்கும் வரை பரிதாபத்தோடு அவரையே பார்த்தால் மட்டுமே சில்லறை கைக்கு வரும்."அமைதியாக இருந்தால் அவசர அவசரமாக நம்மை இறக்குவதிலேயே நிறுத்தம் வந்துவிட்டது " என வாங்காமலேயே நம் காசு போகும்.

7ரூ டிக்கெட்டிற்கு 10ரூ கொடுத்தால் 2ரூ கொடுத்துவிட்டு 1ரூ சில்லறை இல்லம்மா இருங்க தரேன். அவ்வளவு தான் . நடத்துனர் கொடுத்தால் நாம் அதிர்ஷ்டசாலி. இல்லையென்றால் அதுவும் திரும்ப கிடைக்கக் கஷ்டம்தான். ஒரு இரண்டு முறை "அண்ணா சில்லறை எனக்கு தரணும்னா " என்றுக் கேட்டுவிட்டால் போதும் " ஏம்மா உன் காசு வச்சினு நா இன்னா பண்ண போறேன்? சில்லறை இருந்தா கொடுக்க மாட்டேனா?? இல்லாம ஏற வேண்டியது அப்புறம் எங்க உயிர வாங்க வேண்டியது என்ற நடத்துனரின் வசைப்பாடல் நமக்கே விழும். பல தடவை முட்டல் மோதல் நடக்கும் இந்த சில்லறைப் பிரச்சனைக்கே சில்லறைத் தனமா.

ஆனால் பல சமயம் நாமே பார்ப்போம் " நடத்துனர் பையைத் துழாவி துழாவி அவரே அந்தப் பைக்குள் சில்லறை இல்லாமல் அவதிப்படுவதை. ஆனால் எப்பிடியோ தட்டுத்தடுமாறி நமக்கு சேர வேண்டிய சில்லறைகளை கொடுத்துவிடும்  நடத்தனர்களும் உண்டு.

சரி வெறும் பேருந்தின் பயணத்தில் மட்டுமா இந்தப்பிரச்சனை?

வணிகமயமாக்கப்பட்ட வாழ்க்கையில் அன்றாடத் தேவைகள் பூர்த்திக் கொள்ளும் இடங்களிலும் இதே பிரச்சனை இல்லாமல் இல்லை . மெடிக்கல் ஷாப், மாளிகைகடை என இந்தப்பிரச்சனை வேறு மாறி  கையாளப்படும்.

இந்தம்மா  2 ரூ சில்லறை இல்லையென " இரண்டு 1 ரூ சாக்லேட்டுகள் எடுத்து வைப்பார்கள் பொருளின் பார்சலோடு " அது ஆசை சாக்லேட்டோ எக்ளர்ஸ்ஸோ இல்லை விக்ஸ் தொண்டை கரகரப்பு சாக்லேட்டோ இருக்கும். வேண்டாதனத்துக்கு நம் பையிலும் கொடுக்க வேண்டிய சில்லறை இல்லாததால் வேண்டா வெறுப்பாக எடுத்து பையில் திணிப்போம். இல்லை குழந்தைகள் கூட இருந்தால் அவர்கள் வாயில் திணித்து விடுவோம்.

அந்த ஒரு தரம் தான் இது போல என்று நாம் நினைக்கவே முடியாது. பல தடவை அதே சாக்லேட் திணிப்புகள் நடக்கும். "ஏங்க சாக்லேட் எல்லாம் வேணாங்க , நீங்க சில்லறை தாங்க என்று கேட்டால் 'இல்லம்மா வேணும்னா வேற எதுனா வாங்கிங்கோங்க என்பது பதிலாக வரும். ஆக வடிவேல் சார் காமெடி மாறி  அது அப்பப்ப சில்லறை வரும் வராதுனு 'கொடுக்கும் போது வாங்கிங்கணும்.

இந்த பிரச்சனையால் தானம் கேட்கும் இயலாதவர்களுக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போட்ட மனம் கூட இன்று போட வேண்டுமா?? என ஒரு நிமிடம் தடுமாறுகிறது.

ஏங்க சில்லறை வச்சிக்கங்க "அது இல்லாம அங்கங்க மாத்த கஷ்டபட முடியாதுனு ஒரு மனைவியின் அதட்டலில் எடுத்ததையும் உள் வைத்து விட்டார் அந்த கணவர்.

சரி ஆகப்பிரச்சனை இந்த சில்லறை தான். "சில்லறை தானே, இது போறதுனால என்ன? பெரிய சொத்தா போய்ட போகுது?? சொத்து போகாது. ஆனால் அந்நியன் பட கதை தான். ஐஞ்சஞ்சு காச 5000 தடவ 50,000 தடவ இல்ல 5,00000 திருடினா அது பெரிய சொத்து இழப்பு தானே?

வணிக சந்தையில் மக்கள் தேவைகளை மார்க்கெட் செய்பவர்கள் அவர்களுக்காக அனைத்து தேவைகளிலும் முன் நடவடிக்கையோடு இருக்க வேண்டும் அல்லவா? ஒரு முறை சாக்லேட் வாங்கினால் பராவயில்லை. ஒவ்வொரு முறையும் நாம் வாங்கினால் நாம் ஏமாளி தான். பல சமயம் இதே பிசினஸாக செய்கீறார்களா? என்று கூடத் தோணும்.

ஒவ்வொரு நாளில் ஒரு ஒரு  ரூபாய் நாம் இழந்தால் அது நஷ்டம் போல் தோணாது. ஆனால் அந்த ஒரு ரூபாயே ஒரு வருடத்திற்கு கணக்கு போட்டால் நமக்கு  இழப்பு தானே.?

பொதுமக்களிடமும் சில்லறை பற்றாக்குறை. வணிக இடங்களிலும் பற்றாக்குறை. அப்ப அரசின் சில்லறைகள் எங்கே தான் உள்ளன??

ஏமாளிகள் போல் அனைத்து இடங்களிலும் இன்னும் எத்தனை நாள் ஏமாறப் போகிறோம்.

வசதிப் படைத்தவர்களுக்கு எப்படியோ?ஆனால் நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு ஒரு ரூபாயும் பொக்கிஷம் தான். நாமே ஒரு ரூபாய் தானம் கொடுப்பதற்கும் ஒரு ரூபாய் சில்லறை இன்மையால் விட்டு வருவதற்கும் வித்தியாசம் உள்ளது. தாளின் மதிப்பு ஒருபுறம் என்றால் சி்ல்லறை மதிப்பும் அதே அளவு மறுபுறம்.

சில்லறை தானே என்று சில்லறையாய் யோசிக்காமல் " மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அரசும் வணிக இடங்களும்  அதிக அளவு இதற்காக முன் ஏற்பாடுகள் செய்வது நலம் தரும்.

’ஏ உஷா!  இந்தா 5 ரூபாய் நம்ம வாங்குற அந்த ஷாம்பூ வாங்கினு மி்ச்ச 1 ரூபாய் இல்ல சொன்னா, நீ சாக்லேட் எதுனா வாங்கிக்கோ”. இனி இந்த மாறி  வசனங்கள் கேட்கா நாடு வேண்டும்.

~சார்வி

https://kalakkaldreams.com/fake-mirror-part-8-by-charvi/

Related Articles