வெளியிடப்பட்ட நேரம்: 08-May-2019 , 11:10 AM

கடைசி தொடர்பு: 08-May-2019 , 11:10 AM

அயோக்யா வாங்கிய சான்றிதழ்

NTLRG_20190508105217974884


நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த நடிகர் விஷால் நடிப்பில் உருவான அயோக்யா படம், வரும் 10ல் ரிலீசாகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றாக யு/ஏ வழங்கப்பட்டுள்ளது.


நடிகர் விஷால் நடிப்பில் உருவான அயோக்யா படத்தில், கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அவர்களோடு பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணன், பூஜா தேவரியா, சோனியா அகவர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில் உருவான டெம்பர் படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் படம் அயோக்யா. இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ்., இசையமைத்திருக்கிறார்.


இந்தப் படம் ஏப்ரல் 19ல் ரிலீஸ் ஆகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், படம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போன நிலையில், வரும் 10ல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், ரிலீசாக இரு நாட்களே இருக்கும் நிலையில், நேற்று படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை துறை அதிகாரிகளும், உடனடியாக படத்தைப் பார்த்து, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதனால், படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது.


- ஆனந்த்Related Articles