வெளியிடப்பட்ட நேரம்: 10-Sep-2020 , 06:07 PM

கடைசி தொடர்பு: 10-Sep-2020 , 06:18 PM

காது கொடுத்து கேளுங்கள் - காயத்ரி

image_health_109

உலக தற்கொலை தடுப்பு தினம் :

செப்டம்பர் 10, 2003ம் ஆண்டு முதல் சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம் (The International Association for Suicide Prevention), உலக சுகாதார அமைப்பு ( World health Organisation) மற்றும் உலக மனநல கூட்டமைப்பு ( The World Federation for Mental Health) இணைந்து தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறது.

தற்கொலை எண்ணம் 15 வயதில் இருந்து 30 வயதில் இருப்பவர்களுக்கு அதிகமாக வருகிறது என சொல்கின்றனர்.
உலகம் முழுதும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

சூழ்நிலை பாதிப்பு மற்றும் சுய மரியாதை இது இரண்டும் தடுமாறும் போது மனிதனின் தற்கொலை எண்ணம் அதிகமாகிறது. மனசு விட்டு பேசினால் எங்கு சொல்லி காட்டி விடுவார்களோ?, இல்லை தன்னுடைய மதிப்பு பாதிக்க படுமோ? என யோசித்தே பலரும் பேச முன் வருவதில்லை. அதனால் 40 வினாடிக்கு ஒரு மனிதர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரச் செய்திகள் சொல்கிறது. அதுவும் இந்தியாவில் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் எனவும் சொல்கிறார்கள். இவர்கள் எல்லாருக்கும்
தகுந்த ஆலோசனை கிடைத்தால் பலரது தற்கொலையை தடுக்க முடியும்.

உலகில் ஆண்கள் தான் அதிகமா தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்றும், இந்தியாவில் பெண்கள் தான் அதிகமா தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்றும் ஒரு புள்ளி விவர செய்தி சொல்கிறது.

தற்போது உள்ள நிலையில் தற்கொலை செய்பவர்கள் பெரும்பாலோனோர் பூச்சி கொல்லி மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுக்கு மாடியின் உச்சியில் இருந்து அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர் எனவும் இதுவே டிரெண்ட் ஆகி வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதற்கு எல்லாம் தீர்வு என்ன என்றால் எல்லா மனிதர்களுக்கும் சுய கட்டுப்பாடு மிகவும் அத்தியாவசியமானது. எல்லா நேரமும் நல்லதும், சந்தோசமும் மட்டும் இருக்கும் என நினைக்க வேண்டாம். வாழ்க்கை எல்லாம் கலந்து தான் இருக்கும்.

தோல்வி, சுயபிம்பம் உடைவது, கடன் பிரச்சினை இவை எல்லாம் அந்தந்த நேரத்தில் உள்ள பிரச்சினைகள். அதை கடந்து செல்வதே நம் பக்குவத்தின் வெளிப்பாடு.

மனம் விட்டு பேச இப்பொழுது பல மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களை பற்றி தெரியாது. அதனால் உங்களை பற்றி மனம் விட்டு பேசலாம். பல பிரச்சனைகள் இவ்வளவு தானா? என்கிற உண்மை புரியும்.

தற்கொலை தடுக்க என்ன பண்ணலாம் என்றால் அவர்களது தின வாழ்க்கையில் மாற்றம் வந்தால் அதை சரி செய்ய வேண்டும். பசியின்மை, எதன் மீதும் பிடிப்பு இல்லாமல் இருப்பது, தனிமையில் இருப்பது, அதிகமா குடிப்பது என அவர்களை தனக்கு தானே ஒரு தண்டனை அளிப்பது போல் இருப்பார்கள். அதை உடனே மாற்ற வேண்டும்.

வாழ்க்கையில் நடந்த நிறைய நல்ல விசயங்களை பேச வேண்டும். அவங்க செய்த உதவிகள், வெற்றிகள் பற்றி பேச வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் குடும்பம், உறவுகள், நண்பர்கள் எல்லாருக்கும் உங்க இருப்பு ரொம்ப முக்கியம், அதை உணர வைக்க வேண்டும். உங்களை இழந்து யாரையும் வாழ்நாள் முழுக்க காயப்படுத்தி விட வேண்டாம் என்கிற உணர்வுடன் செயல்பட வேண்டும். உணர்ச்சி மிக்கவராக மாறாமல் அந்த நிமிடங்களை அமைதியாக கடந்து போக வழி செய்யுங்கள்.

தற்கொலை பற்றி யார் பேசினாலும் கொஞ்சம் உங்கள் காது கொடுத்து அவர்களை பேச விடுங்கள். தற்கொலையை தடுப்போம். தற்கொலையை தடுப்பது ஒவ்வொரு மனிதரின் சமூக கடமையாகும்.

-காயத்ரி M.S.W., PGDCG. (மனநல  ஆலோசகர்)

 

Related Articles