வெளியிடப்பட்ட நேரம்: 01-Aug-2020 , 07:48 AM

கடைசி தொடர்பு: 01-Aug-2020 , 07:48 AM

அவன் ஒரு சுழல் - பாகம் 13

cover

ஊஞ்சலில் எனக்கு பக்கத்தில் அமர்ந்தான். சொல்லியிருக்கிறேனா..? அவன் பக்கத்தில் வரும் போதெல்லாம் பனிக்காற்று வீசுகிறதென்று.....!!!!

உடல் சிலிர்த்து உறைந்து போய்விடும்படி குளிரெடுக்க தொடங்கிவிடும். இப்போதும் அப்படித்தான் குளிர தொடங்கியது. ஆனால் அவன் என் கைகளை பிடித்தான். இப்போது எனக்கு வியர்க்கிறது. இரசாயன மாற்றங்களால் இவ்வளவு சீக்கிரம் உடலின் வெப்பத்தை மாற்ற முடியுமா?

"தமிழ் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அது ஏன்னு தெரியல. இவ்ளோ சீக்கிரம் இதை சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்."

"உன்னையும் தான் எனக்கு பிடிச்சிருக்கு" மெல்லிய குரலில் சொல்லி முடிக்கையில் மீண்டும் அந்த அசுர முகம்.

அவன் கையிலிருந்து என் கையை விடுவித்துக் கொண்டு எழுந்தேன். மீண்டும் மீண்டும் ஏன் இப்படி என்னை என் மனம் எச்சரிக்கிறது.

" என்னாச்சு தமிழ். என்ன உங்களுக்கு பிடிக்கலையா? திடீர்னு இப்படி கேட்டிருக்க கூடாதில்ல. நான் ஒரு முட்டாள் இப்படி தான் என்ன தோணுதோ உடனே சொல்லிடுவேன்."

என் செயல் அவனை நிச்சயம் காயப்படுத்தி இருக்குமென நினைத்துக் கொண்டேன்.

"அதெல்லாம் இல்ல.... எனக்கும் உங்களை பிடிக்கும். ஆனா எனக்கு டைம் கொடுங்க. உங்களை மாதிரி டக்குன்னுலாம் என்னால முடிவெடுக்க முடியாது"

"ஓகே. ரிலாக்ஸ். நான் உங்களை பிடிச்சிருக்குன்னு தான் சொன்னேன். உங்க பதில் என்னவா வேணா இருக்கலாம். நான் உங்கள பார்த்த முதல் நாள்ல இருந்தே காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். உங்களுக்கும் என்மேல காதல் வந்தா கண்டிப்பா சொல்லுங்க"

"ம்..ம்..ம்.... நான் ரூம்க்கு போகட்டா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா நல்லா இருக்கும்ணு தோணுது" அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.

அவன நீ லவ் பண்ற மாதிரி இருந்துச்சு. அவன் லவ் சொல்றான். பதிலுக்கு ஆமா நானும் லவ் பண்றேன்னு சொல்லாம… என்ன பண்ற? நீ தெரிஞ்சு தான் பண்றியா?
என் மனசாட்சி கேள்விகள் கேட்டு கொன்றது.

"இல்ல திடீர்னு இப்படி சொன்னா எப்படி? எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல."

சமாளிக்காத. உனக்கு பயம். அவனும் உன்ன ஏமாத்திடுவானோனு. அதோட அது ஒரு கனவு. அந்த கனவையும் அவனையும் ஒப்பிட்டு பார்த்து நீ கன்ப்யூஸ் பண்ணிக்கிற.

"ம்...ம்...ம்..."

”நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்ட நீ.”

"என்னை குழப்பாத நீ. தனியா விடு ப்ளீஸ்."

போறேன் போறேன். மல்லிகா அவன் பொண்ணாட்டியா இருப்பாளோன்னு ஒரு சின்ன சந்தேகம், அதுக்கு நீ எவ்ளோ வருத்தப்பட்ட. அவ அவனை அண்ணான்னு கூப்பிட்டதும் எவ்ளோ சந்தோசபட்ட. மனசுக்குள்ள அவ்ளோ காதலை வச்சிட்டு உன்ன நீயே ஏமாத்திக்காத தமிழ்.

நல்ல வாய்ப்பை தவற விட்டுட்டோமோ…? மனம் அடித்துக் கொண்டது.

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=hes-a-spin-part-12-by-butterfly&i=10374

Related Articles