வெளியிடப்பட்ட நேரம்: 26-Aug-2020 , 08:05 AM

கடைசி தொடர்பு: 26-Aug-2020 , 08:05 AM

அவன் ஒரு சுழல் - பாகம் -21

cover

"சரி சாரி. என்ன விசயம்னு சொல்லுங்க தமிழ்."

"பரவாயில்லை விடுங்க பார்த்தி. உங்களுக்கு கேட்க விருப்பமில்லை போல."

"ஐயோ அப்படி இல்ல தமிழ். நீங்க சொல்லுற விதம் தான் அப்படி இருக்கு. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்ங்கிறது மாதிரி."

"எப்படி பார்த்தி சரியா சொல்லுறீங்க?"

"தமிழ். நான் அந்த படத்தில வர்ற மாதிரி இருக்கு நீங்க சொல்லுறதுன்னு சொன்னேன். "

"ஓஹ் அப்படி சொன்னீங்களா? ஆனா பார்த்தி நிஜமாவே நடுவுல கொஞ்சம் நேரத்தை காணல."

"நீங்க ப்ரபோஸ் பண்ண பிறகு நான் என்ன பதில் சொல்லுவோம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்புறம் ஞாபகம் வரும்போது அங்க யாருமே இல்ல, நாம மட்டும் தான் இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த எதுவுமே எனக்கு தெரியல. "

" ம்ம். கவனிச்சேன். ஆனா நீங்க ரொம்ப தீவிரமா கடலை வெறிச்சு பாத்துட்டு இருந்தீங்க. நீங்க இயற்கை அழகில மூழ்கி போய்டீங்களோன்னு நினச்சேன். "

" ஒரு மணி நேரம் இப்படி எதையாவது யோசிச்சிட்டு இருக்க முடியுமா? "

" தமிழ், இங்க பாருங்க. இதெல்லாம் ஒரு விசயமே இல்ல வீணா மனச போட்டு குழப்பிகாதீங்க. "

" இல்லைங்க. எனக்கு தலையில அடிபட்டதால ஏதோ ஆகிருச்சு."

அவனை பார்த்த போது அவன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான்.

" தமிழ், லூசு மாதிரி பேசாதீங்க."

" இப்படியே போனா நான் லூசாகிடுவேன் போல."

"இந்த மாதிரி தான் பேசுவீங்கன்னா, நீங்க பேசவே வேணாம். "

முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டேன். பொறுக்க முடியாமல் எனக்கு புரிய வைக்க விளக்கம் தந்தான்.

"நான் சொல்றத கவனமா கேளுங்க, காலையில நீங்க தூங்கி முழிக்கிறீங்க, ரொம்ப அசதியா இருக்கு ஒரு பத்து நிமிசம் கண்ண மூடி படுத்துக்குவோம் அப்புறம் எழுந்துக்கலாம்னு கண்ண மூடுறீங்க. மறுபடியும் திடீர்னு ஐயோ தூங்கிட்டோமேன்னு எழுந்து பார்த்தா இரண்டு மூணு மணி நேரம் கடந்து போய்ருக்கும். அது மாதிரி தான், பாட்டு கேட்கும் போது, ரொம்ப ஆர்வமா படம் பார்க்கும் போது நமக்கு நேரம் போறதே தெரியாது. "

" தமிழ் நீங்க புத்தகம் படிப்பீங்களா? "

" எப்போவாது படிப்பேன். ஏன் கேட்கறீங்க பார்த்தி. "

" புத்தகத்துக்குள்ள மூழ்கிட்ட இப்படி நேரம் காலம் தெரியாம நம்மை மறந்து இருப்போம். அந்த மாதிரி தான் நீங்க எதை எதையோ யோசிச்சிட்டு இருந்ததுல சுத்தி நடந்த எதுவும் உங்களுக்கு தெரியல."

" ம்ம் யோசிச்சு பார்த்தா சரி தான். ஆனாலும்… "

" நீங்க யோசனைல மூழ்கி போறதால, சுத்தி என்ன நடக்குது எவ்வளவு நேரம் போகுதுன்னு தெரியல. எதுவும் செய்யாம சும்மா இருந்தாலும் இப்படி ஆகும்." பார்த்தி சொல்லி முடித்தான்.

இப்படியே நாங்கள் பேசியபடியே ரெஸ்டாரென்ட் போய் சாப்பிட்டு வீட்டிற்கும் வந்துவிட்டோம்.

அவன் பேச்சை தவிர எங்கு போய் சாப்பிட்டோம், என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து போயிருந்தேன்.

அந்த அளவு பேசியே என்னை ஹிப்னோடைஸ் செய்து வைத்திருந்தான்.

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=hes-a-spin-part-20-by-butterfly&i=10578

 

Related Articles