வெளியிடப்பட்ட நேரம்: 29-Aug-2020 , 08:16 AM

கடைசி தொடர்பு: 29-Aug-2020 , 08:16 AM

அவன் ஒரு சுழல் - பாகம் - 22

cover

அடுத்த நாளில் இருந்து அவன் எனக்கு வேலை சொல்ல ஆரம்பித்திருந்தான்.

'தமிழ் ஒரு காஃபி போட்டுக் குடுங்களேன்.'

'தமிழ் அந்த நியூஸ் பேப்பர் எடுத்துக் குடுங்களேன்.'

'மல்லிகா சாப்பாடு ரொம்ப போரடிக்குது. நீங்க தான் நல்லா சமைப்பீங்களே. டின்னர் நீங்க ப்ரிப்பேர் பண்ணுறீங்களா.?'

என்ன இவன், காஃபி கப்ப கிச்சன்ல கொண்டு வைக்க போனாலே காச்மூச்னு கத்துவான். புதுசா ஆர்டர் போட்டுட்டு போறான். ஒரு வேள இப்படி வேல சொல்லியே பொண்ணாட்டி ஆக்கிரலாம்னு பாரக்குறானோ?. எனக்குள் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

சாயங்காலம் மல்லிகா சீக்கிரம் கிளம்பினாள். விஷ்ணு தாத்தா அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

"என்னம்மா சீக்கிரம் கிளம்பிட்ட. வேலை அதுக்குள்ள முடிஞ்சிருச்சா?"

"ஆமா தாத்தா. அந்த பொண்ணு சும்மாவே இருந்து ஏதோ யோசிச்சு என்னமோ ஆகுதாம். அதனால இன்னிக்கு ராத்திரி சாப்பாடு அவங்கள சமைக்க சொல்லு நீ சீக்கிரம் கிளம்புன்னு அண்ணா சொன்னாங்க."

"ஓ.. அப்படியாம்மா. சரி பார்த்து போய்ட்டு வா. "

அவர்கள் பேசியது எனக்கு கேட்டது. அவன் இரவு உணவு சமைக்க சொன்னதே அப்போது தான் ஞாபகம் வந்தது.

இதுதான் வேலை சொன்ன காரணமா? சரிதான் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன்.

அவனுக்காக சமைக்க போகிறோம். என்ன சமைக்கலாம் என்று யோசித்த படி அந்த அடுக்களை முழுக்க அலசி ஆராய்ந்து எனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டேன்.

எதுவும் ஸ்பெசலா சமைக்கலாம்னு போனா அங்க எதுவுமே இல்ல. கடைசியா தோசை, சட்னி, சாம்பாரோடு டின்னர் முடிந்து போனது.

சில நாட்கள் அப்படியே கடந்த போனது. அவன் அவ்வபோது எனக்கு சில டாஸ்க் கொடுப்பான். அடிக்கடி அதற்கு பரிசாய் எனக்கு சாக்லேடும் கொடுப்பான்.

என்னை குழந்தை போல நடத்துவதாய் எனக்கு பல நேரம் தோன்றும்.

அவனும் நானும் ஒரே வீட்டில் இருக்கிறோம். அவன் என்னை பற்றி என்னென்னவோ தெரிந்து வைத்திருக்கிறான்.

எனக்கு அவனது பெயரையும், சில குணங்களையும் தவிர அவனை பற்றி எதுவும் தெரியாது.

இன்னும் எனக்கு அவன் மூடிய புத்தகமே. இவ்வளவு பக்கத்தில் இருந்தும் நாங்கள் வெளிப்படையாக எதுவும் பேசிக் கொள்வதில்லை. பேசுவதெல்லாம் பொதுவான விசயங்களை தான்.

எனக்கு அதையெல்லாம் நினைக்கும் போது விசித்திரமாய் இருக்கும்.

காத்திருக்கும் பிரச்சனைகளை உணராமல், வாழ்க்கை நிம்மதியாய் அழகாய் நகர்ந்தது.

அன்று மதியம் பன்னிரண்டுமணி இருக்கும். பார்த்திபனிடம் இருந்து மூன்று மிஸ்ட் கால்கள். நான் அவனுக்கு மறுபடியும் போன் செய்தேன்.

"ஹலோ, பார்த்தி! கூப்பிட்டு இருந்தீங்களா? நான் குளிச்சிட்டு இருந்தேன்."

"தமிழ் நான் ஒரு ஃபைல மறந்து வீட்லயே வச்சிட்டு வந்திட்டேன்."
அவன் கொஞ்சம் அவசரமாய் பேசினான்.

"என் ப்ரண்ட் கிட்ட வீட்டுக்கு வந்து ஃபைல் வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன். ஃபைல் எடுத்து அவன்கிட்ட கொடுத்து விடுறீங்களா?"

"சரி எங்க இருக்குன்னு சொல்லுங்க?"

"மாடியில் என் ரூம்க்கு எதிர் ரூம்ல ஒரு பீரோ இருக்கு. அதோட லாக்கர்ல இருக்கு. சாவி பீரோ மேல இருக்கு. நீல கலர் பைல். எடுத்து கொடுத்து விடுங்க." அவன் போனை வைத்து விட்டான்.

நான் ஃபைல் எடுக்க மாடி ஏறினேன். என் கால் பெருவிரல் படிக்கட்டில் தட்டி வலி உயிர் போனது.

நொண்டியபடியே சென்று பீரோவை திறந்து, லாக்கருக்குள் இருந்த ஃபைலை எடுத்தேன்.

அங்கு பார்த்திபன் என்று தங்க நிறத்தில் எழுதப்பட்ட மெரூன் நிற டைரி என் கண்ணில் பட்டது..

அதை ஆர்வமாய் கையிலெடுத்து போது அதில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது….

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=hes-a-spin-part-21-by-butterfly&i=10593

 

Related Articles