வெளியிடப்பட்ட நேரம்: 10-Sep-2020 , 06:43 AM

கடைசி தொடர்பு: 10-Sep-2020 , 06:43 AM

அவன் ஒரு சுழல் - பாகம் 27

cover

அவன் என்னிடம், ’கொஞ்சம் பொறு. உனக்கு ஒண்ணு காட்டணும்’ எனச் சொல்லி விட்டு அவன் படுக்கை அறைக்குள் சென்றான். அங்கு உடைகள் வைத்திருந்த தனி அறையை திறந்தான்.

இந்த அறையிலிருந்து அந்த அறை தெளிவாக தெரிந்தது. அவன் துணிகளை விலக்கி விட்டு இன்னொரு கதவை திறந்தான்…

அங்கே பல வடிவங்களில், பல அளவுகளில் கத்திகள் மின்னிக் கொண்டிருந்தது. அவன் அதிலிருந்து ஒன்றை எடுத்தான்.

அது சின்ன கத்தி தான். கைப்பிடி வாளின் கைப்பிடி போல வளைந்து, வேலைபாடுகள் மிகுந்ததாய் இருந்தது.

அதன் கூர்மை தான் என் கண்களை இன்னும் விரிய செய்தது. ஆப்பிளின் முன்னால் கொண்டு சென்று வெட்டப் போகிறேன் என்று சொன்னாலே, ஆப்பிள் தானே தன்னை துண்டுகளாக்கி தற்கொலை செய்து கொள்ளும்.

இதோ அருகில் வருகிறான். கடைசி சில நிமிடங்கள் தான் வாழ்வில் மிச்சமிருக்கிறது.

அவன் நெருங்க நெருங்க என் உடல் வியர்வையில் நனைந்து கொண்டிருக்கிறது..

கண்களை இறுக்க மூடி, மரணிக்க தயாராகிறேன்.

கத்தியை கொண்டு என் கழுத்தை நெருங்கி விட்டான். "உனக்காகவே ஸ்பெஷலா சொல்லி செய்த கத்தி இது. பாத்தியா உன் பேரு கூட இதுல எழுதி இருக்கு. கண்ண திறந்து பாரு…."

கண்ணை திறந்து பார்த்த போது, அவன் கண்கள் சிவந்திருந்தது. முகத்தில் அப்படி ஒரு கொடூரம். அவன் உதடு மட்டும் பற்கள் தெரிய சிரிக்கிறது.

என்ன நினைத்தானோ கழுத்தில் சட்டென்று கத்தியை வைத்து அழுத்தினான்.

திடீரென்று தூரத்தில் கோயில் மணி சத்தம். அவன் கத்தியை தவற விட்டு காதுகளை பொத்திக் கொண்டான்.

"ஐயோ தமிழ் என்ன காப்பாத்து… ப்ளீஸ் என்ன காப்பாத்து."

இவனுக்கு என்னாச்சு....? என்னை கொல்ல வந்திட்டு இவன் ஏன் காப்பாத்த சொல்லுறான்.....?

காதுகளை பொத்துமளவிற்கு சத்தமாக இல்லையே. பக்கத்திலு எந்த கோயிலும் இல்லை. புதுசா இந்த சத்தம் எங்க இருந்து வருது.

கொஞ்சம் கொஞ்சமாக மணி சத்தம் என் செவிகளுக்குள் பெருஞ்சத்தமாக மாறியது.

"தமிழ்…. தமிழ்…." பார்த்திபனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து கொண்டிருந்தது.

சட்டென்று அத்தனையும் மறைந்து மயான அமைதி அவ்விடத்தை சூழ்ந்து கொண்டது.

கண்களை திறந்த போது மீண்டும் மணி அடித்தது. பார்த்தி வாசலுக்கு வெளியே தமிழ்… தமிழ் என்று கத்திக் கொண்டிருந்தான்.

என்ன நடந்தது கொஞ்சம் முன்னாடி… நடந்ததெல்லாம் கனவா???!!!

உடல் வியர்த்து உடை மொத்தமும் நனைந்து போயிருந்தது. கதவை நான் பூட்டியதாக நினைவே இல்லை.

கதவை திறந்தேன். "தமிழ் என்னாச்சு. உங்களுக்கு எதுவும் ஆகலையே. ரொம்ப நேரமா கதவு தட்டுறேன். ஏன் இப்படி வியர்த்திருக்கு?" கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். அவன் கண்களில் பரபரப்பு, அக்கறை, காதல் எல்லாம் தெளிவாக தெரிந்தது.

"ஒண்ணுமில்ல. தூங்கிட்டேன். மறந்து பேன் போடாம படுத்துட்டேன். "

"என்ன தமிழ். கதவை ஏன் உள்பக்கமா பூட்டினீங்க?"

" தெரியல. ஏதோ ஞாபகத்துல… "

" ஏதாவது பிரச்சினையா தமிழ்?"

"..."

நான் மறுபடியும் சோபாவில் அமர்ந்து கொண்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி அது கனவாக இருக்க முடியும். ஒரு வேளை ஏதும் மாயாஜாலமா? இருக்காது கனவு தான். ஆனால் பார்த்திபனின் முகம் என் கற்பனையில் இருப்பது போல இல்லை. அவன் மிக சாந்தமாக இருக்கிறான்.

அவனே காஃபி போட்டு, எனக்கும் எடுத்து வந்தான். "இப்போ ஓகே வா?. ஏதோ பிரச்சனைனு முகம் சொல்லுது. ஆனா நீங்க எதுவும் சொல்லல."

"ஒண்ணுமில்லைங்க. தூங்கி எழுந்தேன் அவ்வளவு தான்."

"சரி விருப்பமில்லைனா விடுங்க. காஃபி சாப்பிடுங்க. இன்னிக்கு ஆபிஸ்ல மீட்டிங் நல்லா போச்சு. என் ப்ரசென்டேஸன் சக்ஸஸ். கண்டிப்பா ப்ரோமோஷன் கிடைச்சிடும். சந்தோசமா இருக்கேன்."

கனவிலும் இதை தானே சொன்னான். இந்த முறை கொலைகார பூனை என்று அவனை கூப்பிட வில்லை.

காஃபி கப் காலி ஆனதும் அவன் மாடி ஏறி செல்கிறான். மாடியில் பொருட்கள் தூக்கி எறியும் சத்தம். டைரியை தேடுகிறானா? மாடியில் சென்று பார்ப்போமா??

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=hes-a-spin-part-26-by-butterfly&i=10657

Related Articles