வெளியிடப்பட்ட நேரம்: 18-Jul-2019 , 02:54 PM

கடைசி தொடர்பு: 18-Jul-2019 , 02:54 PM

நல்லக்கண்ணு இன்னும் வீடு ஒப்படைக்கவில்லை

nallakannu

மூத்த அரசியல்வாதி நல்லக்கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் வாடகை இல்லாத வீடு ஒதுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார்.


சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியது. அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர்.அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துறை நோட்டீஸ் விட்டதைத் தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் வெளியேறினார். அப்போதே அரசுக்கு 94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டித்து. தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இந்த நிலையில் சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் தீர்மானம் கொண்டு வந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவுக்கு புது வீடு ஒதுக்கப்பட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு ஒதுக்கப்பட்ட வீடு அவரது மறைவுக்கு பிறகு மனைவிக்கும், மனைவிக்கு பிறகு மகன்களுக்கும் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

நல்லகண்ணு அவர் வசித்த வீட்டை தாமாக முன்வந்து காலி செய்தபோதும், வீட்டுவசதி வாரியத்திடம் வீடு இன்னமும் ஒப்படைக்கவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

Related Articles