வெளியிடப்பட்ட நேரம்: 19-Oct-2020 , 08:35 AM

கடைசி தொடர்பு: 19-Oct-2020 , 08:37 AM

அவன் ஒரு சுழல் - பாகம் - 31

cover

திய சாப்பாட்டை நானும் ஸ்வேதாவுமாக செய்து முடித்தோம். கொஞ்சம் கொஞ்சம் அம்மாவோடு சமைத்த ஞாபகமும், சந்தேகங்களுக்கு ஸ்வேதா அம்மாவுக்கு போன் செய்தும், சிலதை யூடூப் ரெசிபி உதவியோடு ஒரு வழியாக சமைத்து மேசை மீது அடுக்கிவிட்டு ஆடை அலங்காரம் செய்து கொண்டு சிவாவிற்காக காத்திருந்தேன்.


அன்று சிவாவிற்கு பிடித்த பச்சை வண்ண பட்டுடுத்தி, தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி, நிறைய ஆசையும் கொஞ்சம் வெட்கமுமாய் வருங்கால கனவுகளோடு காத்திருந்தேன். என்ன தான் சிவா நான் காதலித்தவன் என்றாலும், அவன் பெற்றோர் எனக்கு மிகவும் பழக்கப்பட்டவர்கள் என்றாலும் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. நேரம் போனதே தெரியாமல் அமர்ந்திருந்தேன்.


"ஹே தமிழ் என்னா இன்னும் சிவாவ காணல? போன் பண்ணி பாரேன். மணி மூணு ஆகுது."


"சரி இரு போன் பண்றேன். ஏதாது வேலைலயோ ட்ராஃபிக்லயோ நிற்கிறாங்களா இருக்கும்."


"என்னாச்சு தமிழ் ஏன் ஒரு மாதிரி இருக்க. சிவா என்ன சொன்னார்?"


"அவன் போன் எடுக்கல ஸ்வேதா. கவலையா இருக்கு. "


" ஹே ஒண்ணும் இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் ட்ரை பண்ணு."


பலமுறை முயற்சித்தும் அவன் போன் எடுக்கவில்லை. என் மனதிற்குள் கவலையும் வருத்தமும் வந்து நிறைந்தது. அவன் தான் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்தான். இப்போ திடீர்னு என்னாச்சு? அவன் கண்டிப்பா என்ன ஏமாத்த மாட்டான்.


இருள் சூரியனை விழுங்கிக் கொண்டிருந்தது. என் வாழ்க்கையை விதி விழுங்குவது போல…


"சாரி தமிழ். கண்டிப்பா இந்த நிலைமைல நான் உன் கூட இருக்கணும். ஆனா அம்மா பத்தி உனக்கு தெரியும்ல. அவங்க நைட் வெளிய ஸ்டே பண்ண அலோ பண்ண மாட்டாங்க. சாரி டீ அம்மா இதோட பைவ் டைம்ஸ் கால் பண்ணிட்டாங்க. இப்போ நான் கிளம்பணும்."


"அதெல்லாம் பரவாயில்லை. நீ கிளம்பு. நான் பார்த்துக்கிறேன். வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு. ரொம்ப தேங்க்ஸ் ஸ்வேதா இவ்ளோ நேரம் எனக்கு ஹெல்ப் பண்ணது க்கு. "


"அதெல்லாம் ஒண்ணும் இல்ல தமிழ். நாளைக்கு அந்த சிவாவ லெப்ட் ரைட் வாங்குவோம். இப்போ எதுவும் யோசிக்காம சாப்டு தூங்கிடு. "


அவளும் கிளம்பிவிட்டாள். தனிமை மொத்தமாக சூழ்ந்து கொண்டது. சாப்பிட மனமில்லை. மெத்தையில் விழுந்தேன். மனம் சிவாவிற்கு என்ன நடந்திருக்கும் என்று பல கோணங்களில் பதில் தேடிக் கொண்டிருந்தது.


சில யோசனைகள் அவனை பலவாறு கொன்று போட்டிருந்தது. அப்படி இருக்குமோ என்று நினைக்கையில் நான் அழுதேன்.


சிலதில் அவனுக்கு மாமா மகளோடு திருமணம், சிலதில் அப்பாவின் வற்புறுத்தலோடு பணக்கார பெண்ணுடன் திருமணம், இந்த கற்பனைகள் அவன் மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.


கடைசியாய் வந்த கற்பனையில் ஏதோ அவசர வேலையாய் அவன் உடனடியாக விமானம் பிடித்து கடல் கடந்து பறக்கிறான்.


கற்பனைகள் எதுவும் எனக்கு சாதகமாக இல்லை. மீண்டும் அவனுக்கு போன் செய்தேன். போன் தற்சமயம் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாக வந்தது.


அழுவதா, ஆறுதல் கேட்பதா என்ன செய்வது. நெஞ்சம் பதறிக் கொண்டிருக்கிறது. என் உள்ளக்குமுறல் இறைவனுக்கு கேட்டிருக்கும் போல…


இரவு ஒன்பது மணிக்கு போன் ரிங்க் ஆனது. சிவா தான். "ஹலோ சிவா. ஆர் யூ ஓகே? நீ நல்லா தானே இருக்க? ஏன் நீ போன் எடுக்கல? அப்பா அம்மா நல்லா இருக்காங்களா? யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே?"


"ரிலாக்ஸ் தமிழ். நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். என் ப்ரெண்ட்க்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. அதனால தான் வர முடியல."


"நான் இங்க காத்து இருப்பேன்னு நியாபகம் இல்லையா சிவா. ஒரு போன் பண்ணி இருக்கலாமே. அங்க உன் ப்ரண்ட் ஆக்ஸிடெண்ட் ஆகி வலியில துடிக்கற மாதிரி தான் நானும் இங்க உனக்கு என்னாச்சோன்னு துடிச்சுட்டு இருக்கேன். "


" சிட்டிவேசன் தெரியாம பேசாத தமிழ் புரிஞ்சுக்க. "


"ம்ம்ம். நீ என்னையும் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு சிவா. "


"தமிழ் இங்க அவன் உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது உனக்கு போன் பண்ணி கொஞ்சிட்டு இருக்க சொல்றியா? "


"ஐயோ இல்ல சிவா. இன்பார்ம் பண்ணி இருக்கலாம்னு தான் சொல்றேன். "


"தமிழ் உன்கிட்ட இன்னொரு விசயம் சொல்லணும். "


"சொல்லு சிவா… "


"என் ப்ரெண்ட் இறந்துட்டான். "


"ஐயோ என்ன சொல்ற சிவா. சாரிப்பா இது தெரியாம நான் என்னலாமோ பேசிட்டேன். "


"ம்ம். அவனுக்கு அப்பா அம்மா இல்ல. ஒரு தங்கச்சி தான். அவளுக்கு வேற யாரும் இல்ல. "


"நாம எல்லாரும் இருக்கோம்னு தைரியம் சொல்லு. நாம அவங்கள பாத்துக்கலாம். என்ன வயசாகுது அந்த பொண்ணுக்கு? "


"ம்ம். தமிழ் நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என் ப்ரெண்ட்க்கு சத்தியம் பண்ணிட்டேன். "


"சிவா….. "


-வண்ணத்துப்பூச்சி


முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

Related Articles