வெளியிடப்பட்ட நேரம்: 24-Oct-2018 , 07:17 AM

கடைசி தொடர்பு: 24-Oct-2018 , 07:18 AM

தூங்கினால் பணம்

images (6)

தினமும் ஆறு மணி நேரம் தூங்கினால் மாதம் 48000 பெறலாம். இந்த பணத்தை நீங்கள் பணமாகவோ, உணவு பொருட்களாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அறிவிப்பு இங்கு இல்லீங்க. ஜப்பான் நாட்டில் தான். ஜப்பானில் திருமணங்கள் நடத்தி வைக்கும் கிரேஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் தன் ஊழியர்களுக்கு இத்தகைய சலுகையை வழங்கியுள்ளது. வாரத்தின் 5 நாட்களில் இரவு நேரங்களில் 6மணி நேரம் தூங்கினால் 700யென், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 48000 பெறலாம். தூக்கத்தை அளக்க பிரத்யோக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர தண்ணீர் குடிக்க, உணவு உட்கொள்ள, நடைப்பெயர்ச்சி, யோகா என அனைத்திற்கும் தனி தனி செயலிகள் உண்டு. தனித்தனி பரிசுகள் உண்டு.

மதிய உணவிற்கு பிறகு முப்பது நிமிடங்கள் தூங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதிய உறக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுவதாகவும், மனதளவில் உற்சாகமாக இருப்பதாகவும் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வின்படி ஜப்பானில் இரவில் உறங்காமல் சில ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து இத்தகைய சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது.

-ஸ்ரீவித்யா

Related Articles