வெளியிடப்பட்ட நேரம்: 26-Apr-2018 , 03:19 PM

கடைசி தொடர்பு: 26-Apr-2018 , 03:20 PM

அறிவுசார் தினம் -2018

IMG-20180426-WA0029

அறிவுசார் சொத்துரிமை என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், வணிகச் சின்னங்கள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புக்களின் உரிமை பற்றியதாகும். பொதுவாக படைப்பாளிக்கு அல்லது படைப்பை ஆக்கும் நிறுவனத்துக்கு அந்த படைப்பின் சொத்துரிமை சேரும்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சொத்துரிமை உள்ளோரின் அனுமதி இன்றி இவற்றை பிறர் பயன்படுத்த முடியாது. பொதுவாக உலக அளவில் அங்கீகரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமைகளில் பதிப்புரிமை, வணிகச் சின்னம், படைப்புரிமம், புவிசார் குறியீடு, வணிக இரகசியம் ஆகியவையும் அடங்கும்.

புவிசார் குறியீடுகளும் இந்த சொத்துரிமையின் கீழ் வருவன. இந்தியாவில் மதுரை மல்லி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, திருப்பதி லட்டு போன்றவை புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.

அறிவுசார்சொத்துரிமையின் ஒரு மிகமுக்கியமான பிரிவு பேடன்ட் என்று அழைக்கப்படும் புத்தாக்க உரிமையாகும். புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய கண்டு பிடிப்பை நிகழ்த்தும் ஒருவருக்கு அதற்கான அங்கீகாரத்தையும், பொருளியல் ரீதியான பலனையும் கொடுப்பதன் மூலம் மென்மேலும் கண்டுபிடிப்புகள் நிகழும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த பேடன்ட் உரிமை உருவாக்கப்பட்டது.

வரலாறு:

இடைக்கால ஐரோப்பாவில்(Medievel Europe) அரசர்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் திறந்த கடிதத்தின் மூலம்(Literate patents-open letters) பிரத்தியேகமான உரிமை கொடுக்கப்பட்டது. அதுபோல 1200களில் வெனீசியன் நகர மாநிலம் (Venetiala City State) பட்டு உற்பத்தியில் புதுமையைப் புகுத்தியவர்களுக்கு 10 வருட தனி உரிமை வழங்கியது. 1449 ஆம் ஆண்டில் உத்யானம் ஜானுக்கு (John of Utyanam) கண்ணாடி செய்யும் முறைக்கு 20 வருட தனி உரிமை இங்கிலாந்தில் வழங்கப்பட்டது. அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் சூரியனுக்குக் கீழே உள்ள எந்த ஒரு புதுப்பொருள்/ முறைக்கும் காப்புரிமை வழங்கப்படும்.

இந்தியாவில் காப்புரிமை சம்பந்தப்பட்ட முதல் சட்டம் 1856ம் ஆண்டு (Act VI of 1856) இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின் குறிக்கோள் புதுக் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதற்கும், கண்டுபிடிப்பாளர்கள் அவர்களது கண்டுபிடிப்பின் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்குமாக அமைந்தது. மேலும் இச்சட்டத்தில்1857 (Act IX of 1857), 1859 (Act XV of 1859) சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

1911ம் ஆண்டு (Act 11 of 1911) இந்திய காப்புரிமை மற்றும் வடிவமைப்பு சட்டம், 1911 இயற்றப்பட்டது.
இது இதற்கு முன்னர் இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் ¨’replace’ செய்தது. இந்தச் சட்டம் காப்புரிமை நிர்வாகத்தை காப்புரிமை கட்டுப்பாட்டாளரின் (Controller of Patent) கீழ் கொண்டு வந்தது. மேலும் 1920, 1930 மற்றும் 1945 ஆண்டுகளில் இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

1957ம் ஆண்டு இந்திய அரசு காப்புரிமை சட்டங்களைச் சீர்திருத்த, நீதியரசர் N..இராஜகோபால் ஐயங்கார் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்து, அதன் பரிந்துரைகளின் படி காப்புரிமை சட்டம், 1970 (Patent Act 1970) உருவானது.

பின்னர் 2004, 1972ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1999, 2002 மற்றும் 2005ல் சில சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

1994ம் ஆண்டில் வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைக்கான பன்னாட்டு ஒப்பந்தம் [[Agreement on Trade Related Aspects of Intellectual Property Rights (TRIPS)])] கையெழுத்தானதைத் தொடர்ந்து உலக வர்த்தகத்தின் போக்கே திசை மாறியது.

பன்னாட்டு கழகங்கள் / உடன்படிக்கைகள் / கூட்டங்கள்
பன்னாட்டு அறிவுசார் சொத்து உரிமைகளைக் கண்காணிப்பதில் கீழ்க்கண்ட இரு அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

1) உலக அறிவுசார் சொத்துரிமைகள் கழகம் (விப்போ) (World Intellectual Property Organizaion - WIPO)

2. வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துகளின் உரிமை (டிரிப்ஸ் )(Trade Related Intellectual Property Rights - TRIPS)

உலக வர்த்தக அமைப்பின் கீழ், 1993ம் ஆண்டு சுங்கவரி மற்றும் வாணிபம் குறித்த பொது உடன்பாடு உருகுவே சுற்றுப் பேச்சுக்களில், வர்த்தக தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது எல்லா WTO உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். மேலும் சட்டங்களை அமலாக்குவதிலும் இவ்வுடன்படிக்கை மிகவும் பலம் வாய்ந்தது. மேலும் விப்போ மற்றும் WTO இடையே 1996ம் ஆண்டு உடன்படிக்கை ஏற்பட்டது.

இதன்படி சட்ட, தொழில்நுட்ப விஷயங்களில் இரண்டு கழகங்களும் ஒத்துழைப்புடன் செயல்படும்.

பகுதி III ன் கீழ், அறிவுசார் சொத்துரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1) பதிப்புரிமை மற்றும் தொடர்புடைய உரிமைகள் (ஆர்ட்டிக்கிள் 914)
2) வர்த்தக சின்னம் (ஆர்ட்டிகிள் 1521)
3) புவிசார் குறியீடு (ஆர்ட்டிகிள் 2224)
4) தொழில் சார்ந்த வடிவமைப்பு (ஆர்ட்டிகிள் 2526)
5) காப்புரிமை (ஆர்ட்டிகிள் 2734)
6) ஒன்றிணைக்கும் சுற்றின் உருவறை (ஆர்ட்டிகிள் 3538)

அறிவுசார் சொத்துரிமைகள் காப்புரிமை(Patent)
காப்புரிமை என்பது அரசால் கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும் சட்ட உரிமைப் பத்திரம் ஆகும். இந்த உரிமை ஒரு குறிபிட்ட கால அளவுக்கு வழங்கப்படுகிறது. இந்த உரிமை பெறுவதற்குக் கண்டுபிடிப்பின் இரகசியத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். இந்த உரிமையின் மூலம் கண்டுபிடிப்பாளரின் அனுமதியில்லாமல் அக்கண்டுபிடிப்பை/ கண்டுபிடிப்பு முறையை செய்யவோ, உபயோகப்படுத்தவோ, விற்கவோ, விற்பனைக்கு வழி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ பிறரால் முடியாது.

இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 26 ந்தேதி அறிவு சார் சொத்துரிமை தினமாக WIPO அமைப்பால் கொண்டாடப்படுகின்றது.

இந்த வருட கொண்டாட்டத்திற்கான மையக் கருத்து, பெண்களின் புதுமையான எண்ணங்களையும் படைப்பாற்றல் திறமையையும் வெளிக்கொணர்ந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.

இது மூலம் பாலின வேறுபாடு இன்றி படைப்பாற்றல் உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை வலியுறுத்தி வருகின்றது. நாமும் நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் படைப்பாற்றல் திறமையை வெளிக் கொணர்ந்து போற்றுவதின் மூலம் இந்த தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவதின் மகிழ்ச்சியை அடையலாம்.

- வினோ

Related Articles