வெளியிடப்பட்ட நேரம்: 13-Aug-2020 , 07:40 AM

கடைசி தொடர்பு: 13-Aug-2020 , 07:40 AM

கைலாசா புது நாடு - பரபரப்பு தகவல்

kailasa

உள்ளூரில் பேமசாக இருந்த நித்யானந்தா இப்போது உலக பேமசாகிவிட்டார். உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்த தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர்.

ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவரோ, எங்கோ இருந்தப்படி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. எனினும், தினமும் வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டே இருந்தார் நித்யானந்தா. ஆனால் இதற்கு ஈக்வேடார் நாடு மறுப்பு தெரிவித்திருந்தாலும் கைலாசா நாடு குறித்து தினமும் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இது குறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடும் வகையில் எதையும் கண்டறியவில்லை. ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் நித்தியானந்தாவைத் தேடி வரும் நிலையில், செய்திகளுக்குப் பேட்டி அளிப்பது, வீடியோக்கள் வெளியிடுவது, கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்த சூழலில் இப்போது கைலாசாவின் கரண்சி தயார் எனக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி, “விநாயகர் சதுர்த்து தினத்தன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலா பணம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும். வாடிகன் பேங்கை மையமாக வைத்து இந்த ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா செயல்படும். வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு எனத் தனியாக ஒரு பணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 300 பக்கத்தில் நாட்டின் பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது” எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நித்தியானந்தாவைக் கைது செய்ய அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலை, மோசடி, பாலியல் என பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நித்தியானந்தா இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று தனியாக ஒரு நாட்டையே பணத்தால் உருவாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Related Articles