வெளியிடப்பட்ட நேரம்: 08-May-2019 , 02:45 PM

கடைசி தொடர்பு: 08-May-2019 , 02:45 PM

கனவுலவாசி பாகம்-2

இப்போது அவளை திரும்பி பார்ப்பதா? இல்லை முன்னோக்கி செல்வதா? பெருங்குழப்பத்தோடு அடுத்த அடி வைப்பதற்குள்..

Mr.வினோத்..!! நில்லுங்க!

சுதாரித்து திரும்பினேன்..

இருட்டிலிருந்து கொஞ்ச கொஞ்சமாய் வெளிப்பட்டுக்கொண்டே வந்தாள் அவள்.கையில் Silver Polished ரிவால்வர். சுட்டால் உடனடி மரணம் சர்வ நிச்சயம். ஏனெனில் அவள் வைத்திருந்த துப்பாக்கி அஸ்ட்ரா 680 மாடல். வெளிச்சத்தில் அவளே அல்டரா மாடல் போல இருந்தது வேறு விஷயம்.

நீங்க??

ஐ ஆம் வசுந்தரா . C.I.O Crime Branch. உங்க பேரு எனக்கெப்படி தெரியும், நான் ஏன் "அந்த மாதிரி" வேஷத்துல நின்னேன், இப்படிலாம் முட்டாள்தனமா யோசிச்சுட்டு இருக்காதீங்க. இந்த ஊர், இங்க வர்றவங்க போறவங்க எல்லாமே எங்க Surveillance-க்கு கீழ.. ஆனா சமீப காலமா, இங்க வர்ற ஆண்கள் மட்டும் காணாம போயிடுறாங்க. Well, இங்க இருக்கற ஆண்களும் சேர்த்துதான்.

மிஸ்.. வ ..

வசுந்தரா.

ஆஹ்ஹ் அதான்..முதல்ல உங்க தைரியத்துக்கு பெரிய சபாஷ். ஒரு அழகான பொண்ணு நடு ராத்திரில அதுவும் தனியா...

நிறுத்துறீங்களா? பெண்ணியம் Type-ல புகழறதா இருந்தா அதுக்கு நான் ஆள் கிடையாது. பெண்கள் எப்பவோ தைரியக்கோட்டை தாண்டி வெளியே வந்தாச்சுனு நினைக்கிறவ நான்..இல்ல, Flirt பண்ணனும்னு நெனச்சா, ஞாபகம் இருக்கட்டும்...நான் போலீஸ்.

ஐயோ சத்தியமா பாராட்டத்தான் நெனச்சேன்.சரி விடுங்க.. நான் கிளம்பலாமா?

மன்னிக்கணும் வினோத். நீங்க உள்ள போகறதை அனுமதிக்க முடியாது..

மிஸ்.வசுந்தரா..நீங்க உங்க பார்வையில இந்த கேஸை டீல் பண்றீங்க. குட். ஆனா ஒரு வக்கீலா என்னுடைய கேஸை நான் அப்டியே விட்டுட்டு போயிற முடியாது. உங்களுக்கு நான் எந்த தொந்தரவும் தரப்போறதில்ல..Infact, உங்களுக்கு உதவியா கூட இருக்கலாம்.

புரியுது. ஆனா பிரச்சனை என்னன்னா, இதுவரைக்கும் 17 பேரு காணாம போயிருக்காங்க. எல்லாமே Stereo Type. நடு இரவில். குறைந்த பட்சம் உங்க பாதுகாப்புக்காவது நீங்க விடிஞ்ச பிறகு ஊருக்குள்ள போறது நல்லதுன்னு நெனக்கிறேன்...

ஆனா அதுவரைக்கும்..நான்..

பிரச்சனை இல்ல..என்னுடைய Camp-ல தூங்கிக்கங்க..விடிஞ்ச பிறகு தாராளமா நீங்க கெளம்பி போகலாம். பாதுகாப்புக்கு நானும், என்னுடைய Gun-னும் இருக்கோம்.

Gun கொண்டு
பிறரையும்- உன்
கண் கொண்டு
என்னையும்-
மாய்ப்பாயோ??

அப்படினு கவிதை தோணினாலும், சொல்றதுக்கான நேரமும் இடமும் இது இல்லைனு அவ பின்னாடியே கிளம்பினேன்..

துப்பாக்கியை தன்னோட சேலை கொசுவத்தில் Insert செய்துவிட்டு (சொருகிகிட்டு என்று சொல்ல ஏதோ மனம் தடுக்கிறது) அவள் முன்னே நடக்கிறாள்..

ஹ்ம்ம்...கொடுத்து வைத்த துப்பாக்கி...

-பா. அரவிந்த்
முந்தைய பகுதியை வாசிக்க இந்த சுட்டியை சொடுக்கவும்: https://kalakkaldreams.com/article.php?a=kanavulagavasi-part-1-by-raji-2&i=9146

Related Articles