வெளியிடப்பட்ட நேரம்: 08-May-2019 , 03:41 PM

கடைசி தொடர்பு: 08-May-2019 , 03:41 PM

கனவுலகவாசி பாகம்-8

கார் கதவினைத் திறந்ததும் நிம்மி பள்ளியை ஒட்டிய காட்டுப்பகுதிக்குள் ஓடியது.

ஏதோ ப்ராப்ளம் கவி என்றவாறே வசுந்தராவும் கவிதாவும் நிம்மியைப் பின்தொடர்ந்தார்கள். ஆனால் வினோத் அங்கேயே நின்று பள்ளியை நோட்டமிட்டான்.

பெரிய மைதானத்தின் நடுவே சில கட்டிடங்கள். அதில் இரண்டு மட்டும் ஓடுபோட்ட பழைய கட்டிடங்கள். வினோத் தன் பாக்கெட்டில் வைத்திருந்த மார்க்கரால் ஒரு நட்சத்திர குறியையும் அதனருகில் நிம்மி சென்ற திசையை நோக்கி ஒரு அம்புக்குறியையும் வரைந்து விட்டுஅவர்கள் சென்ற திசையில் நடந்தான்.

இதமான காற்றும் பறவைகளின் பாடல்களும் பூச்சிகளின் ரீங்காரமும் மனதிற்கு இனிமையாய் இருந்தாலும் அவனது மனம் எதிலும் லயிக்கவில்லை. ஐந்து நிமிடம் நடந்தபின் நிம்மியின் சத்தமும் அதைத் தொடர்ந்து மனிதர்களின் பேச்சுக்குரலும் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கிய வினோத்தின் பார்வையில் புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற மிகப்பெரிய கட்டிடம் தென்பட்டது. அதன்முன்பு கவிதா வசுந்தரா மற்றும் இரு ஆண்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

வினோத்தை கண்ட கவிதா, மிஸ்டர் வினோத் இவர் தான் எங்க அப்பா மாணிக்கம் இந்த ஊர் நாட்டாமை. இவர் மிஸ்டர் முகிலன். லாபாகேர் இண்டஸ்ட்ரி யோட மானேஜர். இங்க மருத்துவ ஆராய்ச்சி மையம் கட்டிட்டு இருக்காங்க. வினோத் சம்பிரதாயத்துக்காக கை குலுக்கினானே தவிர அவன் மனதில் ஏதோ ஒன்று தவறாக தெரிந்தது. நிம்மி கத்திக்கொண்டு நாட்டாமையை சுற்றி வந்தும் அவரது கால்களை கடிக்க முயற்சித்துக் கொண்டும் இருந்தது.

அம்மாடி வசுந்தரா நீ இங்க வந்து நாலு மாசம் ஆயிடுச்சு. ஆனா இந்த நிம்மி எங்கிட்ட இன்னும் பழகல என்றார் நாட்டாமை. காரில் வந்த 10 நிமிடங்களில் நிம்மி தன்னிடம் பழகி விளையாடியதை யோசித்துக் கொண்டிருந்த வினோத் அப்போ உங்க கிட்ட ஏதோ தப்பு இருக்கு நாட்டாமை என்றான்.

இதை எதிர்பாராத நாட்டாமையின் முகம் குப்பென வியர்த்து.

-Kanimozhi Raja

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்: https://kalakkaldreams.com/article.php?a=kanavulagavasi-part-7-by-nirmala-gamesh&i=9161

Related Articles