வெளியிடப்பட்ட நேரம்: 08-May-2019 , 03:44 PM

கடைசி தொடர்பு: 08-May-2019 , 03:44 PM

கனவுலவாசி பாகம்-9

வினோத், வசு, கவிதா நாட்டாமை என நால்வருக்குள் அது யார்? அது யார்? என்ற கேள்வி மூச்சடைத்துக் கொண்டிருக்கும்

அதே நேரத்தில்..

புறநகர் விட்டு வெளியில், மரங்களின் கை விரித்து மறைத்த, எந்த ராகத்தில் பாட வேண்டும், என்றில்லாமல் சகலமும் பாடும் பறைவைகள் நிறைந்த ரம்மியமான
காட்டின் நடுவே, மர வீட்டின் உள்ளே

“மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏனென்று....கேளுங்கள் ”

கேட்கத்தான் வேண்டும் அந்த வீட்டின் உள்ளே. இந்த காலத்திலும் இந்த பாடலை இன்னமும் யார் கேட்கிறார்கள் என்று.

தனி ஆளாக சமையல் உடையில், தீவிரமாக பாடலோடு சமைத்து கொண்டிருந்தாள் காயத்ரி. அதிக விவரம் தேவைபடாத அளவிற்கு பார்க்க “மியா ஜார்ஜ்’ யை நியாபகப் படுத்தினாள். அல்லது நீங்கள் White Nights படித்தீர்கள் என்றால் அதில் வரும் நாஸ்தென்கா விற்கு ஒரு உருவம் கொடுத்திருந்தீர்கள் என்றால் அது அவளே தான். சமைப்பது தான் அவள் தொழில், வாழ்க்கை, காதல் எல்லாமே.
நட்சத்திர ஓட்டலில் வேலை செய்கிறாள். கொஞ்சம் ஒரு மாதிரி. மற்றபடி ஆகச்சிறந்த தேசியவாதியவள்.

மின் அடுப்பு ஆவியை தாண்டி இருந்த டிவியில், ராஜாவை நிறுத்திவிட்டு செய்தி வாசிக்க ஆரம்பித்திருந்தாள் ஒரு புஷ்டி.

“நாம் மிகவும் அறிந்த பிரபலமான அரசியல்வாதியும் விமர்சகருமான அருண்குமாரை யை கடந்த 36 மணி நேரமாக காணவில்லை. கோடை விடுமுறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றார் என அவரது வட்டாரங்கள் தெரிவிற்கின்றன..”

அருண்குமாரின் போட்டோக்கள் டிவியில் நடந்தன.

காயத்ரி தன் பலத்தின் பாதியை கத்தியில் நிறுத்தி, டேபிளில் 30 டிகிரியில் வெட்ட “டிங்” என்ற சப்தத்தோடு ரத்தமும், கூடவே முந்தவா! என மோதிரமும் பறந்து டிவியின் டெர்மினலில் பட்டு விழுந்தது.

மோதிரம் என் பெயர் ‘A’ என்றது.

நாட்டாமையின் முகம் கொஞ்சம் கடுமையாக இருந்ததே தவிர காட்டிக் கொள்ளவில்லை. "மிஸ்டர் கணேஷ் நீங்க துப்பு துலக்கிறவங்க, யாரைப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கும்" என்று மோதிரத்தை திருகிக் கொண்டே சொல்லி சிரித்தார்.

உண்மை தான் சார், இப்போ போலீஸ் கூட கொலை களவு செய்றாங்க இதுல அவங்க வீட்டு ஆட்களுக்கு அந்த தைரியம் இல்லாமல் போகுமா?

வார்த்தைகளால் வசுந்தரா வெகுவாக பாதிக்கப்பட்டாள். திருப்பி கொடுக்க வேண்டிய கட்டயத்தோடு, "யாரா இருந்தாத்தான் என்ன வினோத், காதலன் நண்பன் தோழன் ன்னு நம்பி வந்தவங்களையே சீரழிக்கிற சமூகம் இது செய்யிற தொழிலால் இவங்க உத்தமன் சொல்ல யார் இருக்கா சொல்லுங்க.."

ஆளுக்காள் மூக்கை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கணக்கிட்ட கவிதா, பேச்சை மீண்டும் நிம்மி பக்கம் திருப்பினாள். "நிம்மி அசைவ ஜீவனா? இவ்வளவு அதீத மோப்பம் பிடிக்கிற குணத்தை நான் பார்த்ததே இல்லையே?"

எனக்கும் அப்படித்தான் புதுசா இருக்கு, நிம்மி இந்த மாதிரி ஒரு வெறியோடு திரிந்ததை நான் பார்த்ததே இல்லை என்றாள் மிரட்சியா வசுந்தரா.

மறு இரண்டு நாள்களும், வினோத்தும் வசுவும் அந்த ஊர் முழுக்க அளந்தார்கள். உருப்படியான ஒன்றும் சிக்கவில்லை. உயர் அதிகாரிகளின் உபத்திரவமும் அடிக்கடி காதில் இடி இடித்து கொண்டே தான் இருந்தது. வினோத் நான்கு நாலுக்குண்டான தாடியும் சோகமும் முகத்தில் வைத்திருந்தான்.
சோர்ந்து களைத்திருந்த மதியநேர வெய்யலில், பசியும் சேர, கடத்தல்கள் நடந்த அதே ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வினோத்தும் வசுவும், சங்கேத பாஷை தேடிப்போன கவிதாவும் வெறுங்கையோடு சென்று அமர்ந்திருந்தார்கள்

"தவிக்கிறது எல்லாம் கிடக்கட்டும் முதல்ல தூக்கி தாமரையை மலர வை'" ன்னு சொல்ற மாதிரி இந்த ஆட்டத்தில் இப்போ அரசியல்வாதி ஆம்பள வேற, நம்ம நிலமை ஆணி செருப்புல நடந்த கதை தான் இனிமேல்" என்று சலித்துக் கொண்டே எலும்பை கடித்தாள் வசுந்தரா..

ஹோட்டல் டிவியில் சிரித்த அருண்குமாரின் முகம் இப்போது எப்படி இருக்கிறதோ? "ஊவாக்" என்றாள் கவி.

"யாரிந்த ஆசாமி? இதுவும் இங்க நடந்தது தானா? ஏன் என்கிட்டே இதைப் பத்தி சொல்லவே இல்லை, நால் நாளா நான் இங்க தானே இருக்கேன்" வினோத் புருவத்தை உயர்த்தினான்.

"அரசியல்வாதி ன்னு பேர் இருந்தா போதாதா? வேற ஏதும் காரணம் வேணுமா? டிடெக்ட்டிவா இருக்கீங்க.. போலீஸ் எதை அமுக்குவாங்க, எதை தூக்குவாங்க ன்னு தெரியாதா?"

"உங்களை சொல்லி தப்பில்ல, உங்க வேலை அப்படி வசுந்தரா, நீங்களும் போலீஸ் தானே? உதாரண வார்த்தைகள் இப்படித்தான் வரும். அதற்கு இலக்கியவாதிகள் மேல்.." சிரித்தான்.

"இலக்கியவாதிகளை பேசறதுக்கு பதில் கொலைகாரர்களை பற்றி பேசலாம் அது மேல்" கவுன்ட்டர் கவிதா விடம் இருந்து வந்தது.

"அதுதான் எனக்கும் கிளாரிட்டி இல்லாம இருக்கு, 10 தேதி கடத்த படுற 17 ஆண்கள் ஒரே மாதிரி, சில்வியா (தற்)கொலை, சைகை மொழி, நீங்கெல்லாம் கொலைகார கூட்டாளிகள் போல கனவு, கனிம வள குறிப்பு, ன்னு விஷயங்கள் எல்லாம் உதிரியா கிடக்கு.. ஒன்னோட ஒன்னு சிங் ஆகவே இல்லை." கை கழுவி விட்டு, என்னோட ஜுனியர் க்ராக் தஸ் இருந்திருந்த உருப்படியா ஏதாவது உளறுவான் அவனும் இல்லை.

"தஸ்ஸா? பத்து ஜூனியரா?" வசுந்தரா..

"ஹா ஹா இல்லை தஸ்வந். சோ 'தஸ்' ன்னு கூப்பிடுவேன்..ஒரு ஆள் தான் ஆனா பத்து பேருக்கு தலைவலி தருவான்."

"ஹீரோ எண்ட்ரிரிரிரி .. தலைவலி ஆண்களுக்கு மட்டும் தான் பெண்களுக்கு கிடையாது மை பெல்லோ லேடீஸ்."

தீடிரென்ற தஸ் ஸீன் வருகை, மற்றவர்களுக்கு கழண்ட கேஸ் போல எனவும், வினோத் க்கு ஆச்சர்யத்தை தந்தது.

"டேய் தஸ், நான் உனக்கு கொடுத்த கேஸை பார்க்காம இங்க என்ன?"

சீனியர் அதெல்லாம் ஒரு கேஸா, கேபி படம் மாதிரி, அப்பா தன்னோட பையனை பழைய காதலி மகளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டு இவங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போய்ட்டாங்க, இது தெரியாத அந்த அப்பாவி அம்மா என்னோட புருஷனை காணோம் ன்னு ன்னு நம்ம கிட்ட வந்திருக்கு.. இவங்களை எல்லாம் கண்டுபிடிக்கிறது ஒரு வாழ்க்கையா பாஸ் நமக்கு..

"சரி சரி விடு, இங்க நான் உன்ன வர சொல்லவே இல்லையே"

"பாஸ், உங்க எல்லோர் முகத்தையும் பாருங்க.. நான் இங்க இருக்கணுமா வேண்டாமா?"

"இனி முதல்ல இருந்து புரியாத இந்த கேஸை ஒருத்தருக்கு விலக்கணும்" என்று எழுந்து பிடிக்காமல் நடந்தாள் கவிதா..

"பாஸ் தப்பா என்னைப்பத்தின முகவரி கொடுத்திருக்கீங்க.. வருத்தப்படுவீங்க கவிதா" என்று கத்தினான் தஸ்.

"அவ சொல்றதும் சரிதான்" அவளும் கவிதா வழியே வழிமொழிந்தாள்

"இதுவரைக்கும் 17 ஆண்கள் Miss. அவங்களுக்கு Mistress கூட இல்லை. அதுல ஒரு ஆணோட உடம்பு கூட எங்கயும் கிடைக்கல, ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லை, கள்ளக் காதல் இந்த காலத்துல ஒரு கடத்தல் கொலை செய்ற அளவிற்கு பெரிய விசயம் இல்ல. நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னு ன்னு போகுது நாடு. குடும்ப பிரச்சனையும் இல்ல. உயிரோட இருப்பாங்களா? கண்டிப்பாக செத்து தான் இருக்கணும். கேங் வந்து கடத்தின மாதிரியும் ரிப்போர்ட் ஆகுல. ஒரு சாதாரண உருபத்தில் இருக்கிறவன் செய்வது மாதிரி தான் ன்னு சீனியர் instinct சொல்லியிருக்கும். சோ அந்த Suspect ல எல்லாரையும் விசாரிச்சுருக்கீங்க. அந்த 3 வது ஆண் கிருஷ்ணா matter ல அந்த chemistry வாத்தியார் பார்க்க ஒரு மாதிரியா இருக்கான்ன்னு அவனையும் பிடிச்சு நொங்கு எடுத்திருக்கீங்க.

பிளாஸ்டிக் அரிசி வேண்டாம் பா, என்று பிரியாணிக்கு ஆர்டர் சொல்லிவிட்டு, மேலும் சொன்னான் தஸ்.

வாத்தியார் பார்க்கதான் அப்படி, பொண்ணுக விஷயம் ஆள் கொஞ்சம் தொங்கல் தான், இருந்தாலும் முழுசா சல்லடை போட்டுட்டீங்க. பொண்டாட்டிக்கு குடுத்த ஜீவானம்சத்துல ரெண்டு சட்டை மட்டும் தான் மிச்சம் அதுனால பார்ட்டி பார்க்கறதுக்கு அப்படி இருக்கு. எல்லாக் கடத்தல்களும் இந்த ரோட்டில் தான் நடத்திருக்கு, இந்த ஹோட்டல் அந்த ஸ்கூல் தவிர மற்றது எல்லாம் வீடுகள் தான். அதுவும் மிலிட்டரி குவாட்டர்ஸ். இன்னும் ஒரு கிலோமீட்டர்க்கு இந்த ரோட்டில் வேற ஏதும் இல்ல. இங்க வர்ற ரெகுலர் கஸ்டமர் யாரு? என்ன? என்றவரைக்கும் விசாரிச்சு நொந்து நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டு இருக்கீங்க. No use. அடுத்து ஒரு ஆள் கடத்தற வரைக்கும் பிரியாணி சாப்புடுங்க.."

I think so. எனக்கு நீ கூடத்தான் NO use, இத்தனை வருசமா என்கூட இருந்து நான் எப்படி மூவ் பண்ணுவேன் ன்னு மட்டும் தான் தெரிஞ்சு வைச்சிருக்க. பில்லுக்கு பணத்தை வைத்துவிட்டு வினோத் கேட்டான், "கடைசியா என்ன சொன்ன?"

மறுபடியும் பிரியாணியா ? என்றான் ஏப்பத்தோடு தஸ்.

“இல்லடா ? அதற்கும் முன்னாடி சாப்பிட தொடங்கும் போது கடைசியா.

"அடுத்து ஒரு ஆண் கடத்துனதுக்கு அப்புறம் பிரியாணி சாப்பிடலாம் ன்னு சொன்னேன்."

“அடுத்த ஆண் கடத்த படுவான்.. நாளைக்கு “

என்று சொல்லிவிட்டு கை கழுவ Rest Room நோக்கி வேகமாக வினோத் செல்ல, எதிரில் ஒருவர் சமையல் உடையை கழட்டிக் கொண்டு வெளியில் வர இடிக்காமல் கதவருகில் சந்தித்து கடந்தார்கள்.

"சீனியர் ரொம்ப அசிங்கப் படுத்துறீங்க" என்று எரிச்சலில் டிஸ்ஸு பேப்பரை கசக்கி தூக்கி எரிந்தான் எதிரில் ஒரு யுவதி வருவது தெரியாமல். சட்டென சமாளித்தான்.

"ஹாய், சாரி தெரிஞ்சே தான் பேப்பரை வீசினேன், நான் ஒரு கவிஞர், பேரு தஸ், இப்படித்தான் சாப்பிடும் போது கூட கவிதை எழுதுவேன்"

"பார்த்து உடம்ப கெடுத்துக்காதீங்க மிஸ்டர். அப்புறம் இது ஹோட்டல் குப்பை தொட்டி இல்லை."

"அப்படியா, நான் ஒருவேளை ரோமாபுரியோ?ன்னு நெனைச்சேன். இப்போ கிளியோபாட்ரா ன்னு யாருக்கும் பேர் வைக்கிறது இல்லை, அப்போ உங்க பேர் அதுவா இருக்காது சரிதானே.."

தஸ் அவ்வளவு "நல்லை அல்லை" அல்லன், இந்நேரம் வேற பெண்களை பார்த்திருந்தால், முதலில் நெஞ்சில் குத்தியிருக்கிற பேட்ஜ் தான் கண்ணில் படும். அவன் அங்கிருந்து தான் ஆராம்பிப்பான்.

"மிஸ்டர், நான் இங்க ஷெப் ஆ இருக்கேன், கஸ்டமர் கிட்ட நேரடியா பீட் பேக் கேட்கிறது என் வழக்கம், அவங்க விடுற ஜொள்ளுகளை எல்லாம் அல்ல."

"ஓகே மிஸ், நோட் மை ரிமார்க்ஸ், லுக்கிங் குட், Fairy, Little Bit adamant..and.."

சிரித்தாள், ஓகே மிஸ்டர் ஐ யம் காயத்ரி, தாங் யு பார் யுவர் flirt. என்று சொல்லி பின் நகர்ந்து திரும்பாமல் நடந்தாள்.

பாதி முணுமுணுப்பில் table விட்டு எழுந்து கொண்டே 'தஸ்' சொன்னான்.

"அதுக்குள்ள என் கதை முடிஞ்சுது ன்னு நினைக்காத காயத்ரி I am Coming for you. ill get you damn where you are.."

- காயத்ரி அருண்குமார்

முந்தைய பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்: https://kalakkaldreams.com/article.php?a=kanavulagavasi-part-8-by-kanimozhi-raja&i=9163

Related Articles