வெளியிடப்பட்ட நேரம்: 13-Oct-2020 , 06:58 AM

கடைசி தொடர்பு: 13-Oct-2020 , 06:58 AM

கறுப்பி - பாகம் - 12

karuppi

ச்சிவ்வா வியாழக்கிழமை என்னோட ஆளும் பசங்களும் வர்றாங்க...” என்றாள் லீமா.

“வாவ்... சூப்பர்... அடிக்கள்ளி... என்ன சன்பென்ஸாக்கும்... விசா எடுத்ததெல்லாம் சொல்லவேயில்லை...”

“லூசு... அவங்களுக்குத்தான் இங்க விசா இருக்கே... அவங்க இங்க வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் எல்லாருமா ஊருக்குப் போலாம்ன்னு திட்டம்... இந்த வாரம்தான் முடிவு பண்ணினேன். சோ எல்லாம் கன்பார்ம் ஆனதும் உங்கிட்டதான் முதல்ல சொல்றேன்”.

“அப்ப இனி அம்மணியைப் பிடிக்க முடியாது... எஞ்சாய்தான்...” சிரித்தான்.

“ம்... என்னோட பொண்ணுங்களும் வர்றாங்க... ஒரு அம்மாவா எனக்குள்ள என்ன ஒரு பீலிங்க் தெரியுமா..? பிள்ளைகளை விட்டுட்டு ஸ்கைப்லயும் போட்டிம்லயும் இப்ப டூடாக்குலயும் பார்த்துப் பேசுற வாழ்க்கை என்ன வாழ்க்கை ச்சிவ்வா... தினம் தினம் வருந்தி... தூக்கமில்லாம... சை என்ன வாழ்க்கை இது... நான் அப்பப்ப நினைச்சிப் பார்ப்பேன்... ஒரு வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போயி பொண்டாட்டி பிள்ளைங்களைப் பார்த்துட்டு வர்ற நீயெல்லாம் எவ்வளவு கஷ்டப்படுவேன்னு... ஒரு தடவையாச்சும் கூட்டிக்கிட்டு வா ச்சிவ்வா... இங்க வந்துட்டுப் போகட்டும்...”

“ம்... கஷ்டம்தான் லீமா... ஆனா நம்ம கஷ்டம் அவங்களுக்குத் தெரிவதில்லை... பெத்தவங்க... கட்டுனவ எல்லாருமே பணம் காய்க்கும் மரமாத்தான் நினைக்கிறாங்க.... அது... இதுன்னு எல்லாத்தையும் இழுத்து வச்சி... இங்க படுத்திருக்கிற கட்டில்ல கூட நிம்மதியாப் படுக்க முடியாமப் பண்ணிடுறாங்க... எனக்கும் கூட்டியார ஆசைதான்... பட்... பொருளாதாரம் இடம் கொடுக்கணுமே...”

“ம் நான் வெகேசன் போயிட்டு வந்ததும் ஏற்பாடு பண்ணலாம்... எவ்வளவு வரப்போகுது... பாத்துகலாம் விடு... உன் குடும்பம் இங்க வரணும்... ஹாய் ஆன்ட்டி சொல்ற உன்னோட பையனைக் கார்ல கூட்டிக்கிட்டுச் சுத்தணும்...“ என்றவள் “வயிறு வலிடா... முடியலை... ஹெவி பெயின்...” என்றாள் வயிற்றைப் பிடித்தபடி.

“ஏன் என்னாச்சு... என்ன சாப்பிட்டே நைட்டுல... சிக்கனை வச்சிக் கட்டிட்டியா...?”

“அதெல்லாம் இல்லை.... டைம் ரெண்டு நாள் முன்னமே வந்திருச்சு... அதான்...”

“ஓ... எல்லாம் காரணமாத்தான் வந்திருக்கு... வியாழக்கிழமை ஆளு வருதுல்ல... அந்த நேரத்துல வந்து... அந்தாளை தள்ளிப் படுக்க வச்சிட்டியன்னா...”

“ஆளைப்பாரு... வலி உயிர் போகுது... எப்பவும் எனக்குப் பெயின் இருக்காது... போன வாரம் புராஜெக்ட் விஷயமா அலைச்சல் வேறயா... அதான் முன்னாலயே...”

“டாப்லெட் எடுத்தியா...?”

“ம் போட்டுட்டுத்தான் வந்தேன்... பட் வலி குறையலை... அன் ஈசியாப் பீல் பண்றேன்...”

“பேசாம லீவைப் போட்டுட்டு வீட்டுக்குப் போ... கெளம்பு...”

“வேண்டாம்... பன்னெண்டு மணிக்கு கிளையண்ட் மீட்டிங் இருக்கு... முடிச்சிட்டு கிளம்புறேன்...”

“ம்... சரி...”

அந்த வாரம் வேலைப்பளுவோடு கடக்க, வியாழன் மாலை வா ஏர்போர்ட் போவோம் என நின்றாள் லீமா.

“ஏய் நான் எதுக்கு நீ போயிட்டு வா...” என்றான்.

“இப்ப வர்றியா... இல்லையா... அவருக்கிட்ட நானும் ச்சிவ்வாவும்தான் வர்றோம்ன்னு சொல்லியிருக்கேன்... முதல்ல கிளம்பு...” என வம்படியாக இழுத்துக் கொண்டு சென்றாள்.

அன்று லீமாவின் மீது புது வாசனை அடித்தது.

புருவங்களைத் திருத்தி இருந்தாள்... கையில் மெஹந்தி இட்டிருந்தாள்.

காரில் ஏறியதும் “புதுப்பொண்ணு முதலிரவுக்குத் தயாரான மாதிரி இருக்கு உன்னைப் பார்த்தால்...” எனச் சிரித்தான்.

“ம்... அப்படியே வச்சிக்க....” என்றாள் லிப்ஸ்டிக்கை உதட்டில் இழுத்தபடி.

“எப்பா... கிழவியோட அலும்பு தாங்கலை...”

“யாரு கிழவி... நானா... ஏய் உன்னை விடச் சின்னவதான் தெரிஞ்சிக்க... சிக்குன்னு இருக்க என்னைப் பார்த்து கிழவிங்கிறே...” அடிக்க கையை ஓங்கினாள்.

“இங்க பாரு... எங்கூர்ல மாடு கன்னுக்குட்டி போடுற வரைக்கும்தான் கிடேரி... கன்னுக்குட்டி போட்டுட்டா அது மாடுதான்... அப்புறம் கிடேரின்னு சொல்றதில்லை...”

“பாரேன்... சரி அந்தக் கறுப்பி... அட அவ பேரென்ன... மறந்து போச்சே...”

“மலாமா...”

“ம்... மலாமா... பாக்கணும் பாக்கணும்ன்னியே பாத்தியா... ஒண்ணுமே சொல்லலை...”

“ம்... போன வாரம் அங்க போக வேண்டியிருந்தது... போனப்ப... அந்த உட்கா ஷாப்புக்குப் போனேன்... வெளியே உயரமானவள்தான் உட்கார்ந்திருந்தாள். நான் போனதும் நீ மட்டும்தானா உள்ள வான்னா... நான் அதுக்கு வரலை... மலாமாவைப் பார்க்கணும்ன்னு சொன்னேன்... நீ யாரு?... என்னன்னு விசாரிச்சா?... விபரம் சொன்னதும் ஒரு மாதிரிப் பார்த்துட்டு அவ ஊருக்குப் போயிருக்கா ரெண்டு மாசம் ஆகுன்னு சொன்னா... வந்துட்டேன்...”

“அப்ப போயிருக்கே... எங்கிட்டச் சொல்லாம மறைச்சிட்டே....”

“அதெல்லாம் இல்லை... நீ போன வாரமெல்லாம் வேலை பிஸியா வெளியில திரிஞ்சே... அதோட அவளைப் பார்த்துப் பேசியிருந்தா சொல்லலாம்... ஆனா பாக்கவேயில்லை... அப்புறம் இதுல என்ன சொல்ல வேண்டியிருக்கு... அதான் சொல்லலை...”

“ம்... அடுத்த தடவை அவளைப் பார்க்க நானும் உன் கூட வர்றேன்” என்றாள்.

ஏர்போட்டுக்குப் போய் காத்திருந்தோம்...

சிறிது நேரத்தில் குழந்தைகளுடன் வந்தான் அகமத்... சினிமா வில்லன் பாபு ஆண்டனியை நினைவு படுத்தும் உருவம். சிவா அவனை பல முறை சந்தித்திருக்கிறான்.

மனைவியை கட்டி அணைத்து முத்தமிட்டான். குழந்தைகள் தாயை அணைத்துக் கொள்ள. “சகோதரா... அல்லா கிருபை செய்யட்டும்” எனச் சிவாவைக் கட்டிக் கொண்டான்.

“ச்சிவ்வா மாமாவுக்கு ஹாய் சொல்லுங்க...” எனப் பிள்ளைகளிடம் சொன்னாள் லீமா.

குழந்தைகள் கை நீட்டினார்கள்... பிடித்துக் குலுக்கினான்... சின்னவளைத் தூக்க கை நீட்டினான்... தாவி வந்தாள். தூக்கிக் கொண்டான்... ஏனோ அவன் குழந்தைகளின் ஞாபகம் வந்தது... கலங்கிய கண்ணை லீமா பார்க்காது துடைத்துக் கொண்டான்.

“யா... சகோதரா... உன்னையத்தான் எப்பவும் பேசுவாள்... உங்கூட செல்பி எடுத்து அனுப்புவா... என்னோட சகோதரன்னு சொல்லுவா... உண்மையிலேயே அவ இங்க தனியா இருக்கான்னு நான் வருத்தப்பட்டதே கிடையாது... அதான் நீ இருக்கியே...”எனத் தோள் பற்றினான். இதை ஒவ்வொரு முறையும் அவன் சொல்வதுண்டு என்றாலும் அதிலிருக்கும் அன்பு எப்போதும் மாறாதது.

அவன் தன் மீதும் மனைவி மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை எப்பவும் சிவாவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும்... தன் குடும்பம் வந்திருந்த போது வீட்டுக்கு ஒருநாள் வாடான்னு சொல்லக் கூட மனசு வராத இந்திய நண்பன் ஒருவன் மனதில் வந்து போனான்.

“அம்மா கூட யாரோ ஒரு இந்துப் பையன் கூட என்ன கூட்டு... இதெல்லாம் சரி வராது... அப்படியிப்படின்னு சொல்லுவாங்க... அவங்க பெரியவங்க... மதத்தின் மீதான நம்பிக்கை அவங்களுக்கு அதிகம் இல்லையா... அது தப்பில்லையே சகோதரா...“ எனச் சிரித்தான்.

“சேச்சே... எல்லா வீட்டிலும் பெரியவங்க அப்படித்தான்... எங்கப்பா கூட சாதி, மதமெல்லாம் பாக்கத்தான் செய்வார்... சொன்னாலும் அவங்களுக்குப் புரியப் போறதில்லை...” என்றான் சிவா.

லீமா கார் சாவியைச் சிவாவிடம் கொடுத்து “ச்சிவ்வா... நீ ஓட்டு... நான் பிள்ளைகளோட எஞ்சாய் பண்ணிக்கிட்டு வாறேன்.....” என்றாள்.

கார் அவளின் வீட்டை நோக்கிப் பயணித்தது.

ஒரு குடும்பத்தின் சந்தோஷம் காரெங்கும் நிறைந்திருந்தது.

முத்துவின் கேலியால் சுய நினைவுக்கு வந்தான் சிவா.

"சேச்சே... அழகை ரசிக்கலாம்தானே… தப்பில்லையே... கோவில் புடைப்புச் சிற்பங்களை அணுஅணுவாய் ரசிக்கிறோம்தானே... இவள் எனக்கு புடைப்புச் சிற்பமாய் மட்டுமில்லாமல் கருவறையில் இருக்கும் அம்மனாய்த் தெரிந்தாள்..." என்றான் சிவா.

என்ன பிளேவர் வேண்டுமெனக் கேட்டு... ஆப்பிள் என்றதும் அதை தயார் செய்து உட்கா ஸ்டேண்ட் இரண்டைக் கொண்டு வந்து வைத்து அதன் மீது நெருப்புத் துண்டுகள் சிலவற்றை வைத்தாள். இருவர் இருவராக அமர, சிவாவும் முத்துவும் அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தவள் நடந்து செல்லும் போது சிவாவின் கன்னத்தில் தட்டிச் சென்றாள்... பிஞ்சுக் குழந்தையின் பஞ்சுக் கரம் போல் அத்தனை மென்மையாக இருந்தது. பற்றிக் கொள்ள நினைத்தான்... என்னடா நீயுமா என கேலிப் பேச்சு வரும் என்பதால் பேசாமல் அமர்ந்திருந்தான்.

உட்காப் புகையை உள்ளிழுத்து விடுவதை அறிந்து இருந்தால் மட்டுமே புகைக்க முடியும்... இல்லை என்றால் முதல் முறை சிகரெட்டை வாயில் வைத்து இழுக்கத் தெரியாமல் இழுத்து இருமிக் கொண்டு இருப்பதைப் போல்தான் ஆகும்... சின்ன வயதில் மாடு மேய்க்கும் போது நெட்டித் தட்டையின் ஒரு முனையை நெருப்பில் பிடித்து மறுமுனையை வாயில் வைத்து புகையை இழுத்து... இருமி... இருமி... முடிவில் வாந்தி எடுத்தது சிவாவுக்கு ஞாபகத்தில் வந்தது... புரையேறியது.

உட்காவும் போதைதான் என்பதை அதைக் குடித்தவர்கள் சொல்வதுண்டு... ஏனோ தெரியவில்லை இந்த ஊருக்கு வந்து பலருடன் தங்கியிருந்திருந்தாலும் எத்தனையோ முறை நண்பர்கள் வற்புறுத்தியிருந்தாலும் போதைக்குள் மட்டும் சிவாவும் முத்துவும் சிக்கவில்லை. எப்போதும் வேண்டாம் போதையும் பேதையும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்... இல்லையென்றால் இந்நேரம் பல பெண்களுடன் அவர்கள் சல்லாபித்திருக்க முடியும்... அப்படி ஒரு வாழ்க்கை தேவையா... நம்மை நினைத்துத்தானே ஊரில் ஒருத்தி இளமையை எரித்துக் கொண்டிருக்கிறாள்... அவள் படும் வேதனையில் பாதிதானே நாம் படுகிறோம் என்பதை இருவரும் அடிக்கடி நினைப்பதுண்டு.

"ஹே... இது உங்களுக்கு விருப்பமில்லையா...?" என அவர்களிடம் புன்னகையுடன் கேட்டாள் மலாமா.

'நோ...' எனத் தலையாட்ட,

'ஓ... குட்... ஐ லைக் யூ... " எனச் சிரித்தாள்.

"இவ மட்டும்தானா...? வேற யாரும் இல்லையா..?" ராகவிடம் கேட்டான் சம்பத்.

"என்ன நீ மட்டும்தான் இருக்கே.... மத்தவங்க எங்கே..? சம்பத்தின் கேள்வியை சற்றே மாற்றி மலாமாவிடம் கேட்ட ராகவ், அவளை இழுத்து அணைத்து இடுப்பில் கை வைத்தான்... மெல்லக் கையை நகர்த்தி வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்குக் கீழே இருக்கும்படி வைத்துக் கொண்டான். அவள் ஒன்றும் சொல்லாததால் வெற்றிப் புன்னகையை வீசினான்.

"ஏன்... உங்களுக்கு நிறையப் பொண்ணுங்க வேணுமாக்கும்...?" ராகவ்வின் சேட்டை செய்யும் வலது கையைப் பற்றி கவலைப்படாது அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

"எஸ்... வி வாண்ட் மோர் லேடீஸ்..." என்றான் சம்பத். உட்கா புகை அவன் வாயில் வழிந்தோடியது.

அவனை ஒரு மாதிரிப் பார்த்தவாறு "இப்ப வருவாங்க..." என்றவளின் உதட்டு லிப்ஸ்டிக் காய்ந்திருக்கிறதா இல்லையா என இடது கை விரலால் தடவிப் பார்த்த ராகவ், மெல்ல விரலை மார்புகளுக்கு இடையே நகர்த்தினான்.

சிரித்துக் கொண்டே விரலைத் தட்டிவிட்டு, வயிற்றின் அடிப்பகுதியை அழுத்திய கையையும் எடுத்து விட்டு எழுந்தவள் உட்கா குடிக்கும் நால்வருக்கும் இடையில் கிடந்த சோபாவில் அமர்ந்தாள்.

சம்பத் அவளை அருகில் வருமாறு கூப்பிட்டான். எழுந்து அவனருகே செல்ல, உட்கார் என தொடையைக் காட்டினான்.

"அங்க வேண்டாம்... சோபாவில் இடம் கொடு" என அவனைத் தள்ளி அமரச் சொல்லிவிட்டு குனிந்தவளின் தொடையைத் தடவினான் கருண்.

“நோ...” என அவன் கையைத் தட்டிவிட்டு இருவருக்கும் இடையில் கிடைத்த இடைவெளியில் அமர்ந்தாள்.

சம்பத் அவள் கழுத்தில் முத்தமிட்டான்... அதே நேரம் கருண் அவள் முடிகளைத் தூக்கி முதுகில் இதழ் பதித்தான்... “ஸ்ஸ்ஸப்பா.... என்ன வாசமுடா.... கூந்தல்ல மட்டுமில்ல பொம்பளைங்க முதுகிலும் இயற்கையில் வாசனை இருக்கத்தான் செய்யுது... நக்கீரன் கூந்தலோடு நிறுத்திவிட்டான்" எனச் சிரித்தான்.

“என்னது..? ஏன் இப்படி நடந்துக்கிறீங்க...?” செல்லமாய்த்தான் கேட்டாள். அப்போது அவளின் கைகள் கூட அவர்களின் தொடையில் கோலம் போட்டுக் கொண்டுதான் இருந்தது.
“நீ எனக்கு வேண்டும்” என இருவரும் சொல்லி வைத்தார் போல் சொன்னார்கள்.

- பரிவை சே.குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-11-by-parivai-se-kumar&i=10759

Related Articles