வெளியிடப்பட்ட நேரம்: 15-Oct-2020 , 07:49 AM

கடைசி தொடர்பு: 15-Oct-2020 , 07:49 AM

கறுப்பி - பாகம் -13

karuppi

சில குழப்பமான மனநிலையில் இருந்தான் சிவா.

கொட்டித் தீர்க்க லீமாவும் இல்லை... புராஜெக்ட் விஷயமாக ரெண்டு வாரமாக கிளையண்ட் ஆபீசிலேயே இருக்கிறாள்... குடும்பம் வந்திருப்பதால் வேலை முடிந்து அப்படியே வீட்டுக்குப் போய் விடுவாள்... சில நேரம் போனில் பேசுவாள்...

ரபீக்கிடம் பிரச்சினைகளை எப்போதும் சொல்வதில்லை... இப்போது சொல்ல அவனும் இல்லை... விடுமுறையில் ஊருக்குச் சென்று விட்டான்.

இருவரும் இல்லாத நிலையில் தனித்து விடப்பட்டவன் ஆனான்.

அப்போதுதான் நண்பர்கள் மில்க்கி வே பார்க்கப் போகலாம் என்று கூப்பிட்டார்கள். சிவாவுக்குச் செல்லும் எண்ணம் இல்லை என்றாலும் ஒரு இரவு நண்பர்களுடன் பயணித்தால் மனசுக்கு கொஞ்சம் மகிழ்வாக இருக்குமே என்பதால் சரியென்று சொல்லியிருந்தான்.

மில்க்கிவே என்பது அமாவாசை இருட்டு தினத்தில் எந்த வித ஒளியும் இல்லாத ஒரு பாலைவனப் பகுதியில் நட்சத்திரங்களின் கூட்டத்தை அவ்வளவு அழகாகப் பார்க்கலாம். இந்த ஊருக்கு வந்து இத்தனை வருடத்தில் ஓரிரு நட்சத்திரங்களையே பார்த்தவனுக்கு, அவ்வளவு தூரம் பயணித்து அல் குவா என்னும் கிராமத்துக்குப் போகும் பாதையில் எந்தச் சப்தமும் எந்த வெளிச்சமும் இல்லாத பாலையில் இரவு மூணு மணி வரைக்கும் ஓராயிரம் நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தான்.

பகலெல்லாம் தகிக்கும் பூமி... இரவிலும் தகிக்கும் என்ற அவனின் எண்ணத்தைப் பொய்யாக்கியது விரிந்து கிடந்த பாலை.

பகலில் பாலை மணலில் நடக்க முடியுமா... இரவில் அந்தப் பாலை மண் அவ்வளவு குளிர்ந்தது... அவன் மனசைப் போல.

குளிரென்றால் குளிர்... அப்படி ஒரு குளிர்... பகலெல்லாம் தகிக்கும் அந்த மண் இத்தனை குளிர்ச்சியையும் தன்னுள்ளேதானே வைத்திருக்கிறது என ஆச்சர்யப்பட்டான்.

அதிகாலை அந்தப் பாலை மண்ணைப் பார்க்கும் போது பிறந்த குழந்தை உடம்பில் துணியில்லாமல் குப்புறப் படுத்திருப்பது போல அவனுக்குத் தெரிந்தது.

அந்த மண்ணில் ஓடினான்...

அதில் உருண்டான்....

அள்ளி வீசினான்....

அதன் அழகை ரசித்தான்....

அதனுடன் ஏதேதோ பேசினான்...

எவ்வளவு மணல் இந்த நாட்டில்... நாம்தான் நம் நதிகளை... குறிப்பாக காவிரியைச் சுத்தமாக மொட்டையாக்கி மூளியாக்கி வைத்திருக்கிறோம்... மண்ணள்ள வரிசையாய் நிற்கும் லாரிகள் மனதிற்குள் வந்து சென்றன.

அரசியல்வாதிகளின் பணப்பசிக்கு அவளை அம்மணமாக்கி கற்பழித்து விட்டார்கள்... இனி கற்ப்பிழக்க அவளிடம் ஒன்றும் இல்லை...

மீண்டும் மண்ணோடு பாலை மண்ணுடன் பேசினான்...

திரும்பத் திரும்ப பாலையின் பசும் மண்ணை அள்ளி வீசினான்...

மண்ணை மனதாரக் காதலித்தான்...

அவள் கரம்பிடித்துக் கட்டியணைத்தான்.

மனசுக்குள் இருந்த வேதனைகளும் வலிகளும் சுத்தமாகத் துடைக்கப்பட்டு விட்டதை உணர்ந்தான்.

திரும்பி வரும்போது மீண்டும் இந்தப் பாலை மண்ணில் வந்து உருள வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

அறைக்குத் திரும்பிக் குளித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து ஊருக்குப் பேசினான். அன்பு அவனருகில் வந்து அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.

சிவா போன் பேசி முடித்ததும் எழ. “மச்சான்.... உனக்கு ஒண்ணு தெரியுமா...?” என்றான் அன்பு.

“என்னது... திடீர்ன்னு உனக்குத் தெரியுமான்னு மொட்டையாக் கேட்டா..?”

“பாபியைப் பற்றி...”

“பாபியா... என்ன... அவன் இங்க இருந்து போன பின்னால நான் பேசவேயில்லை... என்னாச்சு அவனுக்கு...”

“அவனுக்கு ஒண்ணுமில்லை... அவனுக்கு கல்யாணமாகலைன்னு உனக்குத் தெரியுமில்ல...”

“ம்.. தெரியும்... அதான் வாராவாரம் போயிட்டு வந்துக்கிட்டு இருக்கானே... இனி எதுக்கு அவனுக்கு மேரேஜ்...” சிரித்தான்.

“இல்ல ஒருத்திய குழந்தையோட கூட்டிக்கிட்டு வந்து குடும்பம் நடத்துறான்... ஏர்போர்ட் ரோட்டுல இருக்கான்... நான் நேத்துப் போயி பாத்துட்டு வந்தேன்...”

“குழந்தையோடயா...? யார்றா அவ...”

“அவனோட அத்தை பொண்ணாம் மச்சான்... கல்யாணமாகி குழந்தை பொறந்த பின்னால விவாகரத்து ஆனவளாம்... ஜஸ்வர்யா ராஜேஷ் மாதிரி இருக்கா... ஆனா நல்ல சிகப்பு... உயரமா அரபிக் குதிரை மாதிரி இருக்கா... மூணு வயசுல ஒரு பையன்... டீச்சர் வேலைக்கு கூட்டி வந்திருக்கான்... இங்க வீடு புடிச்சி... புருஷன் பொண்டாட்டியா இருக்காங்க....”

“அடப்பாவி... அவளையா கட்டிக்கப் போறான்... அப்படிக் கட்டிக்கிட்டாக் கூட நல்லதுதானே... பாவப்பட்ட பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தால இப்ப பண்ணுன பாவமெல்லாம் போகுமுல்ல...”

“ஆமா அவன்தான் கட்டிக்கப் போறான்... இருக்குற வரை பயன்படுத்திப்பான்...”

“ம்... சரி விடு... அவனை நம்பித்தானே வந்திருக்கா... ஆமா உன்னோட கதை இன்னும் தொடருதா... இல்லையா...”

“என்ன கதை...”

“நடிக்காதே... அதான் அந்த டான்ஸர்...”

“ஓ அதுவா... அவ விடமாட்டேங்கிறா மச்சான்.... என்ன செய்யிறது...?”

“நீயும் சுதாகரும் திருந்தப் போவதில்லை... இங்க இருந்து போகும் போது நோயோடதான் போகப்போறீங்க... சுதாகரை விடு... உன்னோட கதையில அவ ரொம்பப் பாவம்டா... ஏமாத்திடாதே அவ்வளவுதான் சொல்லுவேன்...” என்றபடி எழுந்து சென்றான் சிவா.

அன்பு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

*****


நீ எனக்கு வேண்டும்” என இருவரும் சொல்லி வைத்தார் போல் சொன்னார்கள்.

“அதெல்லாம் இங்க இல்லை” என எழுந்தவளை கருண் இழுத்து அணைத்தான்.

சம்பத் அவள் மார்பில் கை வைத்து “மணிலா ஆப்பிள் மாதிரி இருக்கு” எனச் சிரித்து அழுத்தினான்.

“வாட் ஈஸ் திஸ்... உனக்கு அக்கா தங்கச்சி இல்லை...” எனக் கத்தியவள் எழுந்து ராகவிடம் போய் "என்னது... தண்ணியடிச்சிட்டு இங்க வந்து கலாட்டா பண்றாங்க... மார்ல எல்லாம் கை வக்கிறாங்க... ரொம்ப மோசமா நடந்துக்கிறாங்க..." எனக் கோபப்பட, “ஓகே... ஓகே... நீ இங்க உட்கார்... அவங்களை நான் பார்த்துக்கிறேன்...” என ராகவ் தள்ளி அமர அவனருகே அமர்ந்து கொண்டவள் அவன் கையில் இருந்து உட்கா குழாயை வாங்கி வாயில் வைத்து உறிஞ்சினாள்.

"மச்சி... கொஞ்சம் பொறுமையா இருங்க... எல்லாமே ஒகே ஆகும்... பட்... கொஞ்சம் பழகட்டும்... வந்தோடனே வாசலைத் தொறன்னா எப்படி..." என்ற ராகவ்வின் தொடையில் கை வைத்து... அவன் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்துச் சிரித்தவள், அவன் கேட்காமல் கன்னத்தில் முத்தமிட்டாள்... பதிலுக்கு அவனும் முத்தமிட்டபடி சிவாவைக் காட்டி ஏதோ சொன்னவன் தன் பங்கிற்கு அவள் நெற்றியில் முத்தமிட்டான்... அவளும் அவன் உதட்டில்...

"அதென்ன உனக்கு மட்டும் எல்லாம் செய்யுறா... நான் என்ன தொக்கா... அவளை இங்க வரச் சொல்லு... நான் அவ மாரைப் பிடிக்கணும்..." கத்தினான் சம்பத்.

"வாட் நான்சென்ஸ்... எதுக்கு இப்படிக் கத்துறான்..." என்றாள் கோபமாக.

"ஒண்ணுமில்ல... உட்கா பிளேவர் நல்லாயில்லையாம்... அதான் கத்துறான்..." ராகவ் பேச்சை மாற்றினான்.

"நீதானே ஆப்பிள் கேட்டே... பனானா... ஸ்ட்ராபெர்ரி எல்லாம் இருக்கு… இன்னொன்னு ரெடி பண்ணவா...?" வாடிக்கையாளர் சந்தோஷமே முக்கியம் என்பதாய் பேசினாள்.

"ஐ டோண்ட் வாண்ட் பனானா... ஐ வாண்ட் ஆப்பிள்... ஐ மீன் யுவர் ஆப்பிள்..." என அவளின் மார்பை நோக்கிக் கை காட்டிச் சிரித்தான் சம்பத்.

"வாட்யா... இவன் என்ன பைத்தியமா..? இவனோட சிஸ்டருக்கெல்லாம் இப்படித்தானே இருக்கும்… இல்ல வேற மாதிரியா... அவங்ககிட்ட இப்படித்தான் ஆப்பிள் வேணுமின்னு கேப்பானா... பைத்தியக்காரன்..." என்றபடி கோபமாய் எழுந்து உள்ளே செல்ல முயன்றவளிடம் "எஸ்... நான் பைத்தியம்... பொம்பளக் கிறுக்கன்... இங்க வாடி என்னோட பத்தினி...” என அவளின் சட்டையைப் பிடித்து இழுத்தான்.

அப்போது கதவைத் தள்ளிக் கொண்டு அவர்கள் வந்தார்கள். படக்கென அவளின் சட்டையை விட்டுவிட்டு சம்பத் அடங்கினான்...

அவள் தனது பதட்டமான முகத்தில் படக்கென சிரிப்பைக் வரவழைத்துக் கொண்டாள். வந்த மூவருமே கருப்பின அழகிகள்தான்...

ஒருத்தி மட்டும் கொஞ்சம் சிவப்பாக இருந்தாள்... ஹன்சிகாவைப் போல் கொழுக்மொழுக்கென இருந்தாள். அவளின் பரந்த மார்பின் மீது பார்வையைச் செலுத்திய சம்பத்துக்கு எச்சில் ஊறியது என்பதை அவனின் தொண்டைக்குழி மேலும் கீழுமாய்ச் செல்வதில் சிவாவால் உணர முடிந்தது… நேற்று வரை சம்பத் மீது வைத்திருந்த பிம்பத்திலிருந்து சடாரென மதியமே கீழே விழுந்து விட்டான் என்றாலும் இப்போது அவனின் செய்கைகளைப் பார்த்து மனசுக்குள் ‘கார்த்திகை மாசத்து நாய்’ எனச் சொல்லிக் கொண்டான் சிவா.

மற்ற இருவரும் மலாமா அளவுக்கு இல்லை என்றாலும் அழகாய்த்தான் இருந்தார்கள். அதில் உயரமாய் இருந்தவள் மார்பகத்தில் பாதியை எல்லாரும் பார்க்க விட்டிருந்தாள். உட்காரும்போது கண்டிப்பாக உள்ளே போட்டிருக்கும் குட்டி டவுசர் கண்ணில் படும்படியான சின்னப் பாவாடை உடுத்தியிருந்தாள். ஊரில் திருவிழாவிற்கு வரும் கரகாட்டக்காரியை ஞாபகப்படுத்தினாள். இது வியாபார டெக்னிக் என்றாலும் அவர்களின் வயிற்றுப்பாடும் அதுதானே… இதை விரும்பியா அணியப் போகிறார்கள்... கண் முன்னே நிற்கும் குடும்பத்தின் வறுமைதானே காரணமாக இருக்கும்...

எல்லாருக்கும் கை கொடுத்தார்கள்...

அவர்கள் பாஷையில் ஏதோ பேசினார்கள்... சிரித்தார்கள்.

ஹன்சிகா போன்றவள் சிவா அருகே அமர்ந்தாள்... சிரித்தாள்… அவள் மீதிருந்து அடித்த செண்ட்டின் வாசம் வித்தியாசமாய் இருந்தது... அது அவனுக்குப் பிடிக்கவில்லை...

“எஞ்சாய் பிரண்ட்ஸ்” என்றவள் நீண்ட நேரம் அமராமல் சிவாவின் தொடையில் கைவைத்து அழுத்தி எழுந்து கொண்டாள்.

உயரமாய் இருந்தவளை விட்டுவிட்டு மற்ற இருவரும் கிளம்ப, "எங்கே போறாங்க... அவங்களை இங்க வரச்சொல்லு மலாமா..." கத்தினான் என்பதைவிட அடம்பிடித்தான் சம்பத்.

"ம்... அவங்க இன்னொரு கடைக்குப் போறாங்க... இங்க நான்தான்... என்ன வேணும் உங்களுக்கு..." என சம்பத்தின் அருகே போன உயரமானவள் சரக்கு வாசத்தில் விலகி, ராகவ்வின் அருகில் அமர்ந்தாள்.

"நீனா... ஒண்ணுமே இல்ல உனக்கு.... நீ எதுக்கு… மொட்டச்சி.... அவதான் வேணும்... வரச்சொல்லு...?"

"எவ..?

"அந்த சிகப்பு பனியன் போட்டவ..."

"அவளா... ஹே... அவ வேணுமாடி..." என மலாமாவிடம் சொல்ல, இருவரும் சிரித்தார்கள்.

"ஏன் சிரிக்கிறீங்க... எவ்வளவு வேணுமின்னாலும் தர்றேன்... எனக்கு அவ வேணும்... முன்னாடியும் பின்னாடியும்... மச்சி... கட்டிப் பிடிச்சிக்கிட்டு நாள் கணக்காப் படுத்திருக்கலாம்டா...." பாக்கெட்டில் இருந்து நூறு திர்ஹாம் நோட்டுக்களை எடுத்து வீசினான் சம்பத்.

"அவ யாரு தெரியுமா...? எனக் கேட்டாள் உயரமானவள்.

-பரிவை சே.குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-12-by-parivai-se-kumar&i=10762

Related Articles