வெளியிடப்பட்ட நேரம்: 19-Oct-2020 , 07:49 AM

கடைசி தொடர்பு: 19-Oct-2020 , 07:49 AM

கறுப்பி - பாகம் - 14

karuppi

லீமா சென்ற வாரம் வெகேசனில் ஊருக்குப் போய்விட்டாள்.

போய் இரண்டு நாள் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பினாள். பின்னர் அதுவும் இல்லை. ஊருக்குப் போகும் எல்லாரும் செய்வதுதான். முதல் இரண்டு நாள் தொடர்பில் இருப்பதுண்டு. பின்னர் குடும்பம், பிரச்சினைகள் என அந்தப்பக்கமே சுழல்வதால் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுவதுவதுண்டு. சிவாவெல்லாம் பிளைட் ஏறியதும் அமீரகத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விடுவான். பின்னர் திரும்பி வரும் போது ஏர்ப்போர்ட்டில் இறங்கி வெளியில் வந்து வெப்பக் காற்று தாக்கியபின்தான் தொடர்பு எல்லைக்குள் வருவான்.

ரபீக்கும் இன்று வரவேண்டியது. வந்துவிட்டானா தெரியவில்லை. இன்னும் அலுவலகம் வரவில்லை.

ரெண்டு பக்கமும் ஆளில்லாமல்.. பேசுவதற்கு முடியாமல்.. அலுவலகம் போரடித்தது.

காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து கணிப்பொறியில் அன்றைய செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான்.

தனது கேபினுக்குப் போன ஹசன் ஷாலா “லீமா எப்ப வருவா..?” எனச் சிவாவிடம் கேட்டான்.

“ஒரு மாதம் லீவுன்னு நினைக்கிறேன்.. சரியாத் தெரியலை..”

“உனக்குத் தெரியாதா..? அவ குளிச்சாளா.. குளிக்கலையான்னு கூட உனக்குத் தெரியும்ன்னு ஆபீஸ்ல எல்லாரும் சொல்வாங்க.. தெரியாதுங்கிறே.. ஓ... புருஷங்காரன் வந்திருந்ததால உங்கிட்ட சொல்லலையோ..?” நக்கலாய்க் கேட்டான் ஹசன்.

ஹசனுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே லீமா சிவாவிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு பேசுவது பிடிப்பதில்லை.. எப்ப நேரம் கிடைக்கும் அப்போது அவனை வச்சிச் செய்யலாம் எனக் காத்திருப்பார்கள். சில நேரம் சிவாவுக்கு சுள்ளெனக் கோபம் வரும்.. சில நேரம் கண்டுக்காதது போல இருந்து விடுவான்.

இன்று சற்றே கோபமாக “என்ன சொன்னே..?” என்று எழுந்துவிட்டான்.

எட்டு மணி ஆபீசுக்கு இந்தியர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அன்று ஹாசன் அத்தி பூத்தாற்போல் எட்டரைக்கெல்லாம் வந்திருந்தான்.

“என்ன சிவா.. மொறைக்கிறே.. நான் யாரு தெரியுமில்ல..” கையிலிருந்த கம்ப்யூட்டர் பேக்கை வைத்துவிட்டுக் கேட்டான் ஹசன்.

“நீ யாரா வேணுமின்னாலும் இருந்துக்க.. எனக்கு அந்த மயிரு தேவையில்லை.. ஒரு பொண்ணு பிரண்ட்லியாப் பழகிட்டா உடனே கேவலமாப் பேசிடுறது. அவ உங்கிட்ட பிரண்டா இருந்தா இந்நேரம் படுக்க வான்னு கூப்பிட்டிருப்பே. அதனாலதான் உன்னையெல்லாம் தள்ளியே வச்சிருக்கா.. வந்தமா.... வேலையைப் பார்த்தமா.... போனமான்னு இருக்கணும்.... இந்தா இங்கிட்டு குத்துறது.... அங்கிட்டு குத்துறதெல்லாம் எங்கிட்ட வச்சிக்கக் கூடாது... அடிச்சித் தூக்கி தொங்க விட்டுட்டுப் போயிருவேன்... இந்தியாவுல எங்க மண்ணு விஷேசமான மண்ணு... போயி நெட்டுல தேடிப்படி... தென் தமிழகம்ன்னு... யாருக்கிட்ட வந்து என்ன கேள்வி கேக்குறே... மவனே... பொழந்துடுவேன்... பொழந்து...”

“ஏய் சிவா... என்ன நீ... இப்புடிப் பேசுறே... நான் பஸார்க்கிட்ட போவேன்...”

“போ.... இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் எங்கிட்ட வச்சிக்காதே... போடா.... டேய்... போ... போயி வேலையைப் பாரு... லீமா வந்ததும் குளிச்சாலா குளிக்கலையான்னு உனக்குச் சொல்லச் சொல்றேன்.. நல்லாச் சொல்லுவா...”

“இங்கரு... நீ ஆழம் தெரியாம எங்கிட்ட மோதுறே...”

“எல்லா ஆழத்தையும் பாத்துட்டு வந்தவன்தாண்டி நானு... ரொம்ப சாதுவாத் தெரிஞ்சதும் இந்திய அடிமைன்னு நினைச்சிட்டியாக்கும்... நான் பழம் இல்லை தம்பி... பாதாளம்... ஓகே..” சத்தமாகப் பேசினான்.

ஹசனுக்கு உதறலெடுக்க ஆரம்பித்ததைக் காட்டிக் கொள்ளாமல் “என்ன பண்றேன் பாரு...” என உறுமினான்.

இவர்களின் சப்தம் கேட்டு அந்தப் பக்கம் வந்த குட்டிக்கா “ஏய் சிவா... என்ன பிரச்சினை?” என்றார்.

அவரிடம் விவரமாய் சொன்னான்.

“இவனுகளுக்கு அவ பேசமாட்டேங்கிறாளேன்னு வருத்தம். அதை உங்கிட்ட தீர்த்துக்கப் பார்க்குறானுங்க. விட்டுட்டு வேலையைப் பாரு.” என்றவர் அரபியில் “ஹசன், அவனும் இந்த ஆபீசிலதான் வேலை பாக்குறான். நீயும் இங்கதான் வேலை பாக்குறே. அவ இவன் பக்கத்துல இருக்கா அதனால பிரண்ட்லியாப் பேசுறா. அவ எங்க போறா. எப்ப வருவான்னு கணக்கெடுத்து வச்சிக்க இவன் என்ன அவளோட பி.ஏவா. அவ எப்ப வருவாள்ன்னு ரொஸானுக்கிட்ட கேட்டா சொல்லப் போறா. காலையில ஒருத்தருக்கு ஒருத்தர் மொறச்சிக்கிட்டு. போ ஹசன்....” என்றார்.

“என்ன பேசுறான் பாத்தியா குத்தி...”

“சரி. அவன் எப்பவும் இப்படிப் பேசியிருக்கானா. இன்னைக்கு அவனுக்கு ஏதோ ஒரு டென்சன். அதை உங்கிட்ட கொட்டிட்டான். விடு... போயி உக்காரு...” என்றதும் சிவாவை முறைத்துக் கொண்டே போய் அமர்ந்தான்.

இந்திய நாயி... கறுப்பன்... அப்படின்னு எல்லாம் முணங்கிக் கொண்டிருந்தான்.

சிவா ஹெட்செட்டை காதில் மாட்டி எப்பவும் போல் கந்தர் சஷ்டி கவசத்தை ஓட விட்டான். ஹசன் பேசுவது எதுவும் கேட்கக் கூடாது என்பதால் சப்தத்தைச் சற்றுக் கூடுதலாக வைத்துக் கொண்டான்.

அவன் மனசு மட்டும்… இவனுக எல்லாம் ஏன் லீமா பின்னால சுத்தணும்ன்னு நினைக்கிறானுங்க… அவளுக்குத் திருமணம் ஆகி அழகான குடும்பம் இருக்கு… நல்ல தோழியா பழகணுங்கிற எண்ணமெல்லாம் இல்லாத இவனுக கூட அவ எப்படிப் பழகுவா… ப்ராஜெக்ட் விஷயம் பேசணும்ன்னு கூப்பிட்டு என்ன பிரா போட்டிருக்கேன்னு கேக்குற பஸாரும்… லீமாவோட சைஸ் எத்தனையா இருக்கும் என பட்டிமன்றம் நடத்துற ஹசனும், தாமிரும்… இன்னும் இன்னுமாய் இவர்களின் எண்ணமெல்லாம் எதன் மீதானது… ஒரு பெண் வேலைக்கு வந்தாள் என்றால் அவளை இப்படியான பார்வைக்குள் மட்டுமே நிறுத்துவது ஏனோ…? ஹசனைப் பொறுத்தவரை ஒவ்வொரு பெண்ணுடனும் மணிக்கணக்கில் பேச வேண்டும்… கை பிடிக்க, தோள் பிடிக்க, இடை பிடிக்க என அவனின் பேச்சின் நீளம் கூடிக்கொண்டே போகும். இது லீமாவுக்கு எப்போதும் பிடிப்பதில்லை… சிவாவிடம் மட்டும் அவள் நெருக்கமாய் பேசுவது ஹசன் போன்றோருக்குப் பிடிப்பதில்லை.

பத்தரை மணியைப் போல் ரபீக் வந்து சேர்ந்தான்.

நல விசாரிப்புக்குப் பின் “லீமா நாட்டுக்கு போயாச்சா?” என்றான் ரபீக்.

“ம்…”

“ஒரு மாச லீவா…?”

அவனைத் திரும்பிப் பார்த்த சிவா, “இப்பத்தான் ஒருத்தன் இதே கேள்வியை வேற மாதிரிக் கேட்டு வாங்கிக் கட்டிக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கான்… இப்ப நீ கேட்குறே…”

“என்னடா… லீவு எத்தனை நாளுன்னுதானே கேட்டேன்…”

“அதுக்குத்தான் அவன் வாங்கிக் கட்டிக்கிட்டான்… அவ குளிச்சாலா… இல்லையான்னு எனக்குத்தான் தெரியும்ன்னு சொன்னான்… நீ தேவையில்லாம எதுவும் வாய் விட்டுறாதே… அவன் திட்டு மட்டும்தான் வாங்கினான்… நீ அடியும் சேர்த்து வாங்குவே…”

“சரி… சரி… நீ ரொம்பச் சூடா இருக்கே… இந்தா நீ கேட்ட ஆயின்மெண்ட், என்னோட மனைவி உனக்காக கொடுத்துவிட்ட பத்ரி, செம்மீன் அச்சாறு எல்லாம் இருக்கு… லீமாவுக்கு அல்வா கொண்டு வந்தேன்… பட் அவ இல்லை… நீ எடுத்துக்கிட்டுப் போ…” என்றான்.

ரபீக்கின் மனைவி பத்ரி மிகவும் ருசியாகச் செய்வாள்… இங்கு வந்திருந்த போது செய்து கொடுத்தாள்… சிவா, “நல்லாயிருக்கும்மா” எனத் தின்றதால் ஒவ்வொரு முறையும் ரபீக் ஊரில் இருந்து வரும்போது சிவா அண்ணனுக்கு எனத் தனியாக பார்சல் இருக்கும்… மாநிலம், மதம், மொழியெல்லாம் பாசத்துக்கு இடையே சீனப் பெருஞ்சுவரெல்லாம் எடுத்து விடுவதில்லை… நாம்தான் மதம் சாதியென்னும் சுவர்களை எழுப்பி வைத்து அன்பைக் கொன்று கொண்டிருக்கிறோம்.

எல்லாத்தையும் வாங்கி வைத்துவிட்டு ரபீக்கிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

ரபீக் ஹசனிடம் நலம் விசாரித்து விட்டு வந்தான்.

இரண்டு முறை சிவாவைக் கடக்கும் போது அரபியில் ஏதோ ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி விட்டுச் சென்றான் ஹசன்.

சிவா எதையும் கண்டு கொள்ளவில்லை.

கொஞ்ச நேரத்தில் ரவான் வர, ஹசன் அவளுடன் கடலை போட ஆரம்பித்தான்.

ஒரே சிரிப்பு…

ஒரே சப்தம்…

இங்கே வேலை பார்க்காமல் ஏமாற்றுபவனுக்கு அள்ளிக் கொடுப்பார்கள்… வேலை பார்ப்பவனுக்கு கிள்ளித்தான் கொடுப்பார்கள்.

ரமதான் நேரத்தில் இரண்டு ஆபீஸ்பாய்க்கு என்ன வேலை ஒரு ஆள் ஊருக்குப் போ, இல்லைன்னா ரெண்டு பேரும் பதினைந்து பதினைந்து நாள் போயிட்டு வாங்க என கம்பெனிக்கு ஒரு ஆபீஸ்பாயின் சம்பளத்தை பெற்றுக் கொடுத்து லாபம் பார்க்க வேண்டும் என நினைக்கும் பஸார்தான்… ரவானுக்கும் ஹசனுக்கும் ஆயிரங்களில் சம்பளம் கொடுக்கிறான்… இந்த அரட்டைதான் பெரும்பாலான நேரத்தைத் தின்கிறது. அதிலும் பெண்கள் என்றால் இன்னும் அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்… ரெண்டு ஆபீஸ்பாஸ் எதுக்கு என்றவன் நாலு செகரெட்டரி எதுக்குன்னு யாரையும் ஊருக்குப் போகச் சொல்லலை... இவர்களுக்கெல்லாம் நாம் எப்பவுமே கிள்ளுக்கீரைதான்.

பெண் என்றால் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நகர்வது எல்லா நாட்டு ஆண்களிடமும் இருக்கும் குறைதான்.

மாலை அலுவலகம் முடிந்து அறைக்குத் திரும்ப பேருந்தில் ஏறி, தனது நிறுத்தத்தில் வந்து இறங்கியவன் ரோட்டைக் கிராஸ் பண்ணி அறை நோக்கி நடந்த போது வழியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் அருகே அவளைப் பார்த்தான்.

இரண்டு கையிலும் பிளாஸ்டிக் கவர்களில் நிரம்பிய காய்கறிகளுடன் நின்று கொண்டிருந்தாள் அவள்.

அவள்…

யமுனா.

*****


"வ யாரு தெரியுமா...? எனக் கேட்டாள் உயரமானவள்.

“யாராயிருந்தா என்ன..”

“ஓ... அப்ப அவதான் வேணும் இல்லையா…?” எனச் சிரித்தாள் உயரமானவள்.

“ஆமா அவளேதான்….”

“சரி... அப்ப ஓனர்கிட கேட்டுச் சொல்றேன்... ஏன்னா அவ இந்த உட்கா ஷாப்பை நடத்துற இந்த ஊரில் செல்வாக்குப் பெற்றவரோட பொண்டாட்டி...”

"அவ ஓனர் வைப்பா..?" சம்பத் ஆச்சர்யமானான்.

“ம்.. அவதான் வேணுன்னா வரச் சொல்லலாம்... அவகிட்ட தப்பா நடந்துக்கிட்டா போலீஸ்ல கம்பி எண்ண வேண்டியிருக்கும்... அதுக்கு ரெடியா இருக்கியா... இப்பக் கூப்பிடுறேன்..." சத்தமாய்ச் சிரித்தாள் உயரமானவள்.

“பொய் சொல்லாதே...”

"என்ன மச்சி நீ மலையாளி, பிலிப்பைனியின்னு எல்லாரையும்தான் வச்சிருக்கானுங்க... அப்படி இவளுமா இருக்கும்... அவளுக்குத் தொழில் நடக்கணும்... அவனுக்கு...." கருண் சிரித்தான்.

"ஆமா... எங்க ஆபீஸ்ல ஒருத்தனோட அப்பாவுக்கு மூணு பொண்டாட்டி... அதுல ரெண்டு இந்தியா... மலையாளியும்... கொல்கத்தாக்காரியும்...” சொன்னான் கணேஷ்.

"ஓகே... ஓகே... பொம்பளங்களைப் படைச்சதே அதுக்குத்தானே..." சிரித்தான் சம்பத்.

"வாட்...? என்ன சொல்றான்... ஏதோ தப்பாச் சொல்றான்..." மலாமா ராகவ்விடம் கேட்டாள்.

"அவன் பொம்பளங்க ஆம்பளங்களுக்குத்தான்னு சொல்லுறான்..." சிரித்தான் ராகவ்.

"எஸ் அணுஅணுவா ரசிச்சி ரசிச்சி அனுபவிக்கணும்..." என்றான் ஆங்கிலத்தில் அவளுக்குப் புரியும் விதமாக.

சம்பத்தை முறைத்தாள் மலாமா...

"என்னடி முறைக்கிறே... நீ என்ன பத்தினியா... நான் கடவுளைக் கூட பண்ணுவேன்டி..." என உடல் உறவுக்கான ஆங்கிலக் கெட்ட வார்த்தையை பலமுறை 'காட்' என்ற வார்த்தையுடன் சேர்த்துச் சொன்னான்.

"கடவுளையா சொல்றே...?" கோபமாகக் கேட்டாள்.

"ஆமாண்டி..." என்றவன் மீண்டும் அதே வார்த்தையை கடவுளுடன் இணைத்துச் சொன்னான்.

மலாமா படக்கென அவன் சட்டையைப் பிடித்து "நீ என்ன கிறுக்கனா... கடவுளையும் மதத்தையும் கேவலமாப் பேசுறவங்களை நான் எப்பவும் ஏத்துக்கவே மாட்டேன்... வெளிய போ.." என்றாள் சத்தமாய்.

அவளின் அழகிய கறுப்பு முகம் சற்றே சிவந்திருப்பதாய் சிவாவுக்குத் தோன்றியது... ஊரில் இருக்கும் உக்கிரகாளி அம்மன் நினைவில் வந்து போனாள்.

பின் சில நிமிட சமாதானங்களுக்குப் பிறகு, மலாமா எனக்கு வேண்டாம் இவள் போதுமென சில நிமிடங்களுக்கு முன் மொட்டை எனச் சொன்ன உயரமானவளை அருகே அமர்த்திக் கொண்டு உட்கா சாப்பிட ஆரம்பித்தான்.

தொடைகளில் விளையாண்ட கை மெல்ல உள்ளே ஊர்ந்தது. பிடித்துக் கொண்டாள்... இதுக்கு மேல் வேண்டாம் என்றாள்... சிரித்தவன் அவளின் மார்பில் முகம் புதைத்தான்... எழுந்து கொண்டாள்.

"ஏன்..?" என்றான் பாவமாய்.

"என்ன பண்ணனும்...?" நேரிடையாகக் கேட்டாள்.

அவன் இதைச் செய்யணும் எனக் கேட்டதற்கு அவள் ஒத்துக் கொள்ளவில்லை... “அதெல்லாம் முடியாது... இதுன்னா முடியும்” எனச் சைகை காட்டி, “ஓகேன்னா நூறு திர்ஹாம் என் கையில கொடுத்துட்டு உள்ளே வா” என அழைத்தாள்.

"இல்ல எம்புட்டு வேணுமின்னாலும் தர்றேன்... நான் உன்னோட எல்லாமே செய்யணும்..." என்றான்.

"முடியாது... சொன்னது மட்டும்ன்னா வா..." கறாராகச் சொன்னாள்.

"மத்ததுக்கு ஒகே... அதுக்கு மட்டும் ஏன் மாட்டே..." அவளின் இடுப்பில் முகம் புதைத்துக் கேட்டான்.

"எப்பவுமே ஒத்துக்க மாட்டேன்... அதோட இன்னைக்கு செய்யக்கூடாது..." மெல்லச் சொன்னாள்.

“ஓ... அந்த மூணு நாளா... அதெல்லாம் பரவாயில்லை... வா செய்யலாம்...” சம்பத் இழுத்தான்.

“சொன்னதுக்கு ஓகேன்னா வா... இல்லேன்னா பேசாம உட்கார்...” கறாராய் சொல்லிவிட்டு உயரமானவள் உள்ளே போக சம்பத்தும் பின்னாலே போனான்.

சிறிது நேரத்தில் இருவரும் அந்தத் தடுப்புக்குள் ஏதோ செய்தார்கள்... திட்டினாள்... கத்தினாள்… கடைசியில் மனுசனா... மிருகமா நீ என்றாள்... குரலில் வேதனை தெரிந்தது.

சம்பத் கடுப்பாய் வெளியில் வந்தான்...

-பரிவை சே.குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-13-by-parivai-se-kumar&i=10766

Related Articles