வெளியிடப்பட்ட நேரம்: 06-Feb-2017 , 06:42 AM

கடைசி தொடர்பு: 06-Feb-2017 , 06:44 AM

மெனிஞ்சியோமா

menji

புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களை பிரித்து அடுக்கிய போது இந்தப் புத்தகம் கையில் வந்தது. முன்னுரையில் நேசமித்ரன் ஒப்பு தெளிவான தொடக்கத்தை தந்து இருந்தார். நோய்மையின் எதிர் அழகியல், சிறுநீர் துவாரத்தில் உள்ள குழாய் உருவப்பட்ட போது உச்சத்தை அடைவதெல்லாம் ஒரு வலி கொண்டாடியால் மட்டுமே முடியும் என்ற முன்னுரையில் அழகாக மையக்கருத்து தெரிவிக்கப்பட்டு விடுகின்றது.


மூளையில் மெனிஞ்சியோமோ என்ற கட்டி வந்த ஒருவன், அது அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு அதன் தாக்கத்தில் இருந்து வெளியே வந்து மீண்டும் எவ்வாறு வாழ்க்கைப் பயணம் அமைத்துக் கொள்கிறான் என்பது மைய இழை. ஒரு கம்யூட்டர் சாப்ட்வேர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞன் மேல் ஒரு பெண் காதல் வயப்பட ஆரம்பிக்கும் போது, தொடங்கும் கதை.........


மூன்றாம் பத்திக்கு மேல் எழுத ஆரம்பிக்கும் போது உனக்கு பயம் வர வேண்டும். அப்படி ஒரு நாவல் நீ எழுத வேண்டும் என்று ஆசிரியரின் நண்பர் திருச்செந்தாழை அவர்கள் சொன்னது போன்று, 1967  க்கு போய் விட்டு அடுத்த அத்தியாயத்தில், மூளை என்பது தனி உறுப்பு அல்ல, வலது மற்றும் இடது பங்குகளை கார்பஸ் கலோசம் தான் அதை இணைக்கிறது. இதனால் வலது பக்க மூளை இடது பக்கம், மற்றும் கொஞ்சம் வலது பக்கம் கட்டுப்படுத்துகிறது, இப்போது நாம் ஒரு பக்க மூளையை எடுத்து விட்டு வெற்று இடம் ஆக்கி விட்டோம். ஆனால் பிட்ஸ் வருவது நின்று விட்டது. இது தான் நம்ம பைனல் பைல் என்ற உரையாடல் படிக்கும் போது, GOD PLAYER , FEVER மாதிரி ஒரு மெடிக்கல் த்ரில்லர் தமிழில் படிக்க போறோம் என்று ஆசையாக அடுத்து படிக்கப் போனால், இந்த இரண்டு பக்கங்கள் பற்றி முடிவு வரை கதையில் வரவே இல்லை.

புத்தகம் முழுவதம் ஒரு மனிதனின் பத்து ஆண்டு கால மருத்தவ வரலாறு பேசுகின்றது. ஒரு நோய் எவ்வாறு கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை, மற்றும் பத்து வருட தொடர் கண்காணிப்பு , கிட்டத்தட்ட தமிழாக்கம் செய்யப்பட்ட குறிப்பேடு போல காட்சி அளிக்கிறது. மருத்துவ மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகம் போல இருக்கின்றது.


கிட்டத்தட்ட அனைத்து அனுபவங்கள் நேரில் சென்று பார்த்த மாதிரியே பதிவு செய்து இருக்கிறது மாதிரி எழுத்து நடை இருக்கிறது. இது எல்லாம் எல்லா வகையான நோய்களுக்கும் பொருந்தும். அவர்கள் அனுபவிக்கக் கூடிய வேதனைகள், வலிகள் எல்லாம் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு மிகப் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியரும் அதையே தான் உணர்ந்து இருக்கிறார் என்பது அவரின் முன்னுரையில் தெளிவாக இருக்கிறது. இரண்டு பக்கங்களில் மட்டும் தான் கதாநாயகன் தனக்குள் பேசும் போது மட்டுமே இலக்கிய நயம் மிகுந்த தமிழ் உரையாடல் வருகின்றது மீதி இடங்களில்
ஸெரிபிரல் கார்டெக்ஸ்
கார்ப்பஸ் கலோசம்
மெனிஞ்சஸ்
நியூரான்
ஸெரிபிரோ ஸ்பைனல் ப்ளுய்டு
அட்ரீனல் கார்டெக்ஸ்
ப்யூட்டரி
மெலடோனின்
கார்டிகோ ஸ்டரான்
சலைன்
எப்சோலின்
வென்ப்லான்
D5
ஸ்கல்
ப்ரைன்

இந்தச் சொற்களுக்கு தமிழ் அர்த்தம் தெரியாதவர்கள் எந்த அளவிற்கு இந்த நாவல் சொல்ல வருவதை உள் வாங்க முடியும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

எனக்கு பிரதான முரணாக தோன்றும் மூன்று விசயங்கள்:


1.மெனிஞ்சியோமா ல ஒரு வைரஸ் கொழுப்பு கட்டி என்று குறிப்பிடும் இடம். வைரஸ கிருமி் கட்டி உருவாக காரணமாக இல்லை, கொழுப்பு கட்டி என்றால் லைப்போமா(lipoma). இதனால் இந்த தமிழாக்கம் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.


2. கட்டி முழுவதும் அகற்றப்படவில்லை, ரேடியேசன் கொடுக்க வேண்டும் என்று முதலில் மருத்துவர் கூறுவதாக வரும், ஆனால் அடுத்த அடுத்த ஸ்கேனில் கட்டி இல்லை, தழும்பு மட்டும் தான் இருக்கிறது.


3. சந்துரு அப்பா அறுவைச் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு போகும் போது கேட்பார். என் மகனுக்கு நான் வெஜ் என்றால் நிறைய பிடிக்கும். இந்த ஒரு மாத காலத்தில் அவன் சாப்பிடவே இல்லை. கொடுக்கலாமா? என்று கேட்கும் போது, நாங்கள் ஸ்கல்லை டச் பண்ணவில்லை. ப்ரைனை தான் டச் பண்ணி இருக்கிறோம். அதனால் நான் வெஜ் சாப்பிடலாம். ஸ்கலை டச் பண்ணி இருந்தால் தான் சாப்பிடக் கூடாது என்று பதில் சொல்லும் போது, முதலில் ஸ்கல்லை திறந்து தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஒரு பக்கத்திற்கு மருத்துவர் விளக்கி இருந்தது நினைவுக்கு வந்தது.

வழக்கமாக இணையதளத்தில் புழங்குபவர்களுக்கு மருத்துவர்கள் என்றால் பிடிக்காது. எப்படி இந்த கதையில் மட்டும் இன்னும் அதைக் காணவில்லை என்று நினைக்கும் போது, கதையின் இறுதியில் வழக்கம் போல வில்லன் ஆக காட்டும் போது வியப்பு எதுவும் வரவில்லை.


எப்பவும் வேற ஒரு மருத்துவரிடம் காட்டும் போது அவர் முதல் மருத்துவர் தந்த மருந்துகள் வேலை செய்யவில்லை என்பதை கண்டு பிடித்து, அதற்கு அடுத்த லெவல் மருந்துகள் தருவது வழக்கமான ஒன்று. அதை மிகைப்படுத்தி அதற்கு முன் வந்த மருத்துவர் வில்லனாக சித்தரிப்பு செய்வது , ஒரு வெகு ஜன சிந்தனையில் ஒத்துப் போகின்றது. மருந்துகள் எடுத்துக் கொள்ள மறந்த நாட்களில் தான் வலிப்பு வருகின்றது என்பதை சந்துருவே ஒத்துக் கொண்டு இருக்கிறான்.


திரும்ப திரும்ப வலிப்பு வரும் காரணமும் அது தான். அதை விட்டு விட்டு, இரண்டாவது மருத்துவர் எழுதி தந்த மருந்து  தான் என்பது போல அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி வலிந்து திணிக்கப்பட்டு உள்ளது போல இருக்கிறது. இந்த புதிய மருந்தை எடுத்துக் கொள்ளா விட்டாலும் வலிப்பு வரும் என்ற நிதர்சனம் பதிவு செய்யப்பட்டு இருந்தால் இந்த புத்தகம் முழுமையாகி இருக்கும்.

நடுவில் ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் வரும். அதில் உள்ள எழுத்துப் பிழை- measles- measures- measurement-  அளவு அடுத்த பதிப்பில் திருத்தி விடவும்.

என்ன இருந்தாலும்
Meningioma - a complete monogragh in Tamil


 

Related Articles