வெளியிடப்பட்ட நேரம்: 18-May-2019 , 04:31 PM

கடைசி தொடர்பு: 18-May-2019 , 04:31 PM

Mr. லோக்கல் - திரை விமர்சனம்

local

கோடைவிடுமுறையில் கிளறிய குப்பை Mr. லோக்கல்

ஒரு தடவை அடிபட்ட பிறகு புத்தி வரனும், அடி வாங்கி வாங்கி புத்தியே வரலைன்னா எப்படி? கதை தான் சீமராஜாவுக்கு பிறகு மிஸ்டர்.லோக்கல் பார்க்கப் போனது. கோடைகால விடுமுறையில குழந்தைகளோட ஜாலியா படம் பாக்கலாம்னு போய் குழந்தைகளோட சேர்ந்து தூங்கி விழுந்தது தான் மிச்சம்.

உலக சினிமாவிலிருந்து கதை எடுத்து படம் பண்ணுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கோம். தமிழ் சினிமாவிலிருந்தே கதை எடுத்து இன்னொரு தமிழ் சினிமா பண்ணியிருக்கானுங்க பெயரும் லோக்கலு, கதை அதை விட லோக்கலோ லோக்கல்.கதை என்னான்னா "ஒரு பெரிய பணக்கார பொண்ணை எதிர்க்கிற ஏழை கதாநாயகன், கடைசியா எதிர்த்து எதிர்த்தே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறார்".

காமெடி என்ற பெயரில் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சதீஷ், யோகி பாபு எல்லோரும் ஏதோ பண்றாங்க. சிரிக்கலாமா? வேணாமான்னு நாமதான் முடிவு எடுக்கனும்.

நயன்தாராவோட கால்சீட்டை வீணாக்கியிருக்கிங்களேடான்னு சாதாரண நயன் ரசிகரும் கேட்டுவிடுகிற நிலைதான். பொண்ணுக்கு முக்கியத்துவம் தருகிற கதாப்பாத்திரம்னு சொல்லி ஏமாத்தியிருப்பாங்க போல.ஒரு பாடலும் முணுமுணுக்குற அளவு கூட இல்லாத அளவுக்கு இசையமைச்சிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. எல்லோரும் அழகாக இருக்கிறார்கள் என்பது மட்டும் ஒளிப்பதிவாளரின் கை வண்ணம். வெளிநாடு எல்லாம் போறாங்க, கதைக்கு சம்பந்தமே இல்லாம.....

வசனம் என்கிற பெயரில் ஆண்டி இன்டியன், சீமான், மன்சூர் அலிகான் சிறைக்கு போவது, வள்ளுவர் கோட்டத்துல போராடுறது என அரசியல் நையாண்டி என்ற பெயரில் எரிச்சலடைய வைக்கிறார்கள்.

குப்பைன்னு தெரிஞ்சு போச்சு அதை கிளறி கிளறி ஏன் குப்பைன்னு சொல்லனும்னு நினைச்சோம். இதெல்லாம் எரிச்சு போட வேண்டிய குப்பை. இனிமேல் இப்படி குப்பையெல்லாம் வரவே கூடாதுன்னு தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

- கருத்தகிளி

Related Articles