செய்திகள் இந்திய செய்திகள்
வெளியிடப்பட்ட நேரம்: 15-Jul-2019 , 03:54 PM
கடைசி தொடர்பு: 15-Jul-2019 , 03:55 PM
Share
தேசிய புலனாய்வு அமைப்பின் ( என்.ஐ.ஏ., ) அதிகாரம் தொடர்பான சட்ட திருத்த மசோதா மீது விவாதம் லோக்சபாவில் நடந்தது. தேசிய நலன் தொடர்பான மசோதாவுக்கு எம்பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவில் விவாதத்தின் போது வேண்டுகோள் விடுத்தார். இந்த மசோதா நாட்டின் நலன் தொடர்பானது. நாட்டில் வளர்ந்து வரும் தேச விரோத பயங்கரவாதிகளை கட்டுப்டுத்த தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரம் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. நேற்று கூட தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகளில் ஒருவரான செய்யது தாக்கீர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு நான் உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இது போன்ற பயங்கரவாத செயல்கள் வேரோடு களையப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது. பயங்கரவாதத்தில் எந்த பயங்கரவாதி எந்த மதம் என்பது முக்கியமல்ல. யாரையும் குறி வைத்தோ, யாரையும் காயப்படுத்தவோ அரசுக்கு நோக்கமல்ல. இதற்கு அனைத்து எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார். காங்கிரஸ் தரப்பில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாட்டை போலீஸ் அதிகாரம் கொண்டதாக மாற்ற முயற்சிப்பது சரியல்ல என வாதிட்டனர்.