வெளியிடப்பட்ட நேரம்: 07-Mar-2018 , 10:26 AM

கடைசி தொடர்பு: 08-Mar-2018 , 06:16 AM

பெர்ஃப்யூம் -புத்தக விமர்சனம்

FB_IMG_1520398537511

நேற்று இரவு ஒருவரைச் சந்தித்தேன் ரமேஷோ ரக்சனோ ஏதோ ஒரு பெயர் ஞாபகமில்லை. கையில் ஒரு பெட்டி வைத்திருந்தார் கூச்சமில்லாமல் அது என்ன என்று கேட்டேன் 'பெர்ஃப்யூம்' என்றார், திறந்தும் காட்டினார் பத்து வகை பெர்ஃப்யூம் இருந்தது. 'ஆண்களுக்கான பெண்பால் பெர்ஃப்யூம்' என்றார் சிரித்துக்கொண்டே.

முதலாவதாக பெர்ஃப்யூம் என்றொரு பெர்ஃப்யூம் எடுத்தார் டாடி நினைவாக தனக்கு தோழி தந்ததென்றார்.

அடுத்து ' V for Violet' ஐ எடுத்தார் 'V for victory' இல்லயா என்றேன். விளக்கம் சொன்னார் இறுதியில் வியர்த்தது.

கறுப்பு வெள்ளையாய் இருந்தது பெயரும் பொருத்தமாக 'சதுரங்கம்'. சரி என்று முகர்ந்து பார்த்தேன். நாசியில் அடித்தது.

'நியூட்டனின் மூன்றாம் விதி'ஐ  பார்த்ததும் பிஸிக்ஸ் கிளாஸ் ஞாபகம் வந்தது. அதை யோசித்ததற்கு தண்டனையாய் பிடரியில் ஒருத்தி அடித்தார்.

'முடிவிலி'யை முகரச் சொன்னார். மூக்கை கொஞ்ச நேரம் அப்பிடி இப்பிடி இழுத்துக் கொண்டிருந்தேன்.

Don't get confused என்று ஸ்டைலாக சொல்லிவிட்டு 'பதினேழு இரவுகளுக்குள்' தள்ளிவிட்டார். சுவர் முழுக்க மோதி தள்ளாடி நிதானிக்க கை தந்து வெளியே இழுத்து......

'முத்தமிடும் ஸ்மைலி' ஒன்று அனுப்பினார் அழகான வலி தந்தது.

இடையே 'மெர்லின் என்ற அவள்' வந்தாள் அவளை தெரிந்து கொள்ள வேட்டை விலங்காய், வேடனாய், மீனுக்கு காத்திருக்கும் கொக்காய் இப்படி என் குணங்கள் மாறிக் கொண்டே இருந்தன

ஒன்பதாவதை எடுக்க 'நீல ராத்திரி' ஆகிப்போனது இதில் கண்ணீர் வாசனை வரும் என்றார். அவர் பொய் சொல்வதில்லை என்று நினைக்கிறேன்.

இறுதி பெர்ஃப்யூமை கையில் வைத்துக் கொண்டு 'திருடப்பட்ட கதை' ஒன்று சொல்லட்டா என்றார், கேட்க ஆவலாய் இருந்தேன். பாவம் அந்த கரப்பான் பூச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

என் நெஞ்சு மூச்சோடு ஏறி இறங்க அவதானித்து விட்டு 'இதற்கே மூச்சு வாங்கினால் எப்படி அடுத்த தடவை சந்திக்கும் போது பாருங்கள்' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

நான் ஒரு முத்தம் கொடுத்திருக்கலாம்.

-SK ப்ரதீஷ்.

(வாசிப்போம் நேசிப்போம் குழுவிலிருந்து)

Related Articles