வெளியிடப்பட்ட நேரம்: 15-May-2019 , 02:26 PM

கடைசி தொடர்பு: 15-May-2019 , 02:26 PM

இரவில் மூடப்படும் காவல் நிலையம்

police

போத்தனுாரிலுள்ள பேரூர் சரக அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்  இரவு நேரத்தில் பூட்டப்படுகிறது. 24 மணி நேரமும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் இரவானால் பூட்டப்படுவதால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள கிணத்துக்கடவு க.க.சாவடி, மதுக்கரை, ஆலாந்துறை, தொண்டாமுத்துார், காருண்யா நகர், வடவள்ளி மற்றும் பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு அந்தந்த பகுதிகளில் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. பெண்களுக்கான அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போத்தனுார் சாரதா மில் ரோட்டில் செயல்படுகிறது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., மற்றும், 15 போலீசார் பணியில் இருக்க வேண்டும். தற்போது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட, ஏழு பேர் மட்டுமே உள்ளனர். இப்பகுதிகளில் நடக்கும் குடும்ப பிரச்னை, காதல் திருமணம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கள விசாரணை மேற்கொள்ள குறைந்தது மூன்று பேர் செல்ல வேண்டும்.

அப்போது ஸ்டேஷனில் இருவர் மட்டுமே இருப்பர். யாரேனும் ஏதேனும் பிரச்னை செய்தால் எந்த பாதுகாப்பும் இல்லை. போலீசார் பற்றாக் குறையால் இரவு 9:00 மணிக்கு ஸ்டேஷன் பூட்டப்படுகிறது. வெளியூரில் இருந்து வந்து செல்லும் இன்ஸ் பெக்டர் அதற்கு முன்பே 'டாட்டா' காட்டி விடுவதாக புகார் உள்ளது. அதுவரை இரவில் தனியாக இருக்கும் பெண் கான்ஸ்டபிளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.

இதே ஸ்டேஷனை ஒட்டிதான் மாநகர தெற்கு பகுதி குற்றப்பிரிவு உதவி கமிஷனர் அலுவலகமும் செயல்படுகிறது. இங்கும் இரவு நேரத்தில் யாரும் இருப்பதில்லை. துப்பாக்கி, ரவுண்ட்ஸ், ரிவால்வர் உள்ளிட்ட ஆயுதங்களும், ஸ்டேஷனில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் என்ன தைரியத்தில் ஸ்டேஷனை இரவில் பூட்டிச் செல்கின்றனர் என்பது தெரியவில்லை.போலீசார் தங்களை பாதுகாத்துக்கொள்ள இயலாத அவல நிலையே உள்ளது. இது குறித்து கேட்க இன்ஸ்பெக்டர் வினோதினியை பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை.

இது போன்ற 'டம்மி' போலீஸ் ஸ்டேஷன்களை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு தரப்போகிறது நம் காவல்துறை? போலீசார் தங்களை பாதுகாத்துக்கொள்ள இயலாத அவல நிலையே உள்ளது. ஒரு போலீஸ் ஸ்டேஷன் இரவானால் பூட்டப்படுவதால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Articles