வெளியிடப்பட்ட நேரம்: 11-May-2019 , 05:25 PM

கடைசி தொடர்பு: 11-May-2019 , 05:25 PM

பிரபல நடிகை தயாரிக்கும் புதுப்படம்

kajal

நடிகை காஜல் அகர்வார் தயாரிப்பாளர் ஆகப் போகிறார் என சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தன. அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்று காஜல் வழங்கும் திரைப்படம் ஆரம்பமாகியுள்ளது.

தெலுங்கில் 'பெல்லி சூப்புலு' படத்தைத் தயாரித்த ராஜ் கந்துகுரியின் மகன் சிவா கந்துகுரி இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். பரத்குமார் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(மே 11) ஆரம்பமானது. காஜல் அகர்வால் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். இந்தப் படத்தை காஜல் அகர்வாலின் மேனேஜகர் ரோன்சன் இணைந்து தயாரிக்கிறார்.

படத்திற்கு 'மனு சரித்திரா' எனப் பெயர் வைத்திருக்கிறார். காதலில் விழுவது ஒரு மகிழ்ச்சியான வலி என்பதைச் சொல்லும் படம் இது.

Related Articles