செய்திகள் இந்திய செய்திகள்
வெளியிடப்பட்ட நேரம்: 13-Aug-2020 , 10:42 AM
கடைசி தொடர்பு: 13-Aug-2020 , 10:44 AM
Share
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார். எனது தந்தை பிரணாப் முகர்ஜி நலமுடன் உள்ளார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த தகவல் வெளியான நிலையில் அவரது மகன் மறுப்பு தெரிவித்துள்ளார். அபிஜித் முகர்ஜியின் மறுப்புக்கு முன் வந்த செய்தி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 12.07 மணிக்கு அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு, மூளையில் கட்டி இருந்ததை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை சற்று மோசமாக உள்ளதாகவும், தற்போது செயற்கை சுவாசம் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல் நிலையை தொடர்ந்து உற்றுக் கண்காணித்து வருவதாகவும் ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.