வெளியிடப்பட்ட நேரம்: 11-Jun-2019 , 09:31 AM

கடைசி தொடர்பு: 11-Jun-2019 , 09:31 AM

சாரல்காலம் பகுதி-12

college boys

ஹரியின் முகத்தில் அந்த இருளிலும் ஒளி வீசும் அளவுக்கு உற்சாகம் பொங்கியது. தீபாவிற்கு சொல்லவே வேண்டாம், தான் காதலிக்க துவங்கியது தெரிந்ததில் இருந்தே பயங்கர உற்சாகத்தில் தான் இருந்தாள்.

நாம் நினைக்கும் நேரத்தில் நம்மை காதலிப்பவர்கள் எதிரில் தோன்றினால் போதாதா? வேறு என்ன வேண்டும் இந்த உலகில் நமக்கு?

சூர்யாவை பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போன தீபா, காயத்ரி அருகில் இருப்பதை உணர்ந்ததும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள்.

காயத்ரிக்கு ஹரியை பார்த்ததும் இந்நேரத்திற்கு கூட சைட் அடிப்பதற்கென்று வந்து நின்று கொண்டிருக்கிறானா என்றுதான் தோன்றியது.காயத்ரி தீபாவை அழைத்துக் கொண்டு சென்று படுத்துக் கொண்டாள். தீபாவிடம் பேச இப்போது எந்த வார்த்தையும் இல்லை, தப்பித் தவறி வாயை திறந்தால் ‘I LOVE SURYA’ என்றுதான் வரும்.

நம் மனதில் எந்த கவலையும் இல்லை என்றால் படுத்த உடனே உறங்கி விடுவோம். ஏதேனும் கவலை இருந்தால் உறக்கம் நம்மை தழுவ விடாமல் கவலை நம் மனதை அரித்து கொண்டிருக்கும்.

நீங்கள் எப்போதாவது உறக்கம் வராத அளவுக்கு உற்சாகத்தில் மிதந்து இருக்கிறிர்களா? நிச்சயம் முதல் காதலை உணரும் பொழுதுதான் அதை முழுதாக அனுபவிக்க முடியும்.

தீபா இப்போது அந்த சொர்க்கத்தைத்தான் அனுபவித்து கொண்டிருக்கிறாள்.

ஹரியை பற்றி சொல்லவா வேண்டும், காயத்ரி சென்றவுடன் பெருமையாக சூர்யாவை ஒரு பார்வை பார்த்தான். சூர்யா ஒன்றும் பேசாமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

“ஒரு தலையா  காதலிக்கறப்பவே இந்த பார்வை பாக்கறானே, அந்த பொண்ணும் காதலிக்க ஆரம்பிச்சுட்டா போன ஜென்மத்துல நான்தான் தாஜ்மஹால கட்டுனேன், இப்போ அது எனக்கு வேணும்னு அடம் பிடிப்பான் போல இருக்கே?”

ஹரி “என்னடா பார்க்கற?”

சூர்யா “ஒன்னுமில்லைடா”

ஹரி “இப்ப என்ன சொல்ற?”

சூர்யா “என்ன சொல்ல சொல்ற?”

ஹரி “காயத்ரி வந்து பார்த்துட்டு போனத கேட்கறேன்”

சூர்யா “அதுக்கென்னடா  இப்போ?”

ஹரி “நாம நினைக்கும் போது அவங்க வந்தாங்கனா என்ன அர்த்தம்?”

சூர்யா “என்ன அர்த்தம்?”

ஹரி “இந்த காதல் கட்டாயம் ஜெயிக்கும்னு அர்த்தம்”

சூர்யா “அப்படினு பகவத் கீதைல போட்டுருக்கா?”

ஹரி “ஏன்டா நீ ஊக்குவிக்கவே மாட்டியா?”

சூர்யா ” என்னடா ஊக்கு விக்கறியா? பின்னு விக்கறியானுகிட்டு, நீ முடிவெடு நான் சப்போர்ட் பன்றேன், உன் வாழ்க்கைக்கு என்னை முடிவு எடுக்க சொல்லாதே?”

ஹரி “ஏன்டா?”

சூர்யா “உன் குடும்ப விசயத்துல கூட தலையிடலாம், எனக்கு உரிமை இருக்கு, ஆனா காதல்ல அப்படி இல்லை”

ஹரி “ஏன்டா மச்சான், உனக்கு இல்லாத உரிமையா?”

சூர்யா “இந்த மரியாதைய காப்பாத்திக்கனும், கொஞ்சம் கொஞ்சமா நான் தலையிட்டனா நாளைக்கு நீயே என் சொந்த விஷயத்துல தலையிடாதனு சொல்லிடுவ அதான்”

ஹரி “நான் அப்படிலாம் சொல்லுவனா?”

சூர்யா “நீ சொல்ல மாட்ட? ஆனா அந்த காதல் உன்னை சொல்ல வைக்கும்”

ஹரி “டேய் என்னடா இப்படி சொல்ற? அப்படிப்பட்ட காதல் எனக்கு வேணாம் மச்சான்”

சூர்யா “ரொம்ப குழப்பிக்காதடா, அவளை உனக்கு பிடிச்சுருக்கு, உன்னை அவளுக்கு பிடிக்க வைக்க என்ன பண்ணனும்னு யோசி”

ஹரி “நீதான்டா குழப்பற, அவளை காதலிக்க சொல்றியா? வேணாம்னு சொல்றியா?”

சூர்யா “நீதான் புரிஞ்சுக்க மாட்டேங்கற”

ஹரி “என்ன புரிஞ்சுக்கலை?”

சூர்யா “நீ ஏற்கனவே அவளை காதலிக்க ஆரம்பிச்சுட்ட?”

ஹரி “அப்படியா?”

சூர்யா “ஆமா, கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு, உனக்கு அவ நினைப்ப தவிர வேற ஏதாவது ஞாபகத்துல இருக்கா? இருக்காது. ஆனா இப்படியே இருந்தா உன்னால அவளை காதலிக்க வைக்க முடியாது”

ஹரி “என்ன சொல்றனு புரியலைடா”

சூர்யா “நீ அவளை காதல் மட்டும் பண்ணா திரும்ப அவ உன்னை காதலிக்க மாட்டா”

ஹரி “வேற?”

சூர்யா “இப்போதைக்கு உன்னோட கவனம் முழுக்க அவளை காதலிக்கறதுல இருக்க கூடாது, அவளை காதலிக்க வைக்கறதுல இருக்கனும்”

ஹரி “கொஞ்சமா புரியுது, ஆனா தெளிவா புரியலை”

சூர்யா “அப்புறம் புரிய வைக்கறேன், உனக்கு அவ வேணுங்கறதுல நீ தெளிவா இருக்க தானே?”

ஹரி “ஆமா”

சூர்யா “விடு பார்த்துக்கலாம்”

ஹரி “தேங்க்ஸ் மச்சி”

சூர்யா “ஆனா ஒரு கன்டிஷன், ஒருவேளை ஏதாவது ஒரு கட்டத்துல அவ உன்னை விட்டுட்டு போய்ட்டா நீ அவளையே நினைச்சு அழுதுட்டு இருக்க கூடாது”

ஹரி “அதான் நீ இருக்கல்ல, என்னை பத்திரமா பார்த்துக்க மாட்ட”

சூர்யா “ஆமாடா, பால் குடிக்கற குழந்தை நீ, பெட்ல உச்சா போகாம நான் பத்திரமா பார்த்துக்கறன்”

ஹரி ” அப்ப்டி இல்லை இனிமேல் எது செஞ்சாலும் உன்னை கேட்டுட்டுதான் செய்வேன்”

சூர்யா “சரி அப்ப வா படுக்கலாம், காலைல சீக்கிரமா எழனும், நிறைய வேலை இருக்கு”

ஹரி “என்ன வேலைடா?”

சூர்யா “காதலிக்க போற!!”

ஹரி “காதலிக்க போறனா? என்னடா களை புடுங்க போற மாதிரி சொல்ற?”

சூர்யா “அப்படித்தான் சொல்லுவேன், உனக்கு இது உணர்வு சம்பந்தபட்ட விஷயம், நானும் அப்படி பார்க்க முடியாது”

ஹரி ” வேற எப்படி பார்க்க போற?”

சூர்யா “நமக்கு எதிரா ஒரு பசங்க குருப் இருந்தா என்ன பன்னுவோம்?”

ஹரி “என்ன பன்னுவோம்? அவங்களை முழுக்க கவனிச்சுகிட்டே இருப்போம், அவங்க பலம், பலவீனம் எல்லாம் தெரிஞ்சுப்போம், சரியான சமயம் கிடைக்கறப்ப தட்டுவோம், ஆனா அது மாதிரி காதலிக்க முடியுமா?”

சூர்யா “வேற வழி, நமக்கு என்ன வழி தெரியுமோ அதுலதான் செய்ய முடியும், தெரிஞ்ச வழிலயே முயற்சி பன்னுவோம்”

ஹரி “சரி, நீ சொல்ற மாதிரியே கேட்கறேன், நாளைக்கு செட் ஆகி கல்யாணம்னு வந்தாலும் கையெழுத்து போட நீதான் வரனும், விட்டுட்டு போய்ட்டாலும் நான் புலம்பறத கேட்கவும் நீதான் வரனும்”

சூர்யா “ரெண்டுமே செய்ய எந்த நண்பனும் சலிச்சுக்க மாட்டான். உன் நல்ல நேரம் பசங்க எதுவும் நோண்டலை, காலையில என்ன ஆகுதுனு பார்க்கலாம்”

ஹரி “எனக்கென்னமோ காலைல பெருசா ஒன்னும் ஆகாதுனுதான் நினைக்கறேன்”

சூர்யா ” எப்படி சொல்ற?”

ஹரி “விசேசத்த பார்த்த இல்லை? எத்தனை பொண்ணுங்க னு, ஒவ்வொருத்தனும் ஆளுக்கு ஒன்னு செலக்ட் பன்னிகிட்டாங்க, அவன் அவன் அவனோட செலக்சன் பின்னாடி சுத்தவே நேரம் பத்தாது. கேள்வி கேட்கறதுக்கு ஒருத்தன் தான் இருக்கான்”

சூர்யா “யாரு?”

ஹரி ” நம்ப கண்ணன் தான்”

சூர்யா “எனக்கென்னமோ அவனும் ஒன்னை செலக்ட் பன்னிட்டானுதான் நினைக்கறேன்”

ஹரி “அப்படியா, யார்னு தெரியுமா?’

சூர்யா “தெரியலை, எப்படியும் காலைல தெரிஞ்சுரும்”

ஹரி “சரி வாடா போய் படுக்கலாம், காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும்”

சூர்யா “சரி வா, காதலிக்க ஆரம்பிச்சுட்ட, இனி உன் வாழ்க்கையே மாற போகுது”

இருவரும் பொறுமையாக நடந்து அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கே ஆளுக்கொரு பக்கம் புரண்டு கொண்டு இருந்தார்கள். கண்ணன் ஒரு மூலையில் ஒடுங்கி படுத்திருந்தான், இவர்களும் தங்களால் முடிந்தவரை அனைவரையும் புரட்டி போட்டு விட்டு படுத்தனர். இருவரும் மிகவும் யோசித்து கொண்டே இருந்து, பிறகு அவர்களை அறியாமல் உறங்கினர்.

-தொடரும்

-கதிர் ராத்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்: https://www.kalakkaldreams.com/article.php?a=saralkaalam-part-11-by-kathirrath&i=9750

Related Articles