வெளியிடப்பட்ட நேரம்: 24-Oct-2018 , 10:43 AM

கடைசி தொடர்பு: 24-Oct-2018 , 10:43 AM

சர்கார் வெளியீடு தேதி மாற்றம்

images (3)

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், வரலட்சுமி, கீர்த்திசுரேஷ் நடித்த சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளி வருவதாக இருந்தது.

சர்கார் வணிக ரீதியாக நல்ல விற்பனையானதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. முதன் முறையாக போலந்து நாட்டில் 4 பிரபல தியேட்டர்களில் படம் வெளியாகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளிலும் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவி USA என்ற நிறுவனங்கள் வினியோக உரிமையை பெற்று இருக்கிறது.

6ம் தேதி தீபாவளிக்கு வெளியிட இருந்த திரைப்படம் முன்கூட்டியே, அதாவது 2ம். தேதியே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் சென்சார் போர்ட்க்கு திரைப்படத்தை அனுப்பி சர்ட்டிபிகேட் பெற்று முன்கூட்டியே திரையிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்து உள்ளதாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தீபாவளியன்று பெரிய திரைப்படங்கள் வசூல் வேட்டையில் இறங்குவதால் முன்கூட்டியே கல்லா கட்ட திரைப்படம் வெளியிட போவதாக தெரிகிறது.

ஆக மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும்.

-சினிமா பாபு

Related Articles