வெளியிடப்பட்ட நேரம்: 15-May-2019 , 07:15 PM

கடைசி தொடர்பு: 15-May-2019 , 07:15 PM

சிரித்த அமிதாப் நெகிழ்ந்த எஸ்.ஜே. சூர்யா

manstar

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் மான்ஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி:


எலியுடன் போராட்டம் தான் கதையா?


ஆமாம். ஆனால் இதில் எலி எலியாக தான் இருக்கும். மனிதர்கள் போன்ற குறும்புகளை செய்யாது. எலியை மையப்படுத்திய கதை என்றாலும் கிராபிக்ஸ் எலியை பயன்படுத்தாமல் நிஜ எலியை நடிக்க வைத்தே எடுத்தோம். நெல்சன் கதை சொல்ல தொடங்கும்போதே நீங்களும் எலியும் என்றுதான் தொடங்கினார். என் வேடத்தின் பெயர் அஞ்சனம் அழகிய பிள்ளை என்றார். அது எனக்கு பிடித்து இருந்தது. வள்ளலார் பக்தராக ஈ, எறும்புக்கும் பாவம் நினைக்காத ஒரு பொறியாளர். அவனது காதலுக்கு எலி எப்படி வில்லனாகிறது என்பதே படம்.


உங்களுடன் நடிக்க பயந்ததாக பிரியா பவானி சங்கர் சொன்னாரே?


அது சுவாரசியத்துக்காக சொன்னது. அவர் மாணவியாக இருந்தபோது என் படங்களை பார்த்திருக்கிறார். எனவே அந்த எண்ணத்திலேயே கூட யோசித்து இருக்கலாம். குடும்பத்து குத்துவிளக்காக நடிக்கும் நாம் எஸ்.ஜே.சூர்யா படத்தில் எப்படி நடிப்பது என்று தயங்கி இருக்கலாம். சிம்ரன், நிலாவுக்கு பிறகு எனக்கு பொருத்தமான ஜோடியாக அமைந்துள்ளார்.அமிதாப் பச்சனுக்கு மான்ஸ்டர் கதை தெரியுமா?


தெரியும். பட ரிலீஸ் தேதி உறுதியானதும் கூறினேன். படத்தின் கதையை கேட்டு நன்றாக சிரித்தார்.


உங்கள் படங்கள் ரிலீஸ் சிக்கலில் சிக்குகிறதே?


ஆமாம். மான்ஸ்டர் வந்த பிறகு அவை எல்லாம் பிரச்சினைகள் முடிந்து வெளியில் வந்துவிடும்.


Related Articles