வெளியிடப்பட்ட நேரம்: 03-Jun-2019 , 09:20 AM

கடைசி தொடர்பு: 03-Jun-2019 , 09:20 AM

கீழடியில் அருங்காட்சியம்

keezhadi

கீழடியில் அகழாய்வு பணியின் போது கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், இந்திய தொல்லியல் துறையின் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த போது சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட, பண்டைய தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிய வகை பொருட்களும் கட்டிட அமைப்புகளும் கிடைக்கப் பெற்றன.ஆனால் அந்தப் பணியை தொடர மத்திய அரசு முன்வராத நிலையில் தமிழக தொல்லியல்துறை 4ஆம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஆண்டு மேற்கொண்டது. அப்போது கூடுதலாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கப் பெற்றன.

தொடர்ந்து கீழடியில் உள்ள அரசு பள்ளி அருகே 2 ஏக்கர் 10 செண்ட் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டதோடு அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிக்காக 1 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இந்த நிலையில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை தூய்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் அருங்காட்சியத்திற்காக எல்லை கல் நடும் பணியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே உச்ச நீதிமன்ற மதுரை கிளை அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. மத்திய அரசு கவனிக்காமல் இருப்பதால் மாநில அரசு இம்முயற்சியை மேற்க்கொண்டுள்ளது.
Related Articles