வெளியிடப்பட்ட நேரம்: 01-Oct-2021 , 12:44 PM

கடைசி தொடர்பு: 01-Oct-2021 , 12:44 PM

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வென்றது

airindia3

மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக தாமதமானது.

பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த பணிகளை முடுக்கி விட்ட மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15-ந் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து.

இந்த நிலையில், ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்குவதற்காக டாடா குழுமம் அளித்த ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர் இந்தியா, டாடா குழுமத்துக்கு கைமாறப்பட்டால், இந்த விமான நிறுவனத்தை 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைவசப்படுத்தும் வாய்ப்பு அதற்கு கிடைக்கும். ஏனெனில் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் 1932-ம் ஆண்டு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தைதான் மத்திய அரசு கடந்த 1953-ம் ஆண்டு தேசிய மயமாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 'ஏர் இந்தியா விமான நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர்க்கவே, அதில் மத்திய அரசின், 100 சதவீத பங்குகளை விற்கும் முடிவு எடுக்கப்பட்டது,'' என, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

கடும் நஷ்டத்தில் இயங்கும், பொதுத் துறை நிறுவனமான, ஏர் இந்தியாவில் உள்ள தன் பங்குகளை விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இது குறித்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது:

கடந்த, 2007ல், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தில் இருந்து அதை மீட்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது ஓரளவுக்கு நன்றாக இயங்கினாலும், நாளொன்றுக்கு, 20 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.பல ஆண்டுகளாக நஷ்டம் சேர்ந்து, தற்போது, அது, 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு மேலும், அதை மீட்க மத்திய நிதி அமைச்சரிடம் உதவி கேட்கமுடியாது.

இந்த சூழ்நிலையில், நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை, 100 சதவீதமும் முழுமையாக விற்பது அல்லது நிறுவனத்தை இழுத்து மூடுவது என்ற இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன.அதனால் தான் பங்குகளை விற்று, தனியார் மயமாக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு முன், இந்த நடவடிக்கை எடுக்கலாமா என்பதில் மத்திய அரசு இரட்டை மனநிலையில் இருந்தது. தற்போது உறுதியான முடிவு எடுக்கப்பட்டுஉள்ளது. ஏர் இந்தியாவை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அடுத்ததாக, நிதி தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் இருந்து தகவல் கேட்கப்பட்டுள்ளது. வரும் மே அல்லது ஜூன் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விமான போக்குவரத்து துறை அமைச்சராக திரு ஜோதிர் ஆதித்யா மாதவ்ராவ் சிந்தியா ஜூலையில் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடதக்கது.

Related Articles