வெளியிடப்பட்ட நேரம்: 16-Jul-2019 , 07:23 AM

கடைசி தொடர்பு: 16-Jul-2019 , 07:23 AM

திருப்பதி கோவிலில் தரிசனம் நிறுத்தம்

thirupathi


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று, நாளை 28 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது. அன்னதான கூடமும் மூடப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும் ‘ஆனிவார ஆஸ்தானம்’ நடைபெற உள்ளது. இதனால் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோயில் சுத்தப்படுத்தும் பணி இன்று காலை 6 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும்.

எனவே அதிகாலை 3 மணி முதல் பகல் 12 மணி வரை என மொத்தம் 9 மணிநேரம் பக்தர்களுக்கு அனுமதியில்லை. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உட்பட சேவைகள் நடந்தாலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதனால் இன்று 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தின் கடைசிநாள் அன்று ஆனிவார ஆஸ்தானம் என்ற பெயரில் வருடாந்திர கணக்குகள் முடிக்கப்பட்டு, புதிய கணக்குகள் தொடங்கப்படும். அன்றைய தினம் ஏழுமலையானுக்கு வருடாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்
 இதற்கிடையில் நாளை அதிகாலை சந்திர கிரகணம் நிகழ்வதால், இன்று மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மறுநாள் சந்திர கிரகணம் முடிந்து ஆனிவார ஆஸ்தானம் நடத்திவிட்டு அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

 

அதன்படி, இன்று மாலை முதல் நாளை வரை 19 மணிநேரமும் இருநாட்களில் மொத்தம் 28 மணிநேரமும் தரிசனம் நிறுத்தப்படுகிறது. மேலும் அன்னப்பிரசாத கூடமும் இன்று மாலை 5 மணி முதல் நாளை மதியம் 12 மணிவரை மூடப்படுகிறது.

Related Articles