வெளியிடப்பட்ட நேரம்: 22-Jul-2019 , 10:19 AM

கடைசி தொடர்பு: 22-Jul-2019 , 10:19 AM

சூடு பிடிக்கும் வேலூர் பிரச்சாரம். அசத்தும் ACS

images (1)

நடக்க இருக்கும் வேலூர் பாராளுமன்ற தேர்தலால் மத்திய அரசுக்கு எந்த லாபமோ, நஷ்டமோ கிடையாது. ஏனெனில் மெஜாரிட்டிய தாண்டிய அசுர பலத்துடன் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியை பிடித்துள்ளார். இங்கு நடைப்பெறும் தேர்தல் வேலூர் பாராளுமன்ற தொகுதி மக்களை யார் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார்கள் என்று தீர்மானிக்க கூடிய தேர்தல்.

மக்களே நன்றாக சிந்தியுங்கள். வேலூரின் முன்னேற்றம். நம்முடைய முன்னேற்றம். அடித்தட்டு மக்களை உயர்த்தக்கூடிய, பாமர மக்களின் நலனில் அக்கறையுள்ள வேட்பாளரை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தல் இது. நம்முடைய தொகுதியின் தேவையை உணர்ந்து தான் தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பி.பன்னீர் செல்வமும் வேலூர் தொகுதியின் தேவைக்கு இரண்டு அதிமுக வேட்பாளர்கள் அவசியமென கருதி அண்ணன் முகமது ஜானை ராஜ்யசபா எம்.பியாகவும், என்னை மாநிலங்களவை எம்.பியாகவும் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

இவ்வளவு உறுதியாக மாநிலங்களவை உறுப்பினர் என சொல்லிக் கொள்வதற்கு நிச்சயமாக இந்த தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கட்சி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதால் தான்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 தொகுதியிலும் எம்.பி அலுவலகம் திறக்கப்பட்டு மக்களின் நேரிடையான குறைகளை கேட்டறிந்து அவர்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். 6 சட்டமன்ற தொகுதியிலும் ஜிம்னாஸ்டிக் உடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர் நலனின் அக்கறை எடுத்துக் கொள்ளப்படும். இந்த பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்று தான். இந்த சண்முகம் பணம் சம்பாதிக்கவோ, சொத்து சேர்க்கவோ எம்.பி தேர்தலில் நிற்கவில்லை. எதிர்கட்சியில் அப்படியா? 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒரு கட்சியின் பொதுசெயலாளராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தவர் வேலூர் தொகுதிக்கு என்ன சாதித்தார் என்பதை உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.

முதுநிலை பள்ளி படிப்புகளில் இருக்கும் 6 சட்டமன்ற தொகுதியில், தொகுதிக்கு 100பேர் வீதம் 600 பேருக்கு இலவச கல்வி அளிப்பேன். இந்த கல்வியாண்டில் இதுவரை வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 470 பேருக்கு இலவச கல்விக்கு அட்மிஷன் கொடுத்திருக்கிறேன். மீதி இருக்கும் காலி இடங்கள் தேர்தல் முடிந்ததும் நிரப்பப்படும். 7கோடி ரூபாய் கல்விக்கென ஒதுக்கி இருக்கிறேன். இந்த இலவச அட்மிசன்கள் எல்லாம் தற்போதைய தேர்தலுக்காக செய்யவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக செய்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

ஒரு பள்ளிக்கூடத்தில் கட்டிடம் இல்லை. புது கட்டிடம் கட்டித் தர சொல்லி கேட்டார்கள். 2கோடி செலவு செய்து கட்டிடம் கட்டி கொடுத்தேன். கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தான் திறந்து வைத்தார். சந்தேகமிருந்தால் 4மாதத்திற்கு முன்பு வந்த தினதந்தி பேப்பரை பாருங்கள். ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பள்ளிக்கு 4கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டியுள்ளேன். இந்த தேர்தல் முடிந்ததும் அதை அமைச்சர் செங்கோட்டையனே திறந்து வைப்பார். மொத்தம் 6கோடி மதிப்பிலான கட்டிடங்கள். இத்தனை புள்ளி விவரங்களுடன் எதிர்கட்சியில் இருப்பவர்கள் பேசமுடியுமா? இல்லை துரைமுருகன் தான் நான் தொகுதிக்கு இதை செய்து இருக்கிறேன் என்று சொல்வாரா?

வாணியம்பாடி நியூடவுனில் 40டாக்டர்கள் கொண்டு மருத்துவமுகாம்களை நடத்தி இருக்கிறேன். கிட்டத்தட்ட 5லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து மாத்திரைகள் முகாமில் இலவசமாக கொடுக்கப்பட்டது. இதுவரை வேலூர் தொகுதியில் 8மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறேன். 11000 பேர் பயன் அடைந்து இருக்கிறார்கள். 220 பேருக்கு பலதரப்பட்ட ஆப்ரேஷன்கள் செய்து உள்ளோம். ஆம்பூர் அலுவலகத்தில் இருக்கும் போது ஒரு குடும்பம் வந்து கதறி அழுதார்கள். சிறு பெண்ணிற்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருந்தது. CMC மருத்துவமனையில் 5லட்சம் ஆகுமென்று சொல்லி இருக்கிறார்கள். ஏழைகள். பணத்திற்கு எங்கே செல்வார்கள்? உடனே எனது உதவியாளரை அழைத்து எனது சொந்த காரில் பெங்களூர் அனுப்பி 24மணி நேரத்தில் ஆப்ரேஷன் முடித்து அந்த குழந்தையை காப்பாற்றினேன். பொதுபணித்துறை அமைச்சராக இருந்தவர் இந்த மாதிரி ஒரு நிகழ்வை சொல்வாரா? எதாவது மக்களுக்கு செய்தால் தானே சொல்லுவார். தன் குடும்பத்திற்கு மட்டும் பணம் சேர்த்துக் கொண்டவரால் எதை சொல்ல முடியும். நான் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டன். கடைசி காலத்தில் இறந்தால் எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது என்று புரட்சிதலைவர் சொல்லி இருக்கிறார். பாவ புண்ணியங்கள் மட்டும் கூட வருமென்று சொல்லி இருக்கிறார். நான் புண்ணியத்தை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். பணம் ஒரு பொருட்டல்ல. அதன் மீது ஆசையும் இல்லை. பதவியில் அதிகாரத்தில் இல்லாத போதே சொந்த காசை போட்டு மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்றால் எம்.பி ஆனால் இன்னும் என்னென்ன செய்வேன் என்பதை யோசித்து பாருங்கள்.

அமைச்சர் செல்லூர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு கோவிலுக்கு 2கோடி ரூபாய் செலவில் மண்டபம் கட்டி, முடியும் தருவாயில் உள்ளது. தேர்தல் முடிந்ததும் அதற்கு திறப்பு விழா இருக்கும்.

17ஆண்டுகளாக ராஜராஜேஸ்வரி மருத்துவ கல்லூரியை நடத்தி வருகிறேன். 1300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை. 22 ஆப்ரேஷன் தியேட்டர்கள் கொண்டது. 110 ஐ.சி.யூ. இருக்கிறது. 100 டயாலிஸிஸ் மிஷின் வைத்து கிட்னி பாதிக்கப்பட்டு இருப்பவருக்கு இலவசமாக வைத்தியம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு இருதய ஆப்ரேஷன் செய்ய மூன்றிலிருந்து 6லட்சம் செலவாகும். அதை வெறும் 70000 (எழுபதாயிரம்) ரூபாயில் பொது மக்களுக்கு செய்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை ஒரு லட்சம் ஆப்ரேஷன்கள் செய்து முடித்து இருக்கிறோம். துரை முருகனோ இல்லை அவரது மகனோ சொந்த காசில் ஒரு லட்ச ரூபாய்.... ஒரு லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாக கூற முடியுமா?

சினிமா துறையில், நலிந்த நடிகர்/நடிகைகளுக்கு 1000 பேருக்கு மாதாமாதம் பென்ஷன் வழங்கி கொண்டு இருக்கிறேன். நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் நடத்தும் அகரம் பவுண்டேஷனில் வருடத்திற்கு 30 பொறியியல் படிப்பிற்கான இடங்களை வழங்கிக் கொண்டு இருக்கிறேன். இதையும் இந்த தேர்தலுக்காக செய்யவில்லை. கடந்த பத்தாண்டுகளாக செய்துக் கொண்டு தான் இருக்கிறோம். எங்களது கல்லூரியில் படிக்கும் சுமார் 1800 மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கிக் கொண்டு வருகிறோம்.

ஆகவே, பொதுமக்கள் சிந்தித்து வாக்களியுங்கள். சொந்த காசை போட்டு செலவு செய்பவன் வேண்டுமா? பதவியில் அமர்ந்து சம்பாதித்து தன் குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் நபர் வேண்டுமா?

சிந்தித்து வாக்களியுங்கள். இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவோமென கூறி விடை பெறுகிறேன் என்று உரையை முடித்தார்.

பரப்புரையில் ராஜ்யசபா எம்.பி. முகமது ஜான் மற்றும் மாநில அமைச்சர் நிலோபர் உடனிருந்தனர்.

Related Articles