வெளியிடப்பட்ட நேரம்: 16-Apr-2018 , 03:27 PM

கடைசி தொடர்பு: 16-Apr-2018 , 03:28 PM

வெண்ணிலா எனும் தேவதை - பாகம் - 1

images (13)

தன் பாட்டி இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி ஆகிறாள் வெண்ணிலா. பாட்டி இறந்த துக்கத்தை விட இன்னொரு விஷயமும் அவளுக்கு அதிர்ச்சி மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு அந்த ஊருக்கு போக வேண்டுமே.? அதை நினைத்து தான் அவளது கவலை..

எப்படி என்றாலும் தவிர்க்க முடியாதே போய்தான் ஆகவேண்டும் கிளம்ப ஆயத்தமாகிறாள். தன் கணவனுக்கு தகவலை செல்போனில் "நீங்கள் ஆஃபீஸ் முடியவும் அப்படியே வந்துடுங்க நான் முதலில் கிளம்புகிறேன்" என்று கூறி விட்டு தன் ஆறு வயது மகளை அழைத்துக் கொண்டு காரில் புறப்படுகிறாள்.

வெண்ணிலா வின் பாட்டி ஊர் மதுரைக்கு அருகில் ஒரு சிறு கிராமம். கிராமம் என சொல்ல முடியாது எல்லா வசதியும் உள்ள கிராமம். திருமணம் ஆகி வந்தது சென்னை.. அப்பா ஊர் மதுரை.. காரில் செல்லச் செல்ல நினைவுகள் பத்து வருடங்களுக்கு முன் செல்லும் நினைவுகளை அவளால் தடுக்க முடியவில்லை...

அப்பொழுது தான் பள்ளியில் விடுமுறை விட்டு தன் பாட்டி வீட்டுக்கு வந்த நேரம். அடிக்கடி வருடத்திற்கு நாலு, ஐந்து முறை வருவது தான் ஆனால் இந்த முறை 'வெண்ணிலா' பணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை முடித்து விட்டு வந்திருக்கிறாள். எப்பொழுதும் வந்தால் ஒரு வாரம் தான் பாட்டி வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை இரண்டு மாதங்களாவது இருப்பதற்கு அவளுடைய அப்பாவிடம் கெஞ்சி,கொஞ்சி அனுமதி வாங்கியாகி விட்டது.

வந்ததும் முதல் வேலையாக தன்னுடைய மாமா சந்திரன் வீட்டில் இருக்கும் மாமா மகள் தேவியை காணச் செல்கிறாள். அங்கு வந்தது அதற்காக மட்டுமல்ல தன்னுடைய அத்தான் சத்யாவை பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளவே. இரண்டு வருடங்களாக அவனை பார்க்க முடிவதே இல்லை. இன்ஜினியரிங் படிப்புக்காக சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். இவள் லீவுக்கு வரும் போது அவன் வருவதில்லை.

சிறு வயதில் இருந்தே வெண்ணிலாவிற்கு சத்யா மேல் ஒரு வித அன்பு உண்டு. இந்த இரண்டு வருடத்தில் தான் அதை காதல் என உணர்ந்தாள். அவனுக்கும் தன்மீது காதல் உள்ளதா என எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இந்த முறை பாட்டி வீட்டில் இரண்டு மாதம் தங்க முடிவெடுத்து தான் அப்பாவுடன் பர்மிசன் வாங்கியதே..

தேவிக்கும் வெண்ணிலாவுக்கும் ஒரே வயது தான். அவளிடம் எப்படி சத்யாவை பற்றி கேட்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவளாகவே ஆரம்பித்து விட்டாள். தன் அண்ணனை பற்றி "ஏய் நிலா எக்ஸாம் எப்படி எழுதிருக்க?, நான் ஏதோ ஒரு அளவுக்கு எழுதிட்டேன். என்னோட அண்ணன் ரெண்டு நாளில் ஊருக்கு வரான் செமஸ்டர் ஆரம்பிக்க போகுதாம்".

சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்த ஆசையை அடக்கிக் கொண்டு.. "ஓ அப்படியா பார்த்து ரொம்ப நாளாச்சு அத்தான் எப்படி இருக்கார்?"..

"அவருக்கென்னடி குறை? ஜாலியா ஹாஸ்டல்ல அப்பா, அம்மா தொல்லை இல்லாம இருக்கார். இஷ்டத்துக்கு ஊர் சுத்தலாம், சினிமா போகலாம். இங்க இந்த குட்டி கிராமத்தில் அப்படியா?எங்க போனாலும் தெரிஞ்சுடும் அப்பாகிட்ட சொல்லிட்டு போனாலும் யாராவது அப்பாகிட்ட வந்து உங்க பொண்ண அங்க பார்த்தேன், இங்க பார்த்தேன்னு கேட்கிறாங்க. நிம்மதியா எங்கேயும் போக முடியல"

"சரி விடுடி அதான் லீவு விட்டாச்சுல தினமும் எங்கேனாலும் போகலாம் மாமாகிட்ட நான் பர்மிசன் வாங்குறேன். மாமாக்கும் அத்தைக்கும் செல்லம் நான். நான் என்ன கேட்டாலும் மறுக்க மாட்டாங்க இந்த ஊரை ஒரு வழி பண்றோம்.

நாம" தேவிக்கும் சந்தோஷம் தாங்கவில்லை வேகமாக தலையாட்டி 'ஹே' என சத்தமிடுகிறாள். வெண்ணிலாவுக்குள்ளும் இப்பொழுது ஏகபட்ட சந்தோஷம். தனக்கு வேண்டிய தகவலும் கிடைத்தது. அத்தான் வரவும் அவரிடம் இந்த முறை அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என மனதில் நினைத்தபடியே பாட்டி வீட்டிற்கு திரும்பினாள்..

தொடரும்....

-ஆனந்தி

Related Articles