வெளியிடப்பட்ட நேரம்: 02-May-2018 , 12:15 PM

கடைசி தொடர்பு: 02-May-2018 , 01:02 PM

வெண்ணிலா எனும் தேவதை - பாகம்-12

images (13)

சத்யா அன்று முழுவதும் குழப்பத்துடன்  தான் இருந்தான். அவசரப்பட்டு காதலைச் சொல்லி வெண்ணிலாவின் மனதையும் கெடுத்து விட்டோமோ என நினைத்தான். சொன்ன பிறகு சிந்திக்கக் கூடாது அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.


முதலில் மாமா என்ன ஐடியாவில் இருக்கார்னு தெரிஞ்சுக்கனும். என்ன பண்ணலாம் அதற்கு என யோசித்தான்.  சிவாவிடம் பேசினால் எதாவது ஐடியா கிடைக்கும் என நினைத்தான். எப்படியும் நேற்று நடந்த விசயம் எல்லாம் இப்ப வெண்ணிலா சொல்லிருப்பா. அதனால புதுசா விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைத்தான்.


பாட்டி வீட்டில் பேச முடியாது என நினைத்தான். ஆகவே தன்னுடைய வீட்டில் இருந்து சிவாவிடம் பேசிவிட்டு வர வேண்டும் என நினைத்துக்கொண்டு பாட்டியிடம் மட்டும் ரகசியமாக இதைப் பற்றி சொல்லி விட்டுச் சென்றான்.


வீட்டிற்கு போனதும் தன்னுடைய மொபைலில் சிவாவை அழைத்தான். ஃபோனை எடுத்ததும்  சிவா "உங்களிடம் தான் பேசனும்னு நினைத்தேன் நீங்களே கால் பண்ணிட்டீங்க"  என்றான்..

"ஓ என்ன விசயம் சொல்லு சிவா நானும் உன்கிட்ட பேசனும்"


"வெண்ணிலாவை பற்றி தான் பேசனும்னு  நினைச்சேன். அவங்க அப்பா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தீவிரமா மாப்பிள்ளை பார்க்கிறார். அதற்காக தான் அவளை அங்க அனுப்பி வச்சது. ஏதோ நல்ல சம்பந்தம் வந்திருக்காம். ஆஸ்திரேலியா மாப்பிள்ளைனு கேள்விப்பட்டேன். நேத்து தான் எனக்கு முழு விவரமும் ஆன்டி சொன்னாங்க. அவங்களுக்கு இதில் விருப்பம் இல்லை. வெண்ணிலாவை எப்படியாவது காலேஜ்க்கு அனுப்பனும்னு முடிவுல இருக்கறதா சொன்னாங்க.


இதை கேட்டதுமே அதிர்ச்சியாக இருந்தது சத்யாவிற்கு. சற்று நேரம் என்ன பேச என்று புரியவில்லை. சிவா இரண்டு தடவை "சத்யா இருக்கீங்களா?" என கேட்ட பிறகு தான் சுதாரித்தான்.


"ஏன் மாமா இவ்வளவு அவசரமா மாப்பிள்ளை பார்க்கிறார். எதாவது காரணம் இருக்கனும் சிவா. என்னனு எதாவது உனக்கு தெரிஞ்சதா".?


"போன மாசம் அங்கிளோட ப்ரண்ட் ஒருத்தர்  சூசைட் பண்ணி இறந்துட்டார். அதில் இருந்தே அவர் கொஞ்சம் அப்செட் ஆன மாதிரி தெரிஞ்சது. அதனால தான் இருக்கனும்னு நினைக்கிறேன் சத்யா"


"ஓ அப்படியா.! எதனால் அந்த முடிவு சிவா.?  ஏதோ வெண்ணிலா கூட சொன்னா பொண்ணு லவ் மேரேஜ் பண்ணி ஓடிருச்சுனு அதுவா"..?


"ஆமாம் சத்யா ஆனா அது வெண்ணிலாவுக்கு சொன்னது. உண்மை அது இல்ல".


"என்ன நடந்ததுனு சொல்லு சிவா எனக்கு இன்னைக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி தர"...


"சொல்றேன் சத்யா. ஆனா வெண்ணிலா கிட்ட சொல்லிடாதிங்க, அங்கிளோட ப்ரண்ட் பொண்ணை போன வருசம் திருச்சில ஒரு காலேஜ்ல ஆசையா ஹாஸ்டலிலும் சேர்த்து விட்டு வந்தாங்க. அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கும் நல்லா பேசுவாங்க எல்லாரிடமும் அடிக்கடி வெண்ணிலா வீட்டிற்கு பக்கத்தில் தான் அவங்க அத்தை வீட்டிற்கு  வரும் போது, போகும் போது பார்த்து பழகிருக்கோம்.


முதல்ல இரண்டு மாசத்திலேயே அந்த அக்கா நான் காலேஜ் போகலைனு வந்துட்டாங்க ஆனா வீட்டில் பீஸ் கட்டினது எல்லாம் வீணாய்டும்னு சத்தம் போடவும் பயந்து ஹாஸ்டல்க்கு போய்டாங்க. அங்க சீனியர் பொண்ணுங்க மோசமான ரேகிங் பண்ணிருக்காங்க இந்த அக்காவ ஹாஸ்டல்ல வச்சு. பொருத்து பொருத்து பார்த்து வார்டன், பிரின்ஸிப்பல் எல்லாரிடமும் கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்க போல. அந்த பொண்ணுங்க வசதியான பார்ட்டி அதனால் யாருமே இவங்க கம்ப்ளைண்ட பெருசா எடுத்துக்கலை. ஆனால் அந்த பொண்ணுங்க இன்னும் அதிகமா டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் அந்த அக்கா சூசைட் பண்ணிக்கிட்டாங்க காலேஜ்லயே.


ஆனா லவ் பெய்லியர்னு அந்த சீனியர் கதை கட்டி விட்டுட்டாங்க. கேசும் போட முடியல.  அந்த அவமானத்தில் தப்பு பண்ணின அவங்களையும் ஒன்னும் பண்ண முடியலைனு ஆதங்கத்தில் அந்த அக்காவோட அப்பாவும் சூசைட் பண்ணிகிட்டார். அங்கிள்க்கு ரொம்ப க்ளோஸ் ஃபிரண்ட் இறந்தவர். அதான் அவரால தாங்கிக்க முடியல. அந்த பாதிப்பு தான் வெண்ணிலாவை காலேஜ் அனுப்ப பயப்படுறார்"


இதை கேட்டதும் சத்யாவிற்கு எல்லாம் புரிந்தது மனதும் கஷ்டமாக இருந்தது இறந்த அந்த பெண்ணை நினைத்து. என்ன பேச என்று தெரியவில்லை. ஓகே சிவா இனி என்ன பண்றதுனு யேசிச்சுட்டு நாளைக்கு நான் கால் பண்றேன். நான் பேசினது எதுவும் வெண்ணிலாவிற்கு தெரிய வேண்டாம்"  எனக் கூறிவிட்டு போனை வைத்தான். பெண்ணைப் பெற்ற ஒரு தந்தையின் மனது என்ன பாடுபடும் என சிந்தித்தான்.


இப்பொழுது ஒன்றுக்கு இரண்டு விசயம் மனதை அழுத்தியது.. முதலில் வெண்ணிலாவின் கல்யாண பேச்சை நிப்பாட்ட வேண்டும். அடுத்து அவள் படிக்க ஏற்பாடு பண்ண வேண்டும். கடைசியாக அவர்களின் காதலும் சரியாகிவிடும் என முடிவெடுத்தான் சத்யா.


- ஆனந்தி


முந்தைய பதிவினை வாசிக்க இங்கே சொடுக்கவும் :


 https://kalakkaldreams.com/vennila-enum-thevathai-by-ananthi-part-11/

Related Articles