வெளியிடப்பட்ட நேரம்: 03-May-2018 , 11:08 PM

கடைசி தொடர்பு: 03-May-2018 , 11:08 PM

வெண்ணிலா எனும் தேவதை - பாகம்-13

images (13)

இது எதும் தெரியாத வெண்ணிலாவை நினைத்துப் பார்த்தான் சத்யா. தனக்கு கல்யாணம் பண்ண அவளுடைய அப்பா முயற்சிப்பது தெரிந்தாள்?. அதுவும் நேற்று தான் என்னுடைய காதலையும் தெரிவித்த நிலையில், அவள் இப்பொழுது இருக்கும் மகிழ்ச்சியும், குதூகலமும் நிச்சயம் மறைந்து போகும். அவளின் துரு துரு பார்வையும், பொலிவான முகமும், சிரிக்கும் கண்கள்.... அதில் கண்ணீரை காணும் சக்தி நிச்சயம் சத்யாவிற்கு இல்லை.

ஒரு வேளை தன்னுடைய காதலை சொல்லாமல் இருந்தால் கூட அவள் கொஞ்சமேனும் சம்மதித்திருப்பாள். ஆனாலும் இந்த வயதில் வெண்ணிலாவிற்கு திருமணமா? நினைக்கவே அவன் மணம் வலித்தது... இன்னும் கல்லூரி வாழ்க்கை அதில் கிடைக்கும் நட்புக்கள். பள்ளி வாழ்க்கையை விட கல்லூரியில் கிடைக்கும் அனுபவம், அந்த சந்தோசம், எப்படியும் எதாவது கலை நிகழ்ச்சி அதில் கலந்து தன்னுடைய தனித் திறமையை நிரூபிப்பது. பள்ளிகளை விட காலேஜில் தான் மனதும் கொஞ்சம் பக்குவம் அடையும் தைரியம் வரும்.

பள்ளிகளில் எப்படியும் டீச்சரோ, வாத்தியாரோ அவர்கள் சொல்வதை மட்டும் தான் செய்ய முடியும். ஆனால் காலேஜ் வாழ்க்கை அப்படி இல்லை. தனியாக முடிவெடுத்து ஒரு போட்டியோ டான்ஸோ எதிலும் கலந்துக்கலாம். தன்னம்பிக்கையும் வளரும். எதிர் காலத்தில் திருமணத்திற்கு பிறகும் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் உதவும். ஆனால் இந்த வயசிலேயே திருமணமா? சத்யாவால் அவனுடைய மனதை சமாதானபடுத்த முடியவில்லை.

சிவாவிடம் பேசியதும் அதிர்ச்சி மற்றும் யோசனையில் அப்படியே நேரம் போவது தெரியாமல் அங்கேயே அமர்ந்து விட்டான். தேவியும், வெண்ணிலாவும் சத்யாவை காணவில்லை என தேடிக்கொண்டு சத்யாவின் வீட்டிற்கு வந்தனர். சத்யா ரூமில் பலத்த யோசனையில் அமர்ந்திருந்தான். "எந்த கோட்டைய பிடிக்க இந்த யோசனை"என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் தேவி. சத்யா சுதாரித்து இல்லடி ஃபிரண்ட் கால் பண்ணினான். அதான் அதை பத்தி யோசிச்சுட்டு உட்கார்ந்துட்டேன்.

ரொம்ப நேரம் ஆச்சு போல டைம் பார்க்காம உட்கார்ந்துட்டேன். சரி வாங்க போகலாம் பாட்டி தேடிருப்பாங்க. அதான் நீங்களே வந்துட்டீங்க போல.

"ஆமா அத்தான் மதியம் மூனு பேரும் தியேட்டர்க்கு போகலாம்னு நினைச்சோம். சாப்பிட்டு கிளம்பினா சரியா இருக்கும்".என வெண்ணிலா கூறினாள். அவள் முகத்தில் தவழ்ந்த சந்தோசத்தை பார்த்ததும் சத்யாவிற்கு மனதை என்னவோ செய்தது. குழந்தை போல் இருக்கும் இவளை திருமணம் பண்ணி வைக்க எப்படி மனசு வந்தது இந்த மாமாவிற்கு என கவலை கொண்டான்.

கவலையை முகத்தில் வெளிக்காட்டாமல்,
"என்ன படம் போட்ருக்காங்க. இந்த ஊரில் இருப்பதோ ஒரே தியேட்டர். அதுவும் ரிலீஸ் ஆகி ஆறு மாசம் கழிச்சு தான் இங்க வரும். ஆனா நான் காலேஜில் இருக்கும் போதே எல்லா படமும் பார்த்துட்டேன். உங்களுக்காக மறுபடியும் வரேன்" எனக் கூறினான். வெண்ணிலா "நானும் ஊர்ல பார்த்துட்டேன். ஆனாலும் நம்ம ஊர்ல ஒரு தடவை பார்க்கனும்னு ஆசை. நான் தான் கேட்டேன் அத்தான்" என்றாள்.

"ஸ்கூல் லீவுல அதனால ரஜினி நடிச்ச சிவாஜி படம் போட்ருக்காங்க" என்றாள் தேவி. "சரி போகலாம். சங்கர் படம் தானே மறுபடியும் பார்க்கலாம். வாங்க சாப்பிட்டு கிளம்புவோம். வழக்கம் போல குறுக்கு பாதைல நடந்து தானே போகனும்" என கேட்டான். ஆமா ஆமா என ரெண்டு பேரும் கோரசாக கத்தினர்.

இருவரின் சந்தோசமும் சத்யாவையும் தொற்றிக் கொண்டது. தற்போதைக்கு வெண்ணிலாவின் பிரச்சனையை ஒதுக்கி வைத்து விட்டு அவர்களின் சந்தோசத்தில் இணைந்து கொண்டான். சந்தோசமாக பேசிக்கொண்டே சினிமாவிற்கு குறுக்குப்பாதையில் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். படம் பார்க்கும் போதே இரண்டு யோசனை தோன்றியது சத்யாவிற்கு அதை இரவு சிவாவிடம் பேசி முடிவு பண்ண வேண்டும் என நினைத்தான்.

ஒன்று அம்மா, அப்பாவிடம் தன் காதலையும், வெண்ணிலாவின் அப்பாவின் பயத்தையும் சொல்லி தனது அப்பாவை மாமாவிடம் பேச வைப்பது, இன்னொன்று அத்தையிடம் அதாவது வெண்ணிலாவின் அம்மாவிடம் மட்டும் சிவாவும் இவனும் சேர்ந்து தன்னுடைய காதலைச் சொல்லி, இப்போதைக்கு படிக்க வைக்க வேண்டியது. அதற்குள் தனது படிப்பபை முடித்து எப்படியாவது ஒரு நல்ல வேலையில் அமர்ந்து குடும்பத்துடன் சென்று மாமாவிடம் பெண் கேட்பது. என ஒரு முடிவுக்கு வந்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தான் சத்யா.

வீட்டிற்கு வந்ததும் பாட்டியிடம் எல்லா விசயத்தையும் தனது யோசனையையும் கூறினான். பாட்டியிடமும் யோசனை கேட்டான். "என்னோட காதல் கூட இப்ப முக்கியமில்லை. பாட்டி வெண்ணிலாவை படிக்க வைக்கனும் நல்லா படிக்கிற பொண்ணு அவ தேவி வயசுதான அவளுக்கும் 18 வயசுல என்ன தெரியும்னு இந்த மாமா இப்படி ஒரு முடிவு எடுத்தார். நம்ம ஊர்ல இருக்கவங்க கூட இப்ப பொண்ணுகள படிக்க வைக்கனும்னு நினைச்சு சென்னை வரை கூட தைரியமா அனுப்புறாங்க. இவர் ஏன் இப்படி இருக்கார்.? என புலம்பி தீர்த்தான். பாட்டியும் இப்பொழுது சத்யாவுடன் சேர்ந்து கவலைபட ஆரம்பித்தார். மனதிற்குள் எப்படியாவது இந்த கல்யாண ஏற்பாடை நிறுத்தனும் என நினைத்துக்கொண்டார்.

-ஆனந்தி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

https://kalakkaldreams.com/vennila-enum-thevathai-by-ananthi-part-12/

Related Articles