வெளியிடப்பட்ட நேரம்: 18-Apr-2018 , 07:00 AM

கடைசி தொடர்பு: 17-Apr-2018 , 11:27 PM

வெண்ணிலா எனும் தேவதை - பாகம்-3

images (13)

வெண்ணிலா அம்மாவின் மொபைலை வாங்கிக்கொண்டு சிவாவிடம் தன் அத்தான் வருவதைப் பற்றி சொல்வதற்கு கிளம்புகிறாள்.

சிவாவும், வெண்ணிலாவும் நல்ல நண்பர்கள். பள்ளியில் படிக்கும் போது பாடத்தை பற்றிய சந்தேகம் வராத நாட்களில் நோட்ஸ் எடுப்பது. அது மட்டும் அல்ல தனக்கு பிடித்த விஷயங்கள், சினிமா, பாட்டு, ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் ப்ளேயர்ஸ் பற்றி எல்லாம் இவர்கள் பேசாத கதை இல்லை.

சிவாவிடமும் தினமும் இவள் சத்யாவை பற்றி பேசாத நாள் இல்லை என்றே சொல்லலாம் இருவரும் ஆறாம் வகுப்பில் இருந்தே இப்படித்தான். இப்படி ஒரு ப்ரண்ட் இல்லையேனு இருவரிடமுமே வந்து சொன்னதுண்டு அவர்களுடைய மற்ற நண்பர்கள்.

சத்யாவை பற்றி பேசினால் என்றாள் அவனிடம் சண்டை போட்டது, அடி வாங்கியது தான் அதிகம். நிலா என்ன செய்தாலும் கிண்டல் பண்ணுவதும், அவளை அழ வைத்தது இல்லை. அவளை வெறுப்பேத்துவதே சத்யாவின் வேலை.

ஊரில் இருக்கும்போது நடந்த சிறு சிறு சண்டைகளை பற்றி சிவாவிடம் சொல்லி சந்தோஷப்படுவாள்.
சிவா ஒருநாள் நிலாவிடம் கேட்டுருக்கிறான் "ஒரு நாளாவது அந்த சத்யா பத்தி பேசமா இருக்கியா? கேட்டுக் கேட்டு பொறாமையா இருக்கு எனக்கு" அதற்கு நிலா சிரித்துக் கொண்டே சொல்வாள் "ஊரே நம்ம நட்ப பார்த்து பொறாமை படுது நீ என் சத்யாவ நினைச்சு

 

 

பொறாமைப்படுறீயா? பார்த்தீயா என் சத்யாவா? இருக்கட்டும். என்னைக்கா இருந்தாலும் இந்த சிவா ஹெல்ப் தேவைப்படும் அப்ப இருக்கு உனக்கு....என்று மிரட்டுவான்.

ஊருக்கு வருவதற்கு முன் சிவாவை பார்க்க சென்ற போது தன் பயத்தை அவனிடம் கூறுகிறாள்...

"ஏன் சிவா இந்த சத்யா என்னை லவ் பண்ணலைனா என்ன செய்றது?"

"கவலைய விடு நிலா ஆள் வச்சு கடத்திட்டு வந்திடலாம். உன்னை எவனாவது வேணாம்னு சொன்னா அவனுக்கு கண் இல்லாம இருக்கனும் இல்ல அவன் மனுச பிறவியா இருக்கமாட்டான்" அழகு மட்டும் இல்ல வெண்ணிலா நீ உன்னை மாதிரி பொறுமைசாலி, பழகிட்டா யாரையும் விட்டுக்கொடுக்காத குணம் இதுவரை எந்த பொண்ணுங்க கிட்டயும் பார்த்ததில்லை."

"அய்யோ சாமி விடு.. விட்டா இன்னும் ஒருமணி நேரம் இப்படியே பேசுவ, நான் கிளம்பறேன். இல்ல அப்பா திடீர்னு மனசு மாறி ஊருக்கு போகதா பெங்களூர் போறீயான்னு" ஆரம்பிப்பார்.

சிவாவிடம் போனில் ஊருக்கு வந்ததை கூறிவிட்டு அத்தான் வருவதையும் சொல்லவும், சிவா "அப்ப இன்னும் ரெண்டு நாளில் என்னை மறந்துட்டு சத்யா சத்யானு கிடக்கப்போற அப்பப்ப என்னையும் ஞாபகம் வச்சுக்கோமா" என்று சீண்ட வெட்கத்தில் முகம் சிவக்கிறாள் வெண்ணிலா.

"பாட்டி வீட்ல சாப்பிட்டு தூங்கி சாப்பிட்டு அடையாளம் தெரியாம குண்டாகி வந்து நிக்கப்போற நான் அப்பறம் குண்டூஸ்னு தான் கூப்பிடபோறேன்."

"போ சிவா, நான் பக்கத்தில் இல்லாத தைரியத்தில பேசுற வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்." அந்த சமயம் தேவி வருகிறாள்

"என்னடி உன் ப்ரண்ட் சிவாகிட்ட அப்டேட் பண்ணலைனா உனக்கு தூக்கம் வரேதே" என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறாள்.

"நல்ல ப்ரண்ட்டி உனக்கு".. சிவா போனில் தேவியின் குரல் கேட்கவும் "உன் நாத்தனார் வந்தாச்சு உன்னோட சத்யா... பத்தி விசாரி தேவி வாலுவ கேட்டதா சொல்லு நான் கால் கட் பண்றேன் நான் நாளைக்கு கால் பண்றேன் " சிவா சொன்ன என்னோட சத்யா என்ற அழுத்தத்தில் மேலும் வெட்கப்பட்டுக் கொண்டு அவனை எரும போட என்று திட்டவும் அந்தபக்கம் சிவா சிரித்துக் கொண்டே போனை வைத்துவிடுகிறான்.

தேவியும் வெண்ணிலாவும் நாளையில் இருந்து எங்கு போகலாம் என்ன பண்ணலாம் என்று டிஸ்கஷனில் மூழ்கிவிடுகின்றனர்...

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

https://kalakkaldreams.com/vennila-enum-thevathai-by-ananthi-part-2/

- ஆனந்தி

Related Articles